திருப்பாவை – எளிய விளக்கம்

160

பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன்.

Add to Wishlist
Add to Wishlist

Description

பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் பல்துறை சார்ந்த அறிவும் தகவல் செறிவும் உரையில் இயல்பாக வெளிப்படுகின்றன. கம்பன், அண்ணங்கராச்சாரியர், திருமூலர், பி.ஸ்ரீ., பாரதி, ஷேக்ஸ்பியர், ஷெல் சில்வர்ஸ்டைன் போன்றோரின் கருத்துகளும் வரிகளும் உரைக்குக் கூடுதல் வண்ணங்களைச் சேர்க்கின்றன. வைணவக் கோட்பாடு, பக்தி ரசம், இலக்கிய நயம், மானுட நேயம் முதலானவையும் உரையில் பொருத்தமான விதத்தில் இடம்பெறுகின்றன.

திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்தையும் பற்றிய அருமையான தகவல்களும் ரசனையுடன் கூடிய விளக்கங்களும் இந்த உரையில் இருக்கின்றன. சொல்லுக்குச் சொல் உரை எழுதும் முறையினின்று வேறுபட்டுச் சுவாரஸ்யமான இலக்கிய வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்டதைப் போன்ற உணர்வைத் தரக்கூடிய உரை இது.

Additional information

Weight0.250 kg