மாட்டுக்கறியை விடுங்க, யானைக் கறியே பிராதான உணவாக இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொல்குடியினர் மத்தியில் மிக முக்கிய உணவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிந்துசமவெளி, ஹரப்பா நாகரீகத்தில் யானையை உணவாக உண்ட அடையாளங்கள் தொல்லியல் எச்சங்களில் கிடைத்த எலும்புக்கூடுகள், தசைகளின் எச்சங்கள் வாயிலாக அறியமுடிகிறது. சங்கத் தமிழர்களும் இலக்கியங்களை யானைகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதைக் குறித்துள்ளனர்.
யானைகள் உணவுக்காக கொல்லப்படுவதை முதன் முதலில் தடை செய்தவர்கள் மௌரியர்கள். தடை செய்ததன் நோக்கம், யானைகள் உணவுக்காக உபயோகிப்பதை விட அரசு உருவாக்கத்திற்கும், போருக்கும் யானைகள் மிக முக்கிய பங்காற்றின. எனவே, உணவுக்காக அவை அழிவதைத் தடுக்க தடை செய்யப்பட்டன. இந்தியா முழுக்க இருந்த காடுகளில் யானைகளை பலுகிப் பெருகி இருந்தன. சில திராவிட பழங்குடி இனத்திற்கு யானை வேட்டை நிரந்தர உணவை அளித்ததாகக் கருதப்படுகிறது. மௌரியர்கள் காலத்தில் ஆண்டுக்கு சுமார் 2% காட்டு யானைகள் கொல்லப்பட்டன.
வெறும் மேய்ச்சல் சமூகமாக இருந்தவரை மாட்டிறைச்சியும் இவ்வாறே, உண்ணப்பட்டன. ஆனால் மேய்ச்சலை விட நிரந்த அதிக உணவு தரும் உழவுக்கு மாடு பயன்பாட்டிற்கு வந்தவுடன், அது உணவு தேவைக்காகக் கொல்லப்படுவது பொருளாதார பலன் அளிக்காது எனக் கருதி கொல்லப்படுவது தீங்காகக் கருதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
தென் இந்தியாவில் யானை இறைச்சியை உணவாக உண்ணும் பழக்கம் 6 ஆம் நூற்றாண்டு வாக்கில் கைவிடப்பட்டது. ஆனால், வட இந்தியாவில் மிக நீண்ட காலம் இது தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, தொல்குடி வழிபாடாக இருந்த யானை வழிபாடு, ஆனை முக பிள்ளையார் வழிபாடாக மற்றமடைந்ததால் அறிஞர்கள் கருதுகின்றனர்.
இன்றும் ஆப்ரிக்காவில் யானை, இறைச்சிக்காகக் கொல்லப்படுகிறது.
சாணக்கியர், தான் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில், சமவெளிப் பகுதியில் இருக்கும் யானைகளை அழித்து விட்டு அங்கு புதிய ஊர்களை உருவாக்க வேண்டும் எனக் கூறுகின்றார்.
புறநானூறு சங்கப்பாடல்
யானை வேட்டுவன்
யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன்
வறுங் கையும் வருமே.
(புறநானூறு பாடல் -214. நல்வினையே செய்வோம்)
யானையை வேட்டையாடச் செல்வோரை யானை வேட்டுவர் என்றும், அவர்களின் வேட்டை கொள்கையால் உயர் நோக்கம் கொண்டவர்; அவர்கள் திறமையும் பெரிது; இலக்கும் பெரிது. எனவே அவர்களின் குறி தப்பாது, நிச்சயம் அதில் வெற்றியடைவர், என்றும் கூறுகிறது
அதே போல குறும்பூழ் என்பது காடையின் மறு பெயர். அது உருவத்தில் மிகச் சிறிய பறவை; அதனைப் பெற வேட்டையில் சென்று வலை விரிப்பர். யானை வேட்டையை கருத்தில் கொள்ளும்போது அது உருவத்தில் சிறியது பெரிதாக வேட்டை நுணுக்கம் தெரியாதவராய் இருப்பார். அவ்வேட்டைக்குச் செல்வதால் நாள் முழுவதும் வேட்டையாடினாலும் யானை வேட்டை அளவுக்குப் பெரிய அளவு இறைச்சி கிடைத்துவிடாது. சிலநேரங்களில் , வேட்டையில் அது பெறாமல் கூட திரும்பி விடலாம். அவர் நோக்கம் சிறியது என்பதால், அதனால் பலனும் அவரின் ஊக்கமும் சிறியது, இச்செயலைச் செய்வதால் ஆக்கமும் சிறியது ஆகும். இறைச்சிக்காக நடந்த யானை வேட்டையைப் பற்றிக் கூறும் சங்கப்பாடல் இது.
எனவே, கடினமானதாக இருத்தலும் வாழ்வில் பெரிய இலக்குகளை நோக்கி நமது கவனம் திரும்பினால், வளமுடன் வாழலாம் எனச் சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றது.
இதனைப் பாடியவர் சங்க காலச் சோழ மன்னர் கோப்பெருசோழன் ஆவார்.