Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

சுல்தானும் செனடாப் சாலையும் – பிரதிக் முரளி

1792ல் ஆங்கிலேயரே நடக்காது என்று நினைத்தது நடந்தது. கார்ன்வாலிஸ், திப்புவின் கதை முடித்த தருணம் அது. போரில் வெற்றி கண்ட பின், திப்புவின் நாட்டிற்கு பல கிடுக்கிப்பிடிகள் கொடுத்து படிய வைத்தான் அவன். திப்புவின் மீது ஆறு கோடி அபராதம் விதித்து (பிறகு இது 3.3 கோடியாக குறைக்கப்பட்டது) ஒரு ஒப்பந்தம் தயாரானது. அந்த ஒப்பந்தத்தில்…

சியோல் கொரியப் போர் நினைவகத்தில் இந்தியக் கொடி – பொற்செல்வி ஜெயபிரகாஷ்

“தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்தத் தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த எங்கள் மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப் படுத்துகிறது”. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரியப் போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளே இவை. 2014ம் ஆண்டு, தென் கொரியாவில் இருந்த எங்கள் மகள் மாப்பிள்ளையைப்…

துங்கபத்தரை ஆற்றங்கரைப் பயணம் – Ar. ரா. வித்யா லட்சுமி

ஹம்பி மரபு முகம் முடிந்து அடுத்த நாள் காலை விஜயநகரப் பேரரசின் இன்றைய ஹம்பியை சுற்றி ஒரு சிறிய நடை போகலாம் என்று விடுபட்ட சில இடங்களை மட்டும் பார்க்கவேண்டி கிளம்பினோம். காலை ஆறு மணி இருக்கும், கேமரா, கொஞ்சம் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு, விருபாக்க்ஷா கோவிலிற்கு எதிரில் இருக்கும் சந்தையையும், ஒற்றை கல்லில் செய்த…

எங்கள் வீட்டுக் கொலு கொலு அமைப்பு: Ar. கார்த்திக் மகாலிங்கம்

தனது வீட்டில் இவ்வாண்டு நவராத்திரி விழாவினை முன்னிட்டு அவர் அமைத்துள்ள கொலுவினைக்கான நமது இதழின் வாசகரும், கட்டடக்கலை நிபுணருமான, திரு. கார்த்திக் மகாலிங்கம் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் உள்ள அவரின் அழைப்பை ஏற்று சென்ற வாராம் ஒரு நாள் கொவிலம்பாக்கதில் உள்ள அவரது வீட்டில் வைத்திருந்தக் கொலுவினைக் காணச்…

சோழர்கால குந்தவை ஜீனாலயம் – A.T மோகன், சேலம்

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்து இருந்த திருமலை, குந்தவை ஜினாயலயம் மரபு நடைக்கு சென்று இருந்தேன். மிக மிக அருமையான ஏற்பாடு, காலை தேநீர் முதல் சிற்றுண்டி, மதிய உணவு என அனைத்தையும் நிர்வாகிகள் பிரகாஷ், பாலமுருகன், பிரேம்குமார் முதலானோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.இதில் அறிஞர் பெருமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என…

பேச்சிப்பாறை காணிக்காரர்கள் – 2 – K. வருசக்கனி

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றன. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்களைப் பற்றிய அறிமுகத்தை கடந்த இதழிலேயே விரிவாகக் கண்டோம். தகவல்தொடர்பு: தகவல் தொடர்புக்கு என தனியாக விளிகாணி எனும் அதிகார பதவி உள்ளது.…

சோழர் கால கோயம்பேடு – P. சரவணமணியன்

கோயம்பேடு சென்னையில் உள்ள மிக பிரபலமான ஒரு ஏரியா (சென்னை வழக்கில்) . பேருந்து நிலையம், மெட்ரோ, மார்க்கெட் என பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய கோயம்பேடு ஓர் பழமை வாய்ந்த இடம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த பழமை வாய்ந்த தகவல்களை கல்வெட்டு ஆதாரத்துடன் உங்கள் அனைவருடனும் பகிரும் ஆவலில் உருவானது இப்பதிவு.…

தமிழகத்தில் சமணம் – 2 சமணத் தடங்கள் மற்றும் தமிழ் கல்வெட்டுகள் – M. ஆயிஷா பேகம்

கி.மு 3-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைந்த சமண மதத்திற்கு புகலிடமாக மதுரை திகழ்ந்தது.இயற்கை அரண்களாக விளங்கும் மலைகளையும்,பாறைக்குன்றுகளையும் மதுரை பெற்றுள்ளதால் சமணர்கள் தாங்கள் வாழும் பகுதியாக இதனை தேர்ந்தெடுத்து இருக்கலாம். தமிழகத்தில் காணப்படும் தமிழ்-பிராமி கல்வெட்டுகளுள் 70மூமதுரையில் உள்ளது . தமிழ்நாட்டில் சமணத் தடங்கள் இருக்கும் இடங்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். 1) தொண்டை மண்டலம்…

கிரேக்க பாகவதன் – பிரதிக் முரளி

இன்றைய மத்திய பிரதேசத்தில், “பேஸ்” என்கிற கிராமம் அமைந்துள்ளது. இங்கு கிரேக்கனான “ஹீலியோடோரஸ்” என்பான் நிறுவிய கருடக்கம்பம் உள்ளது. மிகவும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட, பல சிந்தனைகளை தூண்டக்கூடிய வண்ணம் அவனது கல்வெட்டும் இந்த கம்பத்தில் கிட்டுகிறது. அதில்,கூறுவதாவது, “இந்த தேவதேவனான வாசுதேவனின் கருடதுவஜம், ஹீலியோடோரஸால் நிறுவப்பட்டது” என்பது. இவன் யார் ? காலம் யாது ?…

கீழ்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில் – ஆயிஷா பேகம்

வடமூலநாதர் என்று அழைக்கப்படும் ஆலந்துறையார் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், கீழ்பழுவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் இவ்வூர் உள்ளது. கீழ்பழுவூருக்கு செல்ல எண்ணற்ற பேருந்து வசதிகள் உள்ளன. கீழ்பழுவூரின் சிறப்பு அரியலூரில் அமைந்துள்ள, கீழ்பழுவூர் பல்வேறு வரலாற்று சிறப்புக்களை கொண்டுள்ள ஊராக திகழ்கிறது. இந்த ஊர் ஆலமரங்கள் நிறைந்திருந்த ஊராக விளங்கியதால்…