உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
-இராமலிங்கர்
1823-ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்கர் தமது ஆன்மீகப் பயணத்தைத் தமது பத்துப்பன்னிரண்டு வயதிலேயே தொடங்கி விட்டதாக அவரைப் பற்றிய வரலாறுகள் தெரிவிக்கின்றன. அவர் சின்ன வயதில் முறையாகப் படிக்கவில்லை; பள்ளிக்கூடம் போக மறுத்தார்; ஒற்றியூர்க் கோயில், அதை ஒட்டிய நந்தவனம், முருகள் கோயில் ஆகிய இடங்களைச் சுற்றித் திரிந்தார்; பசியின் கொடுமையை உணர்ந்தவர்; சென்னை நகரத்தைவிட, கோயில் பிரகாரங்களை நேசித்தவர்; அங்குத் தரப்பட்ட பிரசாதத்தால் பசி போக்கியவர் என்பன அவரைப் பற்றிய எதார்த்தமான சரித்திரத் தகவல்கள். அவர் ஆறுமாதக் குழந்தையாக இருந்த போதே சிதம்பரத்தில் ஒளி தரிசனம் பெற்றவர்; தெருவில் விளையாடும் சிறுவனாக இருந்தபோதே சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர்; கண்ணாடியில் முருகனின் உருவத்தைச் கண்டவர்; பசியால் வாடிய போது சிவன் கரத்தால் உணவு பெற்றவர் எதையும் ஆசானிடம் சென்று படிக்காமலே சிவ கிருபையால் ஓதாமல் உணர்ந்துகொண்டவர்; மிகச் சின்ன வயதிலேயே மண், பெண், பொன் ஆசைகளை விட்டொழித்தவர்; இறையருளால் தோத்திரப் பாடல்களைப் பாடும் புலமையைப் பெற்றவர் என்பன அவரைப் பற்றிய எதார்த்தம் இகந்த சரித்திரத்தகவல்கள். தம்மைப் பற்றிய எதார்த்தத் தகவல்களைவி எதார்த்தம் இசுந்த தகவல்களையே இராமலிங்கர் தமது பாடல் அங்கீகரித்துள்ளார்.
இராமலிங்கர் காலந்தொட்டுத் தமிழகத்தில் மேற்படி இருவிதமான சரித்திரத் தகவல்கள் அவரைப் பற்றி வழங்கி வந்துள்ளன. இந் ஓரளவிற்கு அறிவுக்குப் பொருத்தமானவிதத்தில் அவரது ஆன்மீ பயணத்தையும், சமூகச் செயல்பாடுகளையும் அணுகும் மேற்கொள்ளப்படுகிறது. அறிவுக்குப் பொருத்தமானது என்று கூ அதுவே முழுமையான உண்மை என்று உரிமை பாராட்டத் தேவையில்லை அறிவாலும் சரி, நம்பிக்கையாலும் சரி. முழு அறுதி என்று தையும் என்றும் தீர்மானித்து வரையறுத்திட முடியுமா சந்தேகம்தான். இதுவரையிலான ம டியுமா என்பது மானிட இனத்தின் வரலலாத்தில் அப்படி ஒன்று இன்னமும் வரையறுக்கப்பட்டுவிட வில்லை என்பது நிச்சயமாகத் தெரிகிறது. அப்படி வரையறுக்கப்பட்ட உண்மைகள் அநகம் அவை அடுத்தடுத்த காலகட்டங்களில் ‘மெய்யாய் இருந்தது ட்செல நாட்செல வெட்ட வெறும் பொய்யாய்ப் பழங்கதையாய்க் வாய் மெல்லப் போனதுவே’ (52) என்று பட்டினத்தார் சொள்ளது போல் ஆகியுள்ளன! அப்படிப் போய்விட நம்பிக்கையாலும் கண்ட உண்மை என்பது தெரிவதால்தான் அதனை மிடக் கூடியதுதான் அறிவாலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்குகிறது. அதனை அறிந்து கொள்ள முயற்சிப்பதால், ஒன்றை வீணில் வழிபட்டு இறுதியில் ஏமாறும் நிலைமையைத் தவிர்த்திட முடிகிறது.
நம்பிக்கை, வீரவணக்கம், வழிபாடு, திருஉருவமயமாக்கம் ஆகியவற்றை விடுத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1874 வரை ஏறத்தாழ நாற்பதாண்டுக் காலகட்டத்தில் இராமலிங்கள் மேற்கொண்ட அன்மீக மற்றும் சமூகச்செயல்பாட்டுப் பயணத்தை மூன்று நிலைகளாக அல்லது கட்டங்களாகப் பார்த்துவிடலாம். இங்கே முதலில் இராமலிங்கரின் தொடக்கக் காலத்துச் சைவ சமயவாத நிலையைக் காணலாம். சென்னையில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இயற்றிய தோத்திரப் பாடல்கள் இதற்கு ஆதாரம். அவர் வாழ்ந்த போதே வெளிவந்த அவரது பாடல்களின் முதல் ஐந்து தொகுப்புக்களில் முதல் மூன்றும் இதற்கான முதன்மை ஆதாரங்களாகும்.
சிவயோகியாக இராமலிங்கர் மாறியது அவரது பயணத்தின் இரண்டாம் நிலையாகும். சைவசமயவாதி என்ற நிலையிலிருந்து யோகசித்தி நிலையை அடைவதற்கு அவர் மேற்கொண்ட ஆரம்ப முயற்சிகளை, 4-ஆம் தொகுப்பிலுள்ள ‘அபராத விண்ணப்பம்’, ‘அடிமைப் பதிகம்’, ‘தனிவிருத்தம்’, ‘வேட்கைக் கொத்து’, ‘அறநிலை விளக்கம்” ஆகிய தலைப்புக்களில் இனங்காண முடியும். அவரது 5-ஆம் தொகுப்பிலுள்ள ‘அன்புமாலை’, ‘பிரசாதமாலை’, ‘ஆனந்தமாலை’ ‘பத்திமாலை’, ‘அதிசயமாலை’, ‘அபராத மன்னிப்பு’. ‘ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை’ ஆகிய தலைப்புக்களிலுள்ள பாடல்கள். அவர் யோக நிலைக்கு முற்றிலும் மாறிவிட்டதற்கான ஆதாரங்களைக் கொண்டுள்ளன. அவரது 6-வது தொகுப்பு (அவர் மறைந்தபின் வெளியிடப்பட்டது) இராமலிங்கரின் ஆன்மீகத் தேடலின் இரண்டாம் கட்டத்தையும், அமைப்பு ரீதியாகச் செயல்பட்ட மூன்றாம் கட்டத்தையும் நிறுவுகின்றது. இதற்குத் துணைபுரிபவை அவர் வசனத்தில் எழுதியுள்ள பகுதிகளாகும்.
கண்மூடி வழக்கம் எல்லாம் மண் மூடிப் போக : சி.இராமலிங்கம் (1823-1874) – ராஜ் கௌதமன்
₹180
Buy Link: https://heritager.in/product/kanmoodi-vazhakkam-ellaam-man-moodipoga-c-ramalingam-1823-1874/