சமய வழிபாட்டிலும் வரலாற்றிலும் மரக்கால்
“பல்லவர் காலத்திற்கு முன்பு மரக்கால் எனும் அளவையியல் கருவி அம்பணம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இத்தகைய மரக்கால் பல்லவர் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் நமக்குக் குறிப்புகள் தருகின்றன. பல்லவர் காலத்திய சைவ, வைணவ சமயங்களின் புராண வரலாறும் மரக்காலைப் பற்றிக் குறிப்புகள் தருகின்றன. மரக்காணம் எனும் ஊரிலுள்ள பூமீஸ்வரர் திருக்கோயிலுள்ள சிவபெருமானின் பக்தன்…