ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் காவல் நிர்வாகம் காவல்காரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலையாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தலையாரிகளும், காவல்காரர்களும், பொறுப்பாளிகள் ஆவர். ஏனைய தென்மாவட்டங்களிலும் இத்தகைய காவல்முறை வழக்கில் இருந்தது.

காவல்காரர்கள் மற்றும் தலையாரிகளுக்கு நிலக் கொடைகள் அல்லது நிலச்சுங்கவரி வருவாயின் ஒரு பகுதி, விவசாய உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட பங்கு அல்லது கிராம மக்களால் செலுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட கட்டணம்- விவசாயம் அல்லது வேறு இனம். ஊதியமாக வழங்கப்பட்டது. சில சமயங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் தான் செய்யும் வேலைகளைத் தலையாரிகள் செய்வதற்காக, குறிப்பிட்ட தொகையைக் காவலாளிகள்(பாளையக்காரர்கள்) ஆண்டுதோறும் தலையாரிகளுக்குக் கொடுத்துவந்தனர். இதன்மூலம் காவலாளிகள்

தங்களின் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். மேல் குறிப்பிட்ட காவல்காரர்கள் பற்றிய குறிப்புகள் செயின்ட்டேவிட் கோட்டை மற்றும் திருவந்திபுரம் ஜாகிர் (Jagir) ஆவணங்களில் காணப்படுகின்றன.

ஆட்சியாளர்களின் எதிரிகளால் ஏற்படும் இழப்புகள் மட்டுமின்றி, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கும் ‘பாளையக்காரர்கள்’ பொறுப்பாளிகளாக்கப்பட்டனர். ஒருசமயம், கெடில நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சொந்தமான விலை மதிப்புள்ள பருத்தித் துணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை பாளையக்காரர்கள் ஈடு செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலத்திலிருந்து வழக்கில் இருந்த காவல்முறை சரியாக செயல்படுத்தப்படாததால் அதன் தரம் குறையத் தொடங்கியது.1802 மற்றும் 1803-ஆம் ஆண்டுகளில் தென்னார்க்காடு, கம்பெனியின் ஆளுகையின்கீழ் கொண்டு வரப்பட்டபோது காவல்காரர்கள் முறை ஒழிக்கப்பட்டது. இதன் விளைவாக, இப்பகுதியில் பணியாற்றிய 260 காவல்காரர்களின் பதவிகள் பறிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகளும் (Land grants), ஊதியமும் திரும்பப்பெறப்பட்டன. எனினும் நன்னடத்தையை முன்னிட்டுச் சிலருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு தலையாரிகள் முறைசாரா ஊழியர்களாக வருவாய்த்துறையின்கீழ் கொண்டு வரப்பட்டனர். ஒவ்வொருவரும் இரண்டு வட்டங்களுக்குப் பொறுப்பான தரோகா என்றழைக்கப்பட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டனர். தரோகாவிற்கு உதவியாகத் துணைத் தரோகா (நயிப்கள்), தானாதார்கள் (ஜெமேதார்கள்) மற்றும் பெருநகரங்களில் கொத்தவால்களும் நியமிக்கப்பட்டனர்.°

1805-ஆம் ஆண்டு முறைப்படுத்தப்பட்ட காவல் பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவுதல் (Establishment) செலவு, 21,725 ஸ்டார் பகோடாக்கள் (Star pagodas) ஆகும். இதன் விளைவாகப் பதவி இழந்த காவல்காரர்கள் தங்களின் தேவைக்காக பழைய திருடர்களையும், கொள்ளைக்காரர்களையும் சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாயிற்று. பொதுமக்கள் மத்தியில் கொள்ளைக்காரர்கள் மற்றும் திருடர்களுக்குப் புகலிடம் அளிப்பதற்கும், மற்றும் குற்றவாளிகளால் பயனடைந்தவர்களுக்கும் எதிர்ப்புகள் ஏதும் இல்லாததால் காவல் சவாலாகவே இருந்தது.

1806-ஆம் ஆண்டு முதல் மாவட்ட நீதிபதி நியமனம் செய்யப்பட்டபோது, காவல் கண்காணிப்பு மாவட்ட நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 1816ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்டுப்பாட்டு அதிகாரம் XI-ன்படி, கட்டுப்பாட்டு அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டது. தாசில்தார்களும், கிராமத்தலைவர்களும், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பாளியாக்கப்பட்டனர்.”

காவல் துறை முறையாகச் சீரமைக்கப்பட்டபோது, காவல்காரர்கள் (பாளையக்காரர்கள்) மற்றும் தலையாரிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட காவலாளிகளின் வாரிசுகள், 1827-ஆம் ஆண்டு வரை கொத்தவால் என்று அழைக்கப்பட்டனர் . 1842-ஆம் ஆண்டுவரை இவர்கள் நகர்ப்புறக் காவலுக்கான உதவித்தொகையை பெற்று வந்தனர்.”

