தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய வணிகர்கள்: ஒரு விளக்கம்

தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய வணிகர்கள்: ஒரு விளக்கம்

தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், இஸ்லாமியர் என்ற சொற்களுக்கு விளக்கம் வேண்டும். மூர் எனும் சொல் பொதுவாக இந்தியா, பாரசீகம், துருக்கி மற்றும் அரபு நாடுகளில் இருந்த இஸ்லாமிய வணிகர்களைக் குறிக்கும். நவீன காலத்திற்கு சற்று முந்தைய காலகட்டத்தின் ஆய்வுகளில், சீனத்து மூர், குஜராத்தி மூர், கருப்பினத்து மூர் எனப் பல சொற்கள் பதியப்பட்டுள்ளன. இப்படி இனம், வட்டாரம், மொழி நாகரிகங்களின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அடையாளப் படுத்தப்பட்டனர். இங்கு தமிழ்ப் பேசும் வணிகர்கள் என்பது, தமிழ்ப் பேசும் சைவர்களையும், தமிழ்ப் பேசும் வைணவர்களையும் சுட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்த ஐரோப்பியர்கள் இவ்விரு வணிகர் கூட்டத்தினையும் சமாளிக்கவேண்டியிருந்தது. இவ்விரு குழுவினரும் தென்கிழக்காசியப் பகுதியில் சோழியர் மற்றும் கலிங்கர் என்று அழைக்கப்பட்டனர். ” எனவே, இங்கு தமிழ்நாட்டின் கடற்கரை யோரங்களில் தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய (மரக்காயர் மற்றும் லப்பெ) வணிகர் குழுக்களின் தோற்றூவாயினைத் தேடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் கடல்தாண்டிய வணிகத்திற்காக எவ்வாறு ஆளும் வர்க்கத்தால் வெவ்வேறு துறைமுகங்களில் ஆதரவுபெற்றனர் என்பதை அறியும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சில பொருத்தமான கேள்விகள் கேட்கப்பட வேண்டும். எங்கு எப்போது தமிழ் சைவ வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய வணிகர்கள் வணிக நடவடிக்கைகளை வளர்த்தனர்? ஆசியாவில் ஐரோப்பியர்களின் அதிகார விரிவாக்கத்தின்போது அவர்கள் எவ்வாறு நிலைபெற்றனர். இவ்வட்டாரத்தில் கடல்சார் போக்கு தாமே நிலைத்திருந்த ஒன்று தானா? துறைமுகப்பட்டினங்களில் உருவான ஒன்றா? இங்கு வணிக வளர்ச்சியின் உந்துதலால் இயல்பாகவே வணிகத் துறைமுகங்கள் எழுந்தனவா? ஐரோப்பியர்கள் எவ்வாறு தமிழ் வணிகர்களை நடத்தினர்? அவர்களுக்கு எவ்விதமான அரசியல் வலைபின்னல் உதவியது? அவர்கள் எவ்வாறு உள்ளூர் துறைமுகத்தின் நடைமுறையில் பொருளியல் ஆளுமையினைக் கொண்டிருந்தனர்? இதற்கான விடைகள் ஆசிய மொழிகளில், தமிழ் மொழி ஆவணங்களில் கிடைக்கவில்லை. எனவே, சமகாலத்தில் ஐரோப்பிய மொழிகளில் கிடைத்த ஆவணங்கள் இவ்வாய்விற்கு பெரிதும் பயன்படுகின்றன. கேள்விகளுக்கான விடைதேடும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டு வணிகம் தனியார்மயப்பட்டு இருந்ததால், அது பற்றிய விபரங்கள் ஆவணங்களில் விரிவாகப் பதியப்படவில்லை. எனவே, இந்நூல் எழுதும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. நவீன காலத்தின் சற்று முந்தைய காலகட்டத்தின் இருள் பகுதிக்கு சற்று ஒளியூட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் சைவ, வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய வணிகர்கள் உலகின் வெவ்வேறு துறைமுகங்களோடு கொண்டிருந்த வணிக உறவினை அறியும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. மலாக்கா, ஜாவாவின் பெண்டன், சுமத்ராவின் அச்செ, தாய்லாந்தின் துறைமுகங்கள், சயாமின் தலைநகர் அயூத்தயா, பெராக் மற்றும் பினாங்கு அத்துறைமுகங்கள் ஆகும். தமிழ் வணிகர்கள் எவ்வாறு மணிலா மற்றும் மகாசார் போன்ற இடங்களுக்குச் சென்றனர் என்பதும்
ஆராயப்படுகிறது. (நூலிலிருந்து)

தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும் – எஸ். ஜெயசீல ஸ்டீபன்
விலை: 190 /-
வெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/tamizh-vanigargalum-thenkizhakkaasiyavin-mannargalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers