பழையாறை-பெயராய்வு :
‘பழையாறை’ என்பது இந்நகரின் பெயர். இது முதன் மூவர் பாடல்களுள் ‘ஆறை’ எனவும் ‘பழையாறை’ எனவும் ‘பழைசை எனவும் குறிக்கப்படக் காண்கிறோம். செய்யுள் வல்ல தெய்வச் சான்றோர்களால் பயில வழங்கப்பட்டுள்ள தாகிய ஆறை என்பது செய்யுள் விகாரமன்று; இயல்பான பெயரே எனலாம்.
ஆறை ” என்பது ஊர்ப் பெயர்; இது பழைமை என்னும் அடையோடிணைந்து பழையாறை என்றாயிற்று எனக் இடமுண்டு. கருத
பழைசை என்பது, தஞ்சாவூரைத் தஞ்சை என்றது போல அமைந்தது; பழையாறை என்பதன் மரூஉ மொழி.
பழையாறையின் பெயர்கள்
பழையாறைக்குரிய பெயர்களாக முதன் முதலாக வழங்கியன, ‘ஆறை’ ‘பழையாறை’ ‘பழைசை’ ‘பழையாறு’ என்பனவாம்.
பழையாறை மாநகரம் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலம் முதலாக, ‘நந்திபுரம்’ ‘நந்திபுரி’ எனப்பட லாயிற்று,
சோழர்காலத் தொடக்கத்தில் இப்பெயர், ‘பழையாறையாகிய நந்திபுரம்’ என்று வழங்கப்பட்டு வந்தது, முதல் இரசேந்திரசோழன் காலம் முதல் இவன் சிறப்புப் பெயரை ‘முடிகொண்டசோழபுரம்’என்னும் வழங்கப்பட்டது. ஒட்டியமைந்த பெயர் பழையாறைக்கு
வீரராசேந்திரன் காலத்தில் ‘ஆகவ மல்ல குலகாலபுரம்’ எனப்பட்டது.
இரண்டாம் இராசராசன் காலம் முதல் அவன் பெயரால் பழையாறை, ‘இராசராசபுரம்’ எனப்படலாயிற்று. ‘பழையாறை யாகிய இராசராசபுரம், ‘கீழ்ப் பழையாறையாகிய ராசராசபுரம்’ எனச் சாசனங்கள் பழையாறையைக் குறித்தன.
நாயக்க மன்னர் காலத்தில் பழையாறை முன்னைய பெயரான, ‘முடிகொண்ட சோழபுரம்’ என்னும் பெயரால் குறிப்பிடப் பெற்றது.
அரண்மனைகள் :
பல்லவர் காலத்தில் இரண்டாம் நந்திவர்மன் பழையாறையைத் தென்புறக் காவல் நகரமாகக் கொண்டிருந்தான். ஆதலின் இவன் காலத்தில் ஓரரண்மனை இருந்திருக்க வேண்டும். அது நாதன் கோயிலை ஒட்டி அமைந்திருத்தல் கூடும். சோழர் அரண்மனையின் பெரும் பகுதி இன்றைய சோழ மாளிகை எனப்படுகிற சிற்றூர் உள்ள இடத்தில் இருந்தது என்பர். சோழர் அரண்மனையின் பல பகுதிகளைச் சோழர் சாசனங்கள் சுட்டுகின்றன. பாண்டியர் தம் சாசனங்கள் இவ்வரண்மனையை ஆயிரத் தளி எனக் கூறுகின்றன. இரண்டாம் இராசராசன் தாராசுரத்தை ஒட்டியமைந்த பகுதியில் பேரரணும் மிகுந்த பாதுகாப்பும் உடையதொரு அரண்மனையைப் புதியதாக அமைத்தான் என்பது பல்லவராயன் பேட்டைச் சாசனத்தால் அறியப்பெறும் செய்தியாகும். இதனால் பழைய அரண்மனை வலியற்றதாக இருந்தமை ஊகிக்கப்பெறும்.
‘திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பியாரான பல்லவராயர் பெரியதேவர் ராஜராஜதேவர் பத்துக் கோயில் கொத்தும் ஆனை குதிரைகள் அகம்படி முதலிகள் உள் ளிட்ட துறைகளுக்கும் முதலிகளுமாய் முதலிகள் ஒபாதிகாரியத்துக் கடவருமாய் எல்லா வரிசைகளும் முன்னேவல் உள்ளிட்டு முதலிகள் பெறக் கடவ ஏற்றங்களும் பெற்று நின்று பெரிய தேவர் துஞ்சி அருளிப் பிள்ளைகளுக்கு ஒன்றும் இரண்டும் திருநட்சத்திரமாகையால் ஆயிரத்தளிப் படை வீடும் விட்டுப் போத வேண்டிப் போதுகிற இடத்துத் திரு வந்தப்புரமும் பரிவாரங்களும் உள்ளிட்டன எல்லாம் கூட்டிக்கொடு போந்து ராஜராஜபுரத்திலே இருந்த இடத்துக்குச் சூழ்ந்த இடன்…… எல்லா அடைவு கேடுகளும் வாராத இடத்து இன்னல்களும் பரிகரித்து” என்பது பல்லவராயன் பேட்டைச் சாசனப்பகுதி.!
(நூலிலிருந்து)
வரலாற்றுப் போக்கில் பழையாறை – வே.மகாதேவன்
விலை:400 /-
வெளியீடு:தினமலர்
Buy this book online: https://www.heritager.in/product/varalatru-pokkil-pazhaiyaarai/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers