திருவள்ளூர் மாவட்டக் கோயில்கள் – 2 – பெ. தாமரை
எங்களது திருக்கோயில்கள் உலாவின் இரண்டாவது தவனையில் நாங்கள் மேலும் சில திருவள்ளூர் மாவட்டக் கோயில்களைத் தரிசித்தோம். ஞாயிறு கோயில்: பொன்னேரி வட்டம், ’ஞாயிறு’ என்னும் இடத்தில் அமைந்துள்ளது புஷ்பரதேஸ்வரர் கோயில் (ஞாயிறு கோயில்). செங்குன்றத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பொன்னேரியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது இது. கோயிலுக்குச் செல்லப் பேருந்து வசதி உள்ளது.…