இப்புதிய காவல் முறையில் தலையாரிகள், வருவாய் மற்றும் காவல் காக்கும் வேலைகளையும் செய்ய வேண்டியிருந்ததால், காவல் புறக்கணிக்கப்பட்டது. மேலும் தலையாரிகளுக்குச் சொற்ப ஊதியமே வழங்கப்பட்டது. 1836-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் டென்ட் (Dent), தலையாரிகளும், தோட்டிகளும் தங்களுக்கு மானியம் வழங்கப்படவே இல்லையென்றும், அப்படியே வழங்கப்பட்டாலும் அவை பயிர் செய்வதற்கு ஏற்றதாக இல்லையென்றும் அல்லது தொலைவில் இருப்பதாகவும், இரவு பகலாக அரசாங்க வேலையைச் செய்வதால் பயிர் செய்ய நேரமில்லையென்றும் புகார் அளிக்காத கிராமங்களே இல்லையென்றும், இது ஒரு மோசமான ஒன்று என்றும் குறிப்பிடுகிறார். 1844 ஆம் ஆண்டில், 394 தலையாரிகள் மாதம் ரூ.2-8-0 சம்பளம் பெற்றனர் என்றும், அவர்கள் ‘சம்பளம் தலையாரிகள்’ என்றழைக்கப்பட்டதாகவும், 33 தலையாரிகள் சிறிதளவு சுதந்திரத்துடன் மாதச்சம்பளம் ரூ. 230 பெற்றனர் என்றும், மேலும் எட்டுப்பேருக்கு மாதச்சம்பளம் 15 அணாக்களுடன் கொஞ்சம் இனாம் நிலமும் கொடுக்கப்பட்டதாக ஆட்சியர் கூறுகிறார்.”

காவல் முறையை மறுசீரமைக்கவும், ஊதியத்தை உயர்த்தவும் பல்கோவல் முறைைைண மேற்கொண்டபோதிலும் எந்தப்பலனும் காவல் மறுசீரமைப்புத் திட்டம் அனுமதிக்கப்பட்டபோதிலும், அளவை செய்யப்பட்ட (hulus) பத்து வட்டங்களே பயனடைந்தன எஞ்சிய அன்றைய சிதம்பரம், மன்னார்குடி வட்டங்கள் மற்றும் கடலூர் வட்டத்தின் சில பகுதிகள் இதனால் பயனடையவில்லை நில

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காவல்துறையை மறுசீரமைத்து மேம்பாடு அடையச்செய்ய வேண்டுமென்று (Committee of Police Gentlemen) வற்புறுத்தப்பட்டது. 1857-இல் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு கலவரங்களை ஒடுக்கும்பொருட்டுக் காவல் துறையை வலுப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. மேலும், நகர்ப்புறக் குற்றங்களான கொலை,கொள்ளை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வந்ததும் இதற்குக்காரணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் பொதுமக்களுக்கு, குறிப்பாக ஆங்கிலேயர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்பதாகும். நடப்புக் காவல்சட்டம் XXIV-1859 மூலம் காவல்துறை சீரமைக்கப்பட்டது. இதன்படி, காவல்துறைத் தலைவராக தலைமை ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். அவருக்குக்கீழ் சில துணை ஆய்வாளர்கள், சில மாவட்டங்கள் அடங்கிய தொகுதிகளின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சட்டம்- ஒழுங்கு தவிர்த்து, மாஜிஸ்ட்ரேட்டுகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டனர்.

1860-ஆம் ஆண்டு புதிய காவல்துறை இம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் மாவட்ட நீதிபதிகள், வட்டாட்சியர்கள் மற்றும் அவர்களுடைய அலுவலகங்களைச் சேர்ந்த ஏவலாளிகள் (Peons), மாவட்ட காவல் பணியைச் செய்து வந்தனர். வட்டாட்சியர்கள் ‘தலைமைக் காவலர்’ (Head of Police) என்று அழைக்கப்பட்டனர் . குற்றவியல் நடைமுறைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாஜிஸ்ட்ரேட்டுகள் (Magistrates) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கிராமத் தலைவர்கள் மற்றும் தலையாரிகள் கிராமக் காவலர்களாகத் (Village Police) தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.

சோழமண்டலக் கடற்கரையில் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் 1681-1947 கடலூர் நகரமயமாதல் ஓர் ஆய்வு
ஆசிரியர் – பேராசிரியர். டாக்டர். கு. கன்னையா, பி.எச்.டி

விலை: ₹390

buy: https://www.heritager.in/product/sozha-mandala-kadarkaraiyil-aangileyar-kadal-vaanibam/