பிராமணர்

பிராமணர்

பிராமணர் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் பெற்றிருந்தனர் என்பதை அரசனால் வெளியிடப்பெற்ற செப்பேடுகளும் அரச ஆணையைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய அனைத்தையும் கற்றவர்களாக விளங்கிய பிராமணர்களுக்கு அரசர்களும் உயர்குடி நிலவுடைமையாளர்களும் கொடைகளை அளித்துப் போற்றி வந்தமையால் இவர்கள் சமூகத்தில் பொருளாதார நிலையிலும் மேம்பட்டவர்களாக வாய்ப்பு ஏற்பட்டது. பட்டர், பாப்பாரச்சான்றார், பிரமதேயக் கிழவர், பெருமக்கள்’ என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். மேலும் கிரமவித்தன்,”சோமயாசி, என்றும் கற்ற வேதத்தின் அடிப்படையிலும் அழைக்கப்பட்டனர். பண்டித சிரேஷ்டன்,பிராமணி சிரேட்டன் என்று கல்விச் செல்வத்தைப் பெற்று அதனைக் கரைகண்ட பிராமணர்கள் அழைக்கப்பட்டனர்.

மாறாத ஒரே நிலையையும் இரு பிறப்பையும் உடையவர்களாய் மூன்று தீயினையும் நான்கு வேதங்களையும் பேணி ஐந்து வேள்விகளை ஆற்றி அறுதொழில் செய்த அந்தணர், மறையோர் என்று இவர்கள் போற்றப்பட்டனர்.”

பிராமணர் அரசனுக்குத் தர்மத்தினைப் போதிக்கும் குருக்களாக விளங்கியுள்ளனர்.” அரசனுக்குச் சாசனத்தில் எழுத வேண்டிய சுலோகத் தினையும் ஆணையினையும் எழுதிக்கொடுத்தனர்.” அரசனுக்குச் சந்தி விக்ரகம் என்ற காரியங்களைச் செய்து மந்திரவோலை நாயகனாகவும் (உத்திரமந்திரி) பணிபுரிந்துள்ளனர்.” அரசனது ஆணையை நிறை வேற்றும் ஆணத்தியாகவும், நாட்டுக் காரியங்களை அவனிடம் எடுத்துக் கூறும் அலுவலர்களாகவும் பிராமணர் பணி செய்துள்ளார்.”அரசனிடத்து உயர்தொழில் புரிந்துள்ள அந்தணர்கள் பிரமஸ்ரீ, பிரமாதிராயன்” என்ற பட்டங்களைப் பெற்று விளங்கினர்.

பிராமணர் குலத்தில் பல உட்பிரிவுகள் இருந்துள்ளன. செப்பேடுகளும், கல்வெட்டுகளும் அவர்கள் பெயர்களோடு அவர்களது கோத்திரத்தையும், சூத்திரத்தையும் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. பிராமண குலத்துப் பெண்களைக் குறிப்பிடும்போது அவர்களது கோத்திரம் முதலிய உட்பிரிவுகள் குறிப்பிடும் வழக்கம் காணப்படு கின்றது.” பிராமணரில் ஒரு பிரிவினர் அரசியலில் ஈடுபட்டனர். மற்றொரு பிரிவினர் வேதங்களை ஓதி வேள்விகள் செய்து வேதக் கல்வியை வளர்க்கும் தொழில் செய்தனர். பிறிதொரு சாரார் கோயில் காரியங்களையும் சமயக் காரியங்களையும் மக்களது சடங்குகளையும் செய்து வந்தனர். இவர்களைத்தவிர வணிகம் போன்ற பிற தொழிலில் ஈடுபட்ட பிராமணர்களும் நாட்டில் இருந்தனர்.

வேத பிராமணர்

வேதக்கல்வியை வளர்த்து வந்த பிராமணர்களுக்காக ஏராளமான ஊர்கள் (பிரமதேயம்) தானமாகத் தரப்பட்டன. இவை தவிர இவர்களுக்குக் கோயில்களில் வேதம் ஓதுவதற்காக உணவு அளிக்கப்பட்டு அதற்கான கொடையும் அளிக்கப்பட்டன. மதுரைக்கு அருகிலுள்ள ஆனைமலை நரசிங்கப் பெருமாள்கோயிலில் முதற் பராந்தகச் சோழன் காலத்தில் வேத பிராமணர் ஐவர்க்கு முப்பது கலம் நெல் தானமாகத் தரப்பட்டுள்ளது.இதற்காக ஒருவருக்கு ஒரு நாழி அரிசி, மூன்று வகைக் காய்கறிகள், நாழி தயிர், இரு செவிடு நெய், வெற்றிலை பாக்கு ஆகியன அளிக்கப்பட்டன. இவர்கள் உண்பதற்காகத் தட்டுகளும் சமைப்பதற்காகப் அளிக்கப்பட்டன. செய்வதற்காகச் சமையல் பாத்திரங்களும் சமையல்காரன் ஒருவன் ஊதியத்திற்கு அமர்த்தப்பட்டான். சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் காலத்தில் அம்பாசமுத்திரம் திருமூலநாத சுவாமி கோயிலில் வேதம் ஓதுவதற்காக (முப்பத்திரண்டு ஆச்சையும் ஐஞ்சு வாரமும் ஓதி தானம்புக்கார்) வேத பிராமணர்க்கு நிலமளிக்கப்பட்டது. (நூலிலிருந்து)

பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400) – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 425/-
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/pandiya-naattu-samuthayamum-panbaadum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers