வண்ணக் காலணிகள் தயாரிக்கும் ரசாயன அறிவியலை அறிந்திருந்த தோல் பொருட்கள் செய்வோர்
கிருஷ்ணதேவராயர் எழுதிய ஆமுக்தமால்யதாவில், மால தாசரி என்ற வைணவ பக்தர், தோல் சட்டையை (தோல்குபுசம்பு) அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அய்யலராஜு நாராயணமத்யா எழுதிய தெலுங்குப் படைப்பான ஹம்சவிம்சதி, ஒரு மேய்ப்பர் அணிந்த தோல் சட்டை (தொலுக்குல்லாயி) பற்றிக் கூறுகிறது. டோமிங்கோ பாய்ஸ் என்ற…