திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் – சிவகுரு ஜம்புலிங்கம்
திருப்புறம்பியம், மண்ணியாற்றங்கரையில் கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையிலுள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3கி.மீ தொலைவிலுள்ள இன்னம்பரை அடுத்து 3கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊராகும். இங்குள்ள சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற புகழைக் கொண்டதாகும். காவிரி வடகரைத் தலங்களில் 46ஆவது இடத்தில் உள்ளதாகும். இங்குள்ள இறைவன்…