Category கட்டுரைகள்

தொல்காப்பியம் காட்டும் தமிழர் வாழ்வு

சங்க இலக்கியத்துக்கும் முற்பட்டதாக தொல்காப்பியம் இருக்க முடியாது எனவும், சங்க காலத்துக்கு அடுத்து வந்த களப்பிரர் காலத்தில் தான் தொல்காப்பியம் பிறந்திருக்க வேண்டும் என்ற கருத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார். தொல்காப்பியச் சிந்தனைகள் சில திருக்குறளிலும் இருப்பதால், இரண்டு நூல்களும் சமகாலத்தைச் சேர்ந்தவை என்று கூறும் நூலாசிரியர், இரண்டும் களப்பிரர் காலத்தில் பிறந்தவை எனவும், அதனாலேயே அக்காலத்திய…

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு இந்நூலாய்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் பட்டியல்கள், நிலப்படங்கள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன. முதலில் பாண்டிய நாட்டில் இருந்த நாடுகளின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. இவற்றோடு பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளும் உரிய நிலப்படங்களோடு இவ்வியலில் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டியநாடு இருபத்தொரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு இருபத்தொரு நிலப்படங்கள் இவ்வியலில்…

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள் பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன. தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிப் பெயர்களும் உள்ளன. கீழடியில் நடைபெற்ற…

பாசனத் தொழில்நுட்பம்

பாசனத் தொழில்நுட்பம் : நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், பள்ளமும் மேடுமான நிலப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவது எளிதல்ல. வீணாகும் நீரினை குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தேக்கி வைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவது மழைக் காலங்களில் ஆபத்தானது. எனவே, நிலப்பரப்பியலின் கூறுகளை ஏற்றதாகப் பயன்படுத்தி நீரினை வேளாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும். காவிரிச் சமவெளி போன்ற நிலப் பகுதிகளில் நீரினைப்…

புதிதாக வெளிவந்த புத்தகங்கள்

1. தலித்துகள் பெண்கள் தமிழர்கள் – க. பஞ்சாங்கம் விலை: 425/- 2. பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல் – டாக்டர். ஆ.அ. வரகுணபாண்டியன் விலை: 250 /- 3. தனியாத் தீயின் நாக்குகள் – கமலாலயன் விலை: 160/- 4. சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் – ப்ரஜ்…

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம்

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம் ஆசீவகர்கள் எனத் தமிழ் நூல்களில் அழைக்கப்படும் இவர்கள் ‘ஆஜீவக‘ (Ajivika) என வடமொழியில் குறிப்பிடப்படுகின்றனர். ஆஜீவ (Ajiva) என்ற வடமொழிச் சொல், ஓர் வாழ்க்கை நெறிமுறை (mode of life), தொழில், இல்லறத்தோராயினும், துறவறத்தோராயினும் சேர்ந்து வாழும் ஒரு குழுவினர் என்ற பொருள்பட நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆசீவகர்கள் ஓர்…

வேலூர்க் கிளர்ச்சி, 1806 – சாதகமான சூழ்நிலை

வேலூர்க் கிளர்ச்சி, 1806 – சாதகமான சூழ்நிலை : தென்னிந்தியக் கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்ட ஆறாண்டுக் காலத்தில் வேலூரில் மற்றொரு கிளர்ச்சி வெடித்தது. முந்தியக் கிளர்ச்சியில் கலந்துகொண்டு தப்பிவந்த பல கிளர்ச்சிக்காரர்களுக்கு வேலூர் சிறந்த கொத்தளமாகப் பயன்பட்டது. பாளையக்காரர்களிடம் பணியாற்றிய பல வீரர்கள் கம்பெனிப் படையில் சேர்ந்திருந்தனர். வேலூர்க் கோட்டையில் சிறைப்பட்டிருந்த திப்பு சுல்தானின் புதல்வர்கள்,…

புலவர்களும் புலமை மரபுகளும் – பொருநர்

புலவர்களும் புலமை மரபுகளும் : பொருநர் : பொருநர் என்பாரும் கலைஞர்களே எனினும் இவர்களின் அடை யாளத்தை உறுதி செய்ய முடியவில்லை. இச்சொல்லும் பல பொருள் களை உடையது. போர்வீரர், சிறுபறை இசைப்பவர், மற்றொருவரோடு ஒப்பிடப் பெறுபவர், ஒப்பிட இயலாதவர், பகைவர் என்பன இதற்குரியபொருள்களாகும் .’இஃது ஒரு குறுநில மன்னனின் பெயரும் ஆகும். ‘பொரு’ என்னும்…

தொல் திராவிட மொழி குடும்பம் கண்டுபிடிப்பு

தொல் திராவிட மொழி குடும்பம் கண்டுபிடிப்பு மொழிக் குடும்பங்கள்: உலகில் பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. அவை பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க மொழிக் குடும்பம் முதலியன அவை மொழிகட் கிடையே உள்ள பல்வேறு ஒற்றுமைகளைக் கருதிக்…

கழுகுமலை சமணப்பள்ளி

கழுகுமலையின் வடக்குப்பக்கத்தில் சற்று உயரமான இடத்தில் இயற்கையான இரண்டு பெரிய குகைத் தளங்களோடு சில சிறிய குகைத்தளங்களும் நிறைந்த பகுதி உள்ளது. இதன் மையப்பகுதி பிற்காலத்தில் அய்யனார் கோயிலாக மாற்றப்பட்டு இப்பகுதியின் கிராம மக்களால் வழிபாடு நடத்தி வரப்படுகின்றது. அய்யனார் கோயில் பகுதியின் முன்புறத்தில் கருங்கற்கள் கொண்டு செவ்வக வடிவத்தில் பெரியமேடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில்…