Category கட்டுரைகள்

தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை – ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள் அருகருகேஇருக்கும் உருவப்பொறிப்புடன் கூடிய முத்திரையொன்றுகிடைத்துள்ளது.(மார்ஷல் முத்திரை எண் 338). நகரைக் குறிக்கும் குறியீட்டுடன்…

அதியமான்கள் – வரலாற்று சுருக்கம்

தகடூர் வீழ்ச்சிக்குப் பின்னர் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய அதியமான் மரபு குறித்த செய்திகளை அறிய இயல வில்லை. மழகொங்குப் பகுதியில் பாண்டியரால் வெற்றி கொள்ளப்பட்ட அதியர்கள், அதியமான் மரபின் வழித் தோன்றலாவர். ‘அதியமான்’ எனும் தமிழ்ச் சொல்லே வட மொழியில் அதியர் எனப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டிய அரசர்கள் மழகொங்குப் போரில் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளமையால் அதியமான்…

தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி

குலமுறை அமைப்பு : குறுமன்ஸ் பழங்குடி சமுதாயம் குலமுறை சமுதாயம், குலங்களை அடிப்படையாகக் கொண்டது. குலமுறை சமுதாயம் தமிழகத்தில் பல இன மக்களிடையில் காணப்படுகின்றது. ஆனால் இம்முறை மற்ற சமுதாயத்தினரிடம் அதிகம் இல்லை. சில நேரங்களில் மட்டும் தென்படுகின்றது. மாறிவரும் நாகரிக உலகில் குலமுறை என்பது கடைபிடிக்கப்படாததாக உள்ளது. சமுதாயத்தில் மக்களின் தொகை கூடும்போதும், வெளியிலிருந்து…

கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும் குறுமான் சாதியுடன் கண்ணகியை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. கேரள வயநாடு…

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு (Structure of a Caste) ஒரு சாதியைப் பொறுத்தவரை அந்த சாதியில் உறுப்பினராக இருப்பவர் அந்த சாதிக்குள் இருந்து மட்டுமே பெண் எடுக்க முடியும். இந்த அடிப்படையில் ஒரு சாதி என்பது அகமணக்குழுவாக (endogamous group) செயல்படுகிறது. இப்படி அகமணக் குழுவாகத் தமிழகத்தில் இனக்குழுக்கள், சாதி என்ற பெயரில் சுமார் 400க்கு…

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

இசைக்கருவிகள் : தவில், நாதசுரம், பம்பை, உறுமி, தமுக்கு, தாளம் (சால்ரா) ஆகிய இசைக்கருவிகள் இணைந்து வாசிக்கும் இசைக்கு நையாண்டி மேள இசை என்றும் நையாண்டி மேளச் செட்டு என்று குழுவினரையும் அழைக்கின்றனர். உறுமி எனும் தோலிசைக் கருவி 14ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் வருகையின்போது இடம்பெற்றிருந்த ஒரு தோலிசைக் கருவியாகும். இக்கருவியை வாசித்தவர் அருந்ததியினர்.இவர்கள் தாழ்த்தப்பட்ட…

பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்

பாண்டிய நாட்டில் பௌத்த சமயத்தை விடச் சமண சமயமே செல்வாக்குடன் விளங்கியது. பௌத்த சமயத்தவரை விடச் சமண சமயத்தவரே சைவ, வைணவர்களின் பொது எதிரிகளாக விளங்கினர். இதற்குக் காரணம் சமணர்களின் செல்வாக்கு முழுமையாக அழியாது ஆங்காங்கே நிலைத்து நின்றமை காரணமாகும். பாண்டிய நாட்டில் யானைமலை போன்ற இடங்களிலும், நகரங்களிலும் ஏராளமான சமணர்கள் இருந்தனர் என்பதைச் சம்பந்தரின்…

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள்

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள் : பழந்தமிழர்கள் நகரங்களை உருவாக்குவதில் திறமைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படைப் போன்றவை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அதைப் போலவே சிலம்பு, மேகலை காப்பியங்களும் நகரங்கள் குறித்தும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டும்…

கழுகுமலை வெட்டுவான் கோவில்

வடக்குப் பூலாங்குளம் : கழுகுமலைப் பேரூருக்குத் தெற்கே, சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில், கழுகுமலை- தேவர்குளம் சாலைக்குக் கிழக்கே. வடக்குப்பூலாங்குளம் என்ற சிறிய கிராமம் இருக்கிறது. இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய வடிவிலான, சுமார் மூன்றடி உயரம் இரண்டடி அகலமுள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று. ஆட்சியாண்டு குறிப்பிடப்படாத, பிற்காலப் பாண்டியர் கால உதிரிக்…

நல்லூர் மாடக் கோவில்

நல்லூர் ஓர் அறிமுகம் : நல்லூர் என்ற பெயரில் தமிழகமெங்கும் பல ஊர்கள் உள்ளன. சங்ககாலம் முதல் சில நல்லூர்கள் இருந்து வருகின்றன. சான்றாக இடைக்கழி நாட்டு நல்லூர் என்ற ஊர் சங்ககாலப் புலவர் நத்தத்தனாரை ஈன்றெடுத்த ஊராகும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் நல்லூர் என்ற பெயரில் ஊர்கள்…