Category கட்டுரைகள்

கண்ணகி திராவிட தெய்வமா?

நூலின் ஆசிரியர் கூறுகையில், “இந்து சமயத்தில் ஆரிய சமயத்தில் பெண் தெய்வத்திற்குக் கொடுக்கப்படுகிற உயர்வை விட திராவிடச் சமயத்தில் உள்ள பெண் தெய்வத்திற்குத்தான் ஏற்றம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டு இருந்தது; இன்றும் இருந்து வருகிறது. திராவிடர்களுடைய மொழியில் வடமொழி புகுந்து ஆதிக்கம் செலுத்திய காலத்தில், ஆரியர்களின் பண்பாட்டில் திராவிடர்களின் பண்பாடு கலந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்தச்…

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

நம்பமுடியாத புலமையாளர் தமிழ்நாட்டில் அறியப்பட்டவர்களைப் போல் அறியப்படாத பெரிய அறிஞர்களின் பட்டியல் ஒன்றும் இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, சி.சு.மணி. தொல்காப்பியம் உயிர்ஈற்றுப் புணரியலைப் பற்றிப் பேசவேண்டுமா? சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேசவேண்டுமா? பரிமேலழகர் உரைச் சிறப்பு என்ன? தமிழிலக்கிய நெடும் பரப்பில் எங்கே எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய…

தமிழர் சமயம்

உலகத்தில் மதங்களுக்குப் பெயர் வழிபடும் தெய்வத்தை வைத்தாவது, சமயத் தலைவன் பெயரைத் தழுவியாவது, பிரமாண நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடுங்கடவுளின் பெயர் சிவமாயின் அம்மதம் சைவமெனப்படும், தெய்வத்தின் பெயர் விஷ்ணுவாயின் மதம் வைணவம் எனப்படும். கிறிஸ்து மதமும் மகம்மதிய மதமும் புத்தமதமும் சைனமதமும் சமயத்தலைவர்கள் பெயரால் ஏற்பட்டவை. செராஸ்டிரிய மதமும் கன்பூசிய…

மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள்

மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள் : இந்தியாவின் பழமையின் சிறப்புகளைப் பாதுகாக்கவும் வளர்ச்சியடையாத பகுதிகளை இனங்கண்டு மேன்மைப்படுத்தவும் பழங்குடியினரின் கல்வி, பொருளாதார திட்டங்களை நடத்து வதற்கும் புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. பீகார் மலையின மக்கள் மேம்பாட்டு நிறுவனம், வங்காளத்தில் உள்ள பண்பாட்டு ஆய்வு நிறுவனம் ஆகிய இரண்டும் முறையே 1954, 1955-…

செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும்

செஞ்சி நாயக்கர் கலைப்பணி : தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களைத் தொடர்ந்து கட்டடக் கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் விஜயநகர நாயக்கர்களாவர். கோயில் வளாகத்தின் முக்கியமான கூறுகளாக விமானம், மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுரம், தெப்பக் குளங்கள் முதலியவற்றைக் கூறலாம். தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டிருக்கும். எனவே அது “ஷடங்க”…

களப்பிரர் தமிழுக்கு எதிரியா? வரலாறு கூறும் தகவல்கள்

தனிப்பட்ட எதிரியை ஊரார் எதிரியாக மாற்றும் உளவியலே இது. “சங்க காலத்திற்குப் பின்பு நீண்ட இருண்ட காலம் தொடர்கிறது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான இக் காலத்திய நிகழ்வுகளை அறிவது கடினமே. ஆனால், ஆறாம் நூற்றாண்டளவில் அடுத்த காட்சிக்காகத் திரை விலகும்போது, பண்பாட்டின் எதிரிகளாகச் செயல்பட்டுள்ள களப்பிரர் எனும் தீய அரசர்கள், தமிழ்நாட்டில் நிலைபெற்றிருந்த அரசுகளை அகற்றித்…

தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை – ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள் அருகருகேஇருக்கும் உருவப்பொறிப்புடன் கூடிய முத்திரையொன்றுகிடைத்துள்ளது.(மார்ஷல் முத்திரை எண் 338). நகரைக் குறிக்கும் குறியீட்டுடன்…

அதியமான்கள் – வரலாற்று சுருக்கம்

தகடூர் வீழ்ச்சிக்குப் பின்னர் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய அதியமான் மரபு குறித்த செய்திகளை அறிய இயல வில்லை. மழகொங்குப் பகுதியில் பாண்டியரால் வெற்றி கொள்ளப்பட்ட அதியர்கள், அதியமான் மரபின் வழித் தோன்றலாவர். ‘அதியமான்’ எனும் தமிழ்ச் சொல்லே வட மொழியில் அதியர் எனப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டிய அரசர்கள் மழகொங்குப் போரில் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளமையால் அதியமான்…

தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி

குலமுறை அமைப்பு : குறுமன்ஸ் பழங்குடி சமுதாயம் குலமுறை சமுதாயம், குலங்களை அடிப்படையாகக் கொண்டது. குலமுறை சமுதாயம் தமிழகத்தில் பல இன மக்களிடையில் காணப்படுகின்றது. ஆனால் இம்முறை மற்ற சமுதாயத்தினரிடம் அதிகம் இல்லை. சில நேரங்களில் மட்டும் தென்படுகின்றது. மாறிவரும் நாகரிக உலகில் குலமுறை என்பது கடைபிடிக்கப்படாததாக உள்ளது. சமுதாயத்தில் மக்களின் தொகை கூடும்போதும், வெளியிலிருந்து…