பறையும் நிலமும் :
திருவான்மியூர் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும், அவருடைய கீழாள் பதினான்கு பேரும், தஞ்சை குத்தாலம் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும் கீழாள்கள் பதினோருபேரும் அந்தந்த கோயில்களில் இசைக்கலைஞர்களாகப் பணியாற்றியதை அறிய முடிகிறது.
இவர்கள், தோல், கஞ்சம், நரம்பு, காற்றிசையோடு சேர்த்து குரலிசை ஐந்துமாக தலைப்பறையின் தாளத்திற்கு ஏற்ப இசைத்து வைகறை ஆட்டம் நிகழ்த்தியதைத் திருவெண்காடு மற்றும் திருவிடைமருதூர் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலி பாளையங்கோட்டை கோபால சாமி கோயிலில் உள்ள முதலாம் ராஜராஜன் காலத்து (கிபி.1007) கல்வெட்டு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதில், உவற்சர் (தலை ) பறை கொட்டுவாருவனுக்கு நில.. நிலன் பன்னி ரெண்டும் என்ற வாக்கியம் காணக் கிடைத்தது. இதன்படி, நிவந்தமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் குறித்த செய்தியை அறிய முடிகிறது.
தஞ்சை ராஜராஜேஸ்வரமுடையார் கோயிலில் தமிழ் பாடுவாரும், ஆரியம் பாடுவாரும், கானபாடிகளுமாகத் தனித்து, நாடகம், கலை , கூத்துகள் நிகழ்த்தியதை முதலாம் ராஜராஜன் கல்வெட்டின் வழியாக அறியமுடிகிறது. இவர்களில் ஆரியக் கூத்தர்கள் நீங்கலாக இடம்பெற்றிருந்த தமிழ் பாடுவேரர், உவற்சர் அனைவரும் தமிழ் இலக்கிய மரபிலமைந்த இயல், இசை நாடகங்களை இயற்றி நடித்திருக்கிறார்கள்.
திருவிடைமருதூர் கோயில் தேவரடியார் ஒருவருக்கு இந்த இசைக்கூத்துப் பாணர் ஒருவரே முன்னின்று பாட்டுச் சொல்லித் தந்ததாகவும், அவருக்கு பரம்பரை பரம்பரையாக அனுபவிக்க வயல், நிலம், மனை ஆகியவை நிவந்தமாக அளிக்கப்பட்டதும் இந்தக் கல்வெட்டுச் செய்திகளில் உள்ளன.
இதன்வழியாக இயல், இசை , நாடகம் என முத்தமிழ் சிறப்பு மிக்கவர்களாக உவற்சர்கள் குறிப்பிட்ட கால அளவு வரைக்கும் தமிழ்ச் சமூக வரலாற்றில் மதிப்பு மிக்கவர்களாக வாழ்ந்து வந்ததை அறியமுடியும். கலை ,இசை ,கூத்து எனக் கொண்டாட்டமான வாழ்வமைந்த குடிகளான இவர்களின் பண்ணிசை நுணுக்கம் பற்றி பக்தி இலக்கிய காலத்தின் சமயக் குரவர்கள் ஒவ்வொருவரும் வியந்தோதியிருக்கிறார்கள். மன்னர்களும், அதிகாரிகளும் போற்றி ஆதரிக்கும் கல்வி, கலைச் சிறப்பு மிக்கவர்களாக அவர்கள் வாழ்வு அமைந்திருக்கிறது.
பறை வேளாண் சமூக அமைப்பு தோன்றுவதற்கு முன்பே வேட்டைச் சமூக அமைப்பில் தனி இடம்பெற்ற இசைக்கருவி. பறையிசையருவி நன்னாட்டுப் பொருநன் நோயிலனாயினன்” என்பது இவ்விசை கேட்டு உடல்நலம்பெற்றதைக் குறிக்கும்.
நிலத்திற்குரியவர்களாகவும், வேட்டை , உழவுத் தொழிலுக்கு உரியவராகவும் அமைந்த இவர்களைக் குறித்து இந்தக் கல்வெட்டுக் குறிப்புகள் பூசைத் தொழிலுக்குரியோர் எனக் குறிப்பிடுகின்றன. பிறகுபறைக் கருவி தமிழில் ஐந்திணை களிலும் இடம்பெற்ற ஓர் பண்டைய பூசைக்கருவி. “இன்னிசைப் பறயோடு வெற்றி நுவல” என வெற்றிக்குரிய நேரம் இசைக்கும் கருவியாக புறநானூறு அறிவிக்கிறது. கொல்லேற்றுத் தோலைப் பகைவரின் காவல் மரங்களை வெட்டி, வார்கொண்டு பிணைத்து முரசு செய்து அரசனுக்குக் கொடை முரசு கொடுத்ததும், அதை அரசன் மதிப்புறு பொருளாக பெற்றுக் கட்டில் செய்து காத்ததும் இலக்கியச் சான்றுகள். (கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் மோகூர் மன்னனின் காவல் மரமான வேம்பினை வெட்டி,
அம்மன்னனின் மகளிர் கூந்தலை வெட்டி கயிறாகக் கொண்டு வந்து முரசு செய்தான் எனும்போது முரசின் பெருமை மன்னனால் நீங்கிற்று.) (நூலிலிருந்து)
நற்திருநாடே – கார்த்திக் புகழேந்தி
விலை: 175/-
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/narthiru-naade/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers