ராணி வேலுநாச்சியார்

ராணி வேலுநாச்சியார் :

இந்த நேரத்தில் சின்ன மருது சும்மாயிருக்கவில்லை. திண்டுக் கல்லுக்கு அருகே தனது மறைந்த அரசரின் தனித்துவிடப்பட்ட மனைவி, குழந்தைப் பெற்றிருக்கும் நிலையில், அவரின் அருகில் இருக்கமுடியவில்லை. அவர் மறவர் நாட்டிற்கு திரும்பிச் சென்று மறவர் தலைவர்களையும் மக்களையும் ஒன்று திரட்டினார். அதே சமயம் ராணியுடனும், அவரது பாதுகாவலராக இருந்த மைசூரின் முடிசூடா மன்னர் ஹைதர் அலியுடனும் அடிக்கடி தொடர்புக் கொண்டார். அவர் நவாப்பின் ஆட்களை வெளியேற்ற உதவுமாறு ஹைதர் அலியைக் கேட்டுக்கொண்டார். இவருடைய முயற்சிகள் எதுவும் ஆங்கில அரசுக்குத் தெரியாது. கி.பி.1779-இல் இராமநாதபுரத்திலிருந்து கர்னல் மார்ட்டின்ஸ் சிவகங்கையின் மீது படையெடுத்தார் என்று பழங்கால சருகணி ஓலை ஒன்று உறுதி செய்கிறது. அவர் மங்களம், உறுதிக்கோட்டை, வெற்றியூர். பாகனேரி வழியாக வருவதாக அறிந்து முத்தூருக்கு வரும் வழியில் மருது பாண்டியரின் படைகள் அவரைத் தாக்கின. ஆங்கிலேயர்கள் இராமநாதபுரத்தைப்போல. சிவகங்கையையும் தமது நட்பு நாடாக வைத்துக் கொள்ள விரும்பினர். அதனால் ராணி வெள்ளச்சி நாச்சியார் திண்டுக்கல்லிலிருந்து வரவழைக்கப்பட்டு, கி.பி.1780-இல் ஆட்சியாளராக அமர்த்தப்பட்டார்.

Pharoa’ தமது தென்னிந்திய கெஜட்டியரில் (Gazetteer of Southern India) உறுதிப்படுத்தியதைப்போல், ஹைதர் அலி கர்நாடகப் போருக்குச் சென்றிருந்தபோது, சின்ன மருது திண்டுக்கல் ‘கில்லாதார்’ அல்லது கமாண்டரிடம் ஒரு சிறுபடையைப் பெற்றுக்கொண்டு,
சிவகங்கையைச் சென்றடைந்து ராணி வேலுநாச்சியார் மறுபடியும் திரும்பி வந்து விட்டதாக அறிவித்தார். மக்கள் அவரைக் காணக் கூட்டம் கூட்டமாகவந்தனர். இதனைக் கண்ட நவாப். வேறுவழியின்றி ராணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். சின்ன மருது பிரதான மந்திரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் நெல்சன் விளக்குகிறார். கி.பி.1781-இல், மருது சகோதரர்கள் ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் சிவகங்கைக்கு வந்தனர். அங்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாததால், முன்பின் அறியாத ஒருவரை பொம்மை ராஜாவாக வைத்துவிட்டு, ஹைதர் அலியின் பெயரால் ஆட்சி செய்தார்கள்.

கி.பி.1783-இல் இத்தகைய சூழ்நிலைக்கு முடிவு ஏற்பட்டது. கர்னல் புல்லர்ட்டன் தலைமையில் வந்த தென்னகப் படையின் தலையீட்டினால் காலம் சென்ற மன்னரின் மனைவி. ராணி வேலுநாச்சியார் நவாப்பினால் ஜமீன்தாரிணியாக நியமிக்கப்பட்டார். ஆனால் நெல்சன் தமது கருத்தை முழுவதுமாக இல்லாவிட்டாலும் ஒரு பகுதியையாவது மாற்றிக் கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்த அரசு (அரசியல்) மாற்றம்கூட பெயரளவிற்குத்தான். விரைவில் ராணி, அவருடைய நண்பர்கள், அவருடைய தொடர்புகள். உறவினர்கள் ஆகியோர்மேல் ஆதிக்கம் செலுத்தி, மருது சகோதரர்கள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர். பிரிட்டீஷ் அரசும் மற்றும் நாட்டு மக்களும் அவர்கள்தான் உண்மையான ஆட்சியாளர்கள் என்று ஏற்றுக் கொண்டனர். ‘பேஷ்குஷ்’ என்று சொல்லப்படும் கப்பத்தொகை ராணியின் பெயரால் செலுத்தப்படவில்லை என்பதை நாங்கள் அறிவோம். அதன் காரணமாக நவாப்பின் கோபத்திற்கு ஆளாகி புதுப் படையெடுப்புகள் நிகழ்ந்து, பகையும் வெறுப்பும் ஆத்திரமும் தூண்டப்பட்டன.

சிவகங்கைச் சீமையை வெறும் பெயரளவில் ராணி ஆட்சி செய்தார் என்று அனைவரும் ஒத்துக்கொள்வோம். ஆனால் யார் பெயரில் அவர் ஆட்சி செய்தார்? காலம் சென்ற அரசர் முத்து வடுகநாதர் இறந்தப் பின்பு அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதுவும் பெண் குழந்தை, ராணியோ, அவரது ஆலோசகரோ அல்லது சின்ன மருதுவோ ஒரு விதவை ராணி அல்லது அவருக்குப் பிறந்த மகளோ, எவ்வளவு துக்கத்தில் இருந்தாலும் பாளையக்காரர்களின் இரக்கத்தைப் பெற்று அவர்களை ஒன்று சேர்க்க முடியாது என்று அறிந்திருக்க வேண்டும். பெண்வழி அரசுரிமையை ஏற்றுக்கொள்ள மறவர்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லாமல் இருக்க வேண்டும். ஏனென்றால். மறவர்களின் ஆட்சிமுறை பெண்வழி ஆட்சிமுறை அல்ல. அப்படியே ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும், அந்தவழியில் வந்த ஆண்களைத்தான் தமது ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொள்வர். பெண்களை அல்ல. மறைந்த அரசரின் வாரிசான இளவரசி வெள்ளச்சி நாச்சியார் மற்றும் வேலுநாச்சியாரின் சார்பில் இளம் இளவரசர் ஒருவரைப் பட்டத்திற்குத் தேர்ந்தெடுத்ததாக நாம் கண்டோம். அவர் வெங்கம் பெரிய உடையத்தேவர். அவரைச் சில வரலாற்றாசிரியர்கள். முத்து வடுகநாதத் தேவரின் சொந்த மகன் என்றே தவறாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அரச குலத்தைச் சார்ந்த இந்த இளவரசர். சின்ன மருதுவால், மறைந்த அரசரின் வாரிசான மகளுக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திண்டுக்கல்லில் மறைந்து வாழ்ந்த ராணி மறுபடியும் அழைத்து வரப்பட்டபோது அந்தப் பெண் குழந்தைக்கு ஒன்பது வயது. அவருடைய கணவர் என்று சொல்லப்படும்சிறுவனுக்கு நிச்சயம். அவரைவிட ஒரு சில வயதுகளே அதிக மிருக்கலாம். அவரே இளவயது ராஜாவாகச் சொல்லப்பட்டார். அவரும் பெயரளவிலேதான் ராஜாவாக இருக்கமுடியும் என்று சிலர் கருதினா. கி.பி.1783-இல் உண்மையில் கர்னல் புல்லர்டன் சிவகங்கையின்மீது சிறுபடையெடுப்பு நிகழ்த்தியபோது, அவரால் கொடுக்கப்பட்ட பட்டம்தான் இது. காலப்போக்கில். அவரது மனைவிக்கு ஆள்வதற்கு ஒரு நாடு கிடைத்திருந்தால், அவரது கணவர் என்ற முறையில் அந்நாடு ஆண்கள் நிர்வாகம் செய்யும் நாடாக மாறியிருக்கும்.

இந்த வெங்கம் பெரிய உடையத் தேவர் நாலுகோட்டை அரச குடும்பத்தின் உறவினர். அவர் சிறுவனாக இருந்தபோது அவரது வருங்கால மாமியாரான. ராணி வேலுநாச்சியாரின் பாதுகாப்பில் அவருடன் தலைமறைவாக இருந்திருக்க வேண்டும். சிவகங்கையின் அரச பதவியை ஏற்க ராணி வந்த பின்பு, சிறிது காலத்திலேயே அவரது திருமணம் நடந்திருக்க வேண்டும். அன்றிலிருந்து வெளி உலகிற்கு அரசரின் வாரிசுக்குக் கணவராக, மறைந்த அரசருக்கு வாரிசாக வெங்கம் பெரிய உடையத் தேவர் தெரிந்தார். அரச குடும்பத்தின் பரம்பரைப் பற்றிச் சரியாகத் தெரியாதவர்களின் கண்களுக்கு, அவர் மறைந்த அரசரின் சொந்த மகனாகத் தெரிந்தார். ஆனால் அவர். அரசரின் மருமகன். அதாவது சகோதரியின் மகன் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சின்ன மருதுவின் சபதம்

மறைந்த அரசரின் மனைவி வேலு நாச்சியார் அல்லது அவருடைய மகள் வெள்ளச்சி நாச்சியார் அல்லது அவருடைய இளவயது கணவர் வெங்கம் பெரிய உடையத் தேவர் என்று யார் பெயரளவில் ஆட்சியாளராக இருந்தாலும், உண்மையில் அதிகாரம் சின்ன மருதுவின் கைகளில் இருந்தது. சின்ன மருது ஒரு வலிமையான ஆட்சியாளராக வளர்ச்சியடைந்தார். இது சூழ்நிலையின் காரணமாக ஏற்பட்டதல்ல. அவரது துணிவு. ஆற்றல் மிகவும் அசாதாரணமானது என்று நிரூபித்தார். ராணி வேலுநாச்சியார் மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்குப் பிரிட்டீஷாரின் அங்கீகாரம் மற்றும் புதிய கொள்கை மட்டும் காரணமல்ல. அதற்கானப் பாதையை வகுத்துக் கொடுத்தது மருதுவின் செயல்பாடுகள்தான். மறவர்கள் எப்போதும் எதிர்ப்பைக் காட்டும் நிலையை ஏற்படுத்தியதும், ஹைதர் அலியின் அக்கறையைத் தமக்குச் சாதகமாக ஆக்கியதும், நவாப்பின் ஆதிக்கத்தை எதிர்க்க
எப்போதும் தயாராக இருந்ததும்தான் ராணியை மீண்டும் சிவகங்கைக்குத் திரும்பவைத்ததற்குக் காரணமாகும். ராணி அனைத்து விஷயங்களிலும், தனிப்பட்ட மற்றும் அரசியல், நாட்டு நிர்வாகம். அரசகுலத்தின் எதிர்காலம் ஆகியவற்றுக்கு மருதுவைத்தான் சார்ந்திருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின்பு. கி.பி.1790-இல் இளவரசி இரண்டாவது வேலுநாச்சியார் (வெள்ளச்சி நாச்சியார்) இளம்வயதில், அதாவது 16 அல்லது 17 வயதில் குழந்தையின்றி இறந்துவிட்டார்.

அவரது கணவர் வெங்கம் பெரிய உடையத் தேவர். மருது சகோதரர்களின் விருப்பத்திற்கிணங்க அரசர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இந்தப் பணிவு மனப்பான்மையால், அகம்படியர் குலப்பெண்ணான பெரிய மருதுவின் மகளைத் (மருதாத்தாள்) திருமணம் செய்துகொள்ள அவர் ஒத்துக் கொண்டார்.

சிறுவயலில் மருது சகோதரர்கள்

சிவகங்கையிலுள்ள அரண்மனையில் ராணியும் அவரது குடும்பத்தாரும் வசதியாக வாழ்க்கை நடத்த விட்டுவிட்டு மருது சகோதரர்கள் அவர்களுடைய சொந்த ஊரான சிறுவயலுக்கு வந்து ஓய்வெடுத்தனர். காளையார் கோயிலிலிருந்து வடக்கே எட்டு மைல் தொலைவில் காடுகளின் நடுவே உள்ள சிறுவயலை மருது சகோதரர்கள் ஓர் இனிமையான பாலைவனச் சோலையாக மாற்றியிருந்தனர். சசிவர்ணர் மற்றும் வடுகநாதரின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி பாரம்பரியமான மறவர்களின் விருந்தோம்பலை அவர்கள் கடைப் பிடித்தனர். சிவகங்கையின் இரண்டு அரசர்களும், அன்றைய அரசியலில் பங்குக் கொண்டு அனைவராலும் கைவிடப்பட்ட மதுரை நாயக்கர்களின் கடைசி வாரிசுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அரசர்களை உருவாக்கும் மனநிலையில் இளவரசர் குமார திருமலையைப் பலமுறை மன்னராக்க முயற்சி செய்து மருது சகோதரர்கள் தோல்வியுற்றனர்.

மறவ அரசர்களால் ஆதரவு கொடுக்கப்பட்ட நாயக்க அரசர் விஜயகுமாரும் அவரது தந்தை பங்காருவும் காலமாகி விட்டனர். ஆனால் சிவகங்கையின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்ட மருதுசகோதரர்களும் மதுரை நாயக்கர்களின் கடைசி வாரிசுரிமையை ஏற்றுக் கொண்டிருந்தனர். உண்மையில் மறைந்த விஜயகுமாரின்மகன் கி.பி.1777-இல் கம்பம் பள்ளத்தாக்குப் பாளையக்காரர்களான போடிநாயக்கனூர், எரசக்கநாயக்கனூர், எழுமலை ஆகிய பாளையக் காரர்களின் உதவியுடன் மதுரை மன்னராக ஆனார் என்று சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு அவரது திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் வாலிபப் பருவத்தைக் கடந்த பின்பு, இல்லாத ஓர் அரசுக்குத் தான் அரசரென்ற பட்டத்தை வைத்துக்கொண்டிருப்பது பயனில்லாத ஒன்று என்று அவர் அறிந்திருப்பார். அவர் அதனை விடுத்து வெளியேறி விடுவதென்று முடிவுசெய்த பின்பு சசிவர்ணத் தேவர். தமது தந்தைக்கு அடைக்கலம் கொடுத்த வெள்ளிக்குறிச்சியில், மருது சகோதரர்களின் பாதுகாப்பில் அடைக்கலம் ஆனார். துணிவுமிக்க மருது சகோதரர்களால், மதுரை அரியணையின்மீது தமக்குள்ள சட்டப்பூர்வமான உரிமையைப் பெற்றுத்தரக்கூடும் என்று நினைத் திருப்பாரோ? ஒருவேளை இருக்கலாம். அச்சமயத்தில் மறவர்கள். மதுரை அரியணையை மீட்பதற்காகப் பாண்டிச்சேரியிலுள்ள பிரெஞ்சுக்காரர்களை அணுகினர்.

மருது சகோதரர்கள் இப்படி ஒரு புகழைப் பெற்றிருப்பதற்குக்காரணம். மக்கள் போற்றும்படியான உடல் வலிமையையும், எவரிடத்திலும் இல்லாத மனதைரியமும்தான். இவையே மக்களின் மரியாதையையும் அன்பையும் பெற்றுக்கொடுத்தது. ஆனால் அவர்களிடம் இருந்த மற்ற நற்பண்புகள்தான் அவரது காலத்தில் இருந்த மற்ற வீரர்களும் தலைவர்களும் அவரிடம் நெருங்கிப் பழகக் காரணமாக இருந்தன. அவர்கள் எவ்வித கேள்வியும் கேட்காமல் அவருக்குப் பணிந்தார்கள் என்றால் அதற்கு மருது சகோதரர்கள் உண்மையான திறமையைப் பெற்றிருந்ததுதான். மருது சகோதரர்களின் மீது பற்றுவைத்து அவருக்கு மிகவும் உண்மையாக மற்றவர்கள் இருந்ததற்குக் காரணம் அவர்கள் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் நடந்துகொண்டதுதான். அவர்களைப் பின்பற்றுபவர் களிடமும், பணியாளர்களிடமும், அவர்கள் மிகவும் தன்மையுடன் நடந்து கொண்டனர். அதனால்தான் அவர்கள் மருது சகோதரர்களைத் தம் கடவுளாக வணங்கினர். மேலும் மருது சகோதரர்கள். ஆங்கில அதிகாரிகளிடம் பேசும்போதும் அவர்கள் திருப்திப்படும் வகையில் பணிவுடன் நடந்து கொண்டனர். இந்த வெளிநாட்டு அதிகாரிகள் ஓய்வாக இருந்தபோது, சிறுவயலுக்கு வந்து, மருது சகோதரர்களைச் சந்தித்துச் செல்வர். அந்தச் சந்திப்பு அவர்களுக்கு எப்போதும் மறக்க முடியாத இனிய சந்திப்பாக இருக்கும்.

“மருது சகோதரர்களில், மூத்தவருக்கு நாட்டு நிர்வாகத்தில் எந்தப் பங்கும் கிடையாது” என்று கர்னல் வெல்ஷ் எழுதுகிறார். மருது சகோதரர்களின் விருந்தோம்பலை அனுபவித்த அவர், அவர்களுக்கு கெதிராகப் படையெடுத்துச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தப் பட்டதாகவும் எழுதுகிறார்.

“மூத்தவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரர். வேட்டையாடுவதிலும் துப்பாக்கிச் சுடுவதிலும் தமது முழுநேரத்தையும் செலவழித்தார். கம்பீரமான தோற்றமும், வலிமையும் கொண்டவராக இருந்த அவர் காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடுவதில் மிகவும் விருப்பம் உள்ளவர். அத்துடன் ஓர் ஆற்காட்டு ரூபாயைத் தன்விரல்களால் வளைத்துவிடுவார் என்று சொல்லப்பட்டது. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், எவ்வித அரசியல் பந்தத்திலும் கட்டுப்படாமல். ஊர் சுற்றுபவராக இருந்தார். எப்போதாவது அருகிலிருந்த தஞ்சை. திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரையிலுள்ள அவரை மதிக்கும் ஐரோப்பியர்களைச் சந்திப்பார். யாராவது வேட்டைக்குச் செல்ல விரும்பினால், வெள்ளை மருதுவுக்குச் செய்தி அனுப்புவர். அவரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அவர்களை அழைத்துச் சென்று வேட்டையை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பார். அத்துடன் வேட்டையாடுபவர்களது பாதுகாப்பையும் அவர் கவனித்துக் கொள்வார்.

வெள்ளை மருது. தனது விருந்தினர் களுடன் வேட்டைக்குச் செல்லும்போது. ஒரு புலியைக் கண்டுவிட்டால். எத்தனை வலிமையான, ஈட்டிகள் ஏந்திய வீரர்கள் உடன் இருந்தபோதும். அவர்தான் முதலில் அந்த மிருகத்துடன் போரிட்டுக் கொல்வார். அவருடைய ஐரோப்பிய நண்பர்கள் வேட்டையாடுவதற்காக ஆபத் தில்லாத முயிைல் காட்டுப் பன்றிகள். கடம்பை மான்கள், புள்ளிமான்கள், ஆண் மயில்கள் போன்றவற்றை அவர்களின் முன் விரட்டுவார். அவர்கள் அவற்றை ஏராளமாகக் கொன்று குவிப்பர். கி.பி. 1795-இல் நான் மதுரையில் தங்கி இருந்த போது, இந்த மிகச் சிறந்த வேட்டைக் காரர்களின் வீரப்பிரதாபங்களை நான்கேள்விப்பட்டிருக்கிறேன், மிகச்சிறந்த இளம் தளபதிகளில் ஒருவரான இவருக்கு அரசியலில் ஆர்வமில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

