இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் – சிலம்பு நா.செல்வராசு

240

“தமிழிலக்கியக் கோட்பாடுகள் அவ்வவ்விலக்கியத்தை அடியொற்றித்தான் நிறுவப்படுதல் வேண்டும். அவ்வாறு ஒரு முயற்சி மேற்கொண்டால் தமிழிலக்கியங்களைத் தனித்தனி இலக்கிய வகைமைகளாகக் கணக்கிடமுடியும். எனவே சிற்றிலக்கியம் என்ற பெயர்ப்பொருத்தத்தைவிடப் ‘பரணி இலக்கியம்’, ‘உலா இலக்கியம்’, ‘பள்ளு இலக்கியம்’ எனச் சுட்டப்பெறுவது தகவுடையது”

என்று அடையாளமொழி மரபை மறுத்து தமிழ் மரபுக்குத் தக்கவாறு பெயர் சூட்டும் வகைமையைக் கண்டுரைக்கிறார் சிலம்பு நா. செல்வராசு

Add to Wishlist
Add to Wishlist

Description

Language: தமிழ்
ISBN: 9789388631037
Published on: 2019
Book Format: Paperback
Category: கட்டுரை
Subject: இலக்கியம்

 

தமிழ் சிற்றிலக்கியங்களைப் பற்றி வந்த நூற்களில் பெரும்பாலானவை இலக்கிய வரலாற்று அல்லது வகைமை பற்றியவை. விதிவிலக்கு கோ. கேசவன், நாஞ்சில் நாடன். சிலம்பு நா. செல்வராசு இந்த வரிசையைச் சேர்ந்தவர். நூலின் தலைப்பு ‘இருபதாம் நூற்றாண்டு சிற்றிலக்கியங்கள்’ என்றாலும், இனக்குழுச் சமூகக் காலந்தொட்டு இன்றுவரை பார்வையைச் செலுத்தியுள்ளார். பல்லவர், சோழர் அரசியல் பின்னணியில் உலாவையும் கலம்பகத்தையும் பார்க்கும் செல்வராசின் பார்வை முந்தைய மரபிலிருந்து வேறுபட்டது. அந்த காலகட்டங்களைவிட இருபதாம் நூற்றாண்டி சிற்றிலக்கியப் பெருக்கம் ஏன் என்பதற்குரிய விடையைத் தேடுகிறது இந்நூல்.

Additional information

Weight0.25 kg