சங்ககால மறவர்
மறவர்க்கு அளிக்கப்படும் பட்டங்கள் : மறவர்களுக்கு வேந்தன் செய்யும் பல சிறப்புகளில் பட்டங்கள் அளித்துப் போற்றுவதும் ஒன்றாம். இதன்படி ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களைச் சிறப்பு வாய்ந்த படைத் தலைவர்களுக்குச் சூட்டுவதுண்டு. இதனை “மாராயம்” என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இப்பட்டங்களைச் சூடும்பொழுது அதற்குரிய மோதிரம் ஒன்றும் அரசனால் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனை ‘மாராயம் பெற்ற…