ஆலய நிர்மாணம்

ஆலய நிர்மாணம்

நமது நாட்டில் சைவாகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம், தந்திரம் முதலியனவற்றை யொட்டியும் ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டோடு சைவ உபாகமங்கள் நூற்றுப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் அறுபத்துநான்காகும். பாஞ்சராத்ராகமங்கள் நூற்றெட் டென்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்ரமும், வைகானஸமுமாகும். குமாரதந்திரம் முதலிய தந்திர நூல்களை மேற்கொண்டு எழுந்த கோவில்களும் பல உள. இவை ஒவ்வொன்றும் ஆலய நிர்மாணம், பிரதிட்டை, நித்திய பூஜை, நைமித்திக பூஜை, திருவிழாக்கள், தீக்கைகள், மந்திரங்கள் முதலியவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன.

எந்த ஆகமத்தை ஒட்டி ஓர் ஆலயம் நிறுவப்பட்டதோ அந்த ஆகமத்தை ஆதாரமாகக் கொண்டு பூஜைகள் முதலியன நடைபெற்று வருகின்றன. ஆதலால் ஆலய பூஜை, பிரதிட்டை முதலியன பலவிதமாக நடந்து வருகின்றன. ஆலய நிர்மாணங்கள் ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், ஆந்திரதம் என நான்கு வகைப்படும்.

ஆவர்த்தம் :

ஓர் ஆலயத்தைப் புதிதாகக் கட்டிமுடித்து முதன் முதலாக விக்கிரகஸ்தாபனம் முதலியன செய்து அனுக்ஞை முதல் கும்பாபிடேகம் வரை செய்து முடிப்பதாகும்.

அநாவர்த்தம் :

ஆற்றுநீர்ப் பெருக்காலோ, விடாமழை பொழிந்தாலோ, பூமி அதிர்ச்சிகளாலோ, மணல் மூடியதாலோ ஆலயங்கள் அழிந்துபோனால் திரும்பவும் அதைக் கட்டிமுடித்து விக்கிரகங்கள் முதலியவற்றைப் புதிப்பித்துச் சீர்திருத்தம் செய்வதாகும்.

புனராவர்த்தம் :

இதனை ஜீர்ணோத்தாரண அட்டபந்தன மகாகும்பாபிடேகம் என்பர். நடைமுறையில் இருக்கும் ஆலயத்தில் காலப்போக்கால் எவையேனும் சில பாகங்கள் சிதைந்து போனால், அவற்றைப் பூர்த்தி செய்து விக்கிரகங்கள் அலையாது அசையாது இருக்கும்படி மருந்துகள் சார்த்தி, எல்லாக் கிரியைகளையும் இனிது நடத்தி, யாக சாலைகளில் கும்பங்களில் எழுந்தருளப் பண்ணியிருந்த மூர்த்திகளைத் திரும்பவும் கோவில் விக்கிரகங்களில் ஆவாஹனம் பண்ணுதலாம். எட்டு சக்திகளோடு இறைவனை இணைப்பதால் அட்டபந்தனம் என இதனைக்கூறுவர்.

அந்தரிதம் :

சில ஆலயங்களில் திருடுதற் பொருட்டு அசுத்தம் நிறைந்த பொருள்களோடு திருடர்கள் புகுந்து ஆலயத்தை அசுத்தப்படுத்தி விடுகின்றனர். அவ்வசுத்த நீக்கத்தின் பொருட்டுச் சம்ப்ரோட்சனம் செய்யப்படும். அதுவே அந்தரிதம் ஆகும். (நூலிலிருந்து)

இந்துமத இணைப்பு விளக்கம்-மகாவித்துவான் கே. ஆறுமுக நாவலர்
விலை: 280/-
வெளியீடு: இந்து சமய அறநிலையத்துறை
Buy this book online: https://www.heritager.in/product/hindumadha-enaippu-vilakkam
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers