கிரேக்க பாகவதன் – பிரதிக் முரளி
இன்றைய மத்திய பிரதேசத்தில், “பேஸ்” என்கிற கிராமம் அமைந்துள்ளது. இங்கு கிரேக்கனான “ஹீலியோடோரஸ்” என்பான் நிறுவிய கருடக்கம்பம் உள்ளது. மிகவும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட, பல சிந்தனைகளை தூண்டக்கூடிய வண்ணம் அவனது கல்வெட்டும் இந்த கம்பத்தில் கிட்டுகிறது. அதில்,கூறுவதாவது, “இந்த தேவதேவனான வாசுதேவனின் கருடதுவஜம், ஹீலியோடோரஸால் நிறுவப்பட்டது” என்பது. இவன் யார் ? காலம் யாது ?…