இந்த வளம் மிகுந்த பரந்தப் பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த சின்ன மருது, சிறுவயலைத் தன் இருப்பிடமாகக் கொண்டிருந்தார். அவர் கறுப்பு நிறமாக இருந்தாலும், கம்பீரமான கட்டுடலுடன், இனிய முகத்துடன். பணிவு நிறைந்து, எவராலும் சுலபமாகச் சந்திக்கக்கூடிய மனிதராக இருந்தார். அவர் இப்பகுதி மக்களை ஆட்சிசெய்து வந்தாலும், சட்டப்படியான செயல்களுக்கு மட்டுமே தமது ஒப்புதலைத் தெரிவிப்பார். அவருடைய அரண்மனையில் பாதுகாவலர் எவரையும் வைத்துக் கொள்ளவில்லை. கி.பி.1795-இல் நான் அவரைச் சென்று சந்தித்தபோது, ஒவ்வொருவரும் அவரைச் சுதந்திரமாகச் சந்தித்துவிட்டு திரும்பி வந்தனர். குடிமக்களின் தந்தையாகக் கருதப்பட்ட அவருக்கு ஆண்டவனின் அருள் எப்போதும் கிடைக்க வேண்டுமென்று அனைவரும் வேண்டிக் கொண்டனர்.

சின்ன மருது ஆட்சி செய்யும் பிரதேசம் வழியாகத் தற்செயலாக நான் பயணம் செய்தபோது, அவர் எனக்கு நண்பரானார். நான் மதுரையில் தொடர்ந்துத் தங்கியிருந்தபோது மிக உயர்ந்த அரிசி. பழங்கள் போன்றவற்றை அவர் எனக்குப் பரிசாகக் கொடுக்கமறப்பதில்லை. அதிலும் குறிப்பாக அவர் அளித்த, தடித்த தோலுடைய இனிப்பான ஆரஞ்சுப் பழங்களை இந்தியாவில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. அவர் எனக்கு ஈட்டி எறியவும், (கள்ளர்களின்) வளைதடியைச் சுழற்றவும் கற்றுக்கொடுத்தார். இந்த வளைதடியை நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் பார்க்க முடியாது. அவர் நூறு கெஜ தூரத்திற்குள் எந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கியும் எறியும் திறமை படைத்தவர். ஆனால் இவரைத்தான் போர் என்ற விதியின் காரணமாக, ஒரு விலங்கைப்போல் நான் துரத்த வேண்டியிருந்தது. பின்னர் அவர் மிகவும் காயம்பட்டு, சாதாரண சிப்பாய்களால் கைது செய்யப்பட்டார். பின்னர் தொடை முறிந்த நிலையில் சிறையில் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

கடைசியாக, அவரும் அவரது வீரம்மிக்க சகோதரன் மற்றும் அவர்களின் வீரத்திற்குச் சற்றும் குறையாத மகனும், அவரது ஆதரவாளர்களுக்கு முன்பு பொதுத் தூக்குமேடையில் தூக்கில் தொங்குவதை நான் பார்த்தேன்.”

அவர்களின் மனஉறுதியை அவர்கள் வீழ்ந்த சூழ்நிலை எப்படி வெற்றி கொண்டது? அதுவும் அவர்கள் நட்பு வைத்திருந்த ஆங்கில அதிகாரிகளே, அவர்களின் எதிர்பாராத முடிவுக்கு ஏன் காரணமானார்கள்? தமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் ஏன் சிறகொடிந்த பறவைகளாகிப் போனார்கள்? என்றெல்லாம் கர்னல் வெல்ஷ் புலம்பியது இன்னும் மறவர் நாட்டில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வரலாறு. ஒருபோதும் இந்தப் படுகொலையை மறக்காது.

அவர்களுடைய தலைவிதி மாறியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய புகழ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. சின்ன மருது ஒருவரிடமிருந்து பெற்ற உதவி மிகச்சிறியதாக இருந்தாலும், அவர் அதை ஒருபோதும் மறக்காத பெருந்தன்மை கொண்டவர். ஈகைக் குணத்துடன் அவர் பலருக்கு வழங்கிய கொடைகளை, அவருக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை ஏற்பவர்கள் மதித்து அவற்றை நிறை வேற்றி வைக்க வேண்டுமென்ற அவரது கடைசி ஆசையை, அவரது ஆதங்கத்தைத் தூக்குமேடை ஏறியபோது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்களிடம் மிகுந்த மனச்சஞ்சலத்துடன் அவர் மன்றாடிக் கேட்டுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
(நூலிலிருந்து)

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்… -தமிழில்: மு.பாலகிருஷ்ணன் பேரா.எஸ்.ஆர். விவேகானந்தம்
விலை: 150/-
வெளியீடு: அகநி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/maravar-seemai-oru-paathiriyarin-paarvaiyil/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers