Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

காவிரியின் அணைக்கட்டுகள்

காவிரியின் அணைக்கட்டுகள் : கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரிமீது கட்டப் பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என்று அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.…

தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடு புழங்கு பொருள்களும்

பழந்தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் குறித்தும் தொழிற்குடியினர் குறித்தும் சங்க இலக்கியங்கள் முதலான செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தொன்மையும் தனித்தன்மையும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தொழிற் குடிகளின் சமூகப் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. உழவுக் குடி, நெசவுக் குடி, தச்சர் குடி, கொல்லர் குடி, குயவர் குடி எனத் தொழில்முறையால் அடையாளப்படும்…

தியாகராய நகர், அன்றும் இன்றும்

தியாகராயர் பாண்டி பஜார் பகுதிக்கு தியாகராயா ரோடு என்று பெயர். அது பிட்டி தியாகராயச் செட்டியார் என்ற நீதிக்கட்சி தலைவர் நினைவாக வைக்கப் பட்டது. சிலர் எழுதுவது போல அவர் பி. டி தியாகராய செட்டியார் அல்ல, ‘பிட்டி என்பது தெலுங்குப் பெயர். தி. நகர் பற்றிய புத்தகத்தில் அவரைப் பற்றியும் பிற நீதிக் கட்சிப்…

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான மறைந்த தொ. பரமசிவன் எழுதிய 27 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகங்களுடன் அணிந்துரைகளும் மதிப்புரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரையில் மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் பற்றிய தரவும் பெண் தெய்வங்களின் பெயர் வழங்குவது பற்றிய தரவும் பலரும் அறியாதவை.…

கோவில்களும் பொருளாதாரமும்

கோவில்களும் பொருளாதாரமும் : பொருளாதாரத்தில் கோவில்களின் தாக்கம் பலவகைகளில்காணப்பட்டது. கோவில்களைக் கட்டுவதென்பதே ஒரு பெரிய பொதுநிறுவனமாக இருந்தது. பெரும்பாலான கோவில்கள், அரசராலும் அரச குடும்பத்தாலும் கட்டப்பட்டதால், அதிக அளவு அரசுப் பணம் அதில்செலவிடப்பட்டது. கோவில் கட்டும் பணி, திறமையான கொத்தர்கள்,சிற்பிகள், கைவினைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும். சாதாரணத் தொழிலாளர்களுக்கும் பெருமளவில் வேலை வாய்ப்பைப்பெற்றுத்தந்தது. கோவில்களுக்காகப் பஞ்சலோக விக்கிரகங்களைச்செய்து,…

முந்நூறு இராமாயணங்கள்

முந்நூறு இராமாயணங்கள் எத்தனை இராமாயணங்கள்? முந்நூறு? மூன்றாயிரம்? சில இராமாயண காவியங்களின் முடிவில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது: எத்தனை இராமாயணங்கள் இருந்து வருகின்றன? அதற்கு விடையளிக்க பல கதைகள் உலாவுகின்றன. அவற்றில் ஒன்று இங்கு. ஒரு நாள் இராமன் தன் அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அவனது மோதிரம் கீழே விழுந்தது. மண்ணைத் தொட்டதும், அந்த மோதிரம்…

இராமநாதபுரம் மாவட்டம்

அறிஞர் சோமலெ உலகம்-இந்தியா-தமிழ்நாடு என்றார் போல் முப்பெரும் பரிமாணங்களிலும் பயண நூல்களை எழுதி ‘தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை’ என்ற நிலைத்த புகழைப் பெற்றவர். பயண இலக்கியம். இதழியல், நாட்டுப்புறவியல், மொழி ஆய்வு, இனவியல் ஆய்வு. வாழ்க்கை வரலாறு குடமுழுக்கு மலர்கள். போன்ற துறைகளில், தமிழிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்…

வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும்

வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும் வேளாண்மை உற்பத்தியும் அதுசார்ந்த உழைப்புத் தேவையும்தான் பெருவாரியான மக்கள் திரளை மருத நிலத்தில் நிலையாகக் குடியிருக்கச் செய்திருக்கின்றன. பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகள், வாழ்நிலைகள், தொழில் பிரிவுகள், அரச உருவாக்கம் எனப் பல்வேறு சமூக உருவாக்கம் மருத நிலத்தில்தான் நடைபெற்றிருக்கின்றன. அதனால்தான், மருத நிலத்தில் மக்கள் குடியேறி…

இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்

நாட்டின் பெயராக அமைந்த ஊர்கள் பல பிற்காலத்தில் பிரமதேயமாகவும், நகரமாகவும் தேவதானமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. நாடுகளுக்கு பெயரிடுவதில் வேறு வகையும் இருந்திருக்கின்றன. அவை கூற்றம், வளநாடு, ஆற்றுப்போக்கு, குளக்கீழ் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற முறையில் இடம்பெற்ற பெயர்களாகும். ஆனால் நாடு, கூற்றம் போன்ற வழக்கமே அதிகளவில் இருந்திருக்கின்றன. குளகீழ், ஆற்றுப்போக்கு…

ஆலய நிர்மாணம்

ஆலய நிர்மாணம் நமது நாட்டில் சைவாகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம், தந்திரம் முதலியனவற்றை யொட்டியும் ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டோடு சைவ உபாகமங்கள் நூற்றுப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் அறுபத்துநான்காகும். பாஞ்சராத்ராகமங்கள் நூற்றெட் டென்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்ரமும், வைகானஸமுமாகும். குமாரதந்திரம் முதலிய தந்திர நூல்களை மேற்கொண்டு எழுந்த கோவில்களும் பல உள. இவை…