தொல்காப்பியம் ஓரு பனுவலின் நெடும்பயணம்

195

Add to Wishlist
Add to Wishlist

Description

தொல்காப்பிய இலக்கணக் கூறுகளுக்கான மரபுகளை வழங்கிய சமூகமும் அச்சமூகத்து நிகழ்வுகளும் தொல்காப்பியத்தின் கருத்தியலுக்கு அடிப்படையாகும். இந்தக் கருதலோடு காலவோட்டத்தில் தொல்காப்பியப் பனுவலில் ஏற்பட்ட அகநிலை, புறநிலை மாற்றங்களை ஆய்விற்கு உட்படுத்துகிறது இந்நூல். களவியல் என்னும் கருத்தியல் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்த்திய நெடும்பயணத்தையும் பாலைத்திணையின் பரிணாம வளர்ச்சியையும் இந்நூல் பதிவு செய்கிறது. வருணம் வேறு – தொல்காப்பியர் காலத் தமிழ்ச் சமூகப் பிரிவுகள் வேறு என்பதற்கு வடமொழியிலேயே நால்வருணம் பற்றிய தெளிவான கோட்பாடுகள் முரண்பாடின்றிக் கிடைக்காதபோது தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் பேசியதாலேயே தமிழ்ச்சமூகத்தில் நால்வருண வேறுபாடு நிலைபெற்றிருந்தது என வாதிட முடியாது என்பதையும் இந்நூலில் சிலம்பு செல்வராசு பதிவு செய்கிறார்.

தொல்காப்பியப் பனுவலின் இந்நெடும்பயணத்தில் புராதன தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் அமைப்பை வரலாற்றினூடே உரைச் சித்திரமாகச் செல்வராசு தம் எளிய மொழிநடையில் தந்துள்ளார்.

Additional information

Weight0.250 kg