பாறை ஓவியங்கள்
பாறை ஓவியங்கள் : ‘இந்நூல், விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கீழ்வாலை என்ற ஊரிலே கண்டுபிடிக்கப் பெற்ற பாறை ஓவியங்களைப் பற்றியதாகும். வரலாற்றுக்கு முற்பட்ட இந்த ஓவியங்களுக் கிடையே முதன் முதலாகச் சிந்துவெளி நாகரிகக் குறியீட்டு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என் தலைமையில் இயங்கி வருகின்ற புதுவை வரலாற்றுக் கழகத்தைச் சார்ந்த பாகூர் புலவர் சு. குப்புசாமியும்,வில்லியனூர் புலவர்…