Category கட்டுரைகள்

அழகன் குளத்தின் சங்ககாலத் தமிழர் ரோமானிய வணிகம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ஆர்ப்பரித்து வரும் வைகை ஆறு கடலைச் சேருமிடம் அது. அங்கு ஒரு அழகிய துறைமுகப் பட்டினம். உள்நாட்டிலிருந்து சரக்குகளைக் கொண்டுவர, வந்த சரக்குகளை எடுத்துச் செல்ல வசதியாக இருப்பதற்காக, துறைமுகங்களைத் தமிழர்கள் ஆறுகள் சங்கமமாகும் இடங்களிலேயே அமைத்திருந்தனர். கடலில் பல நாட்டுக் கலன்கள் வரிசையாக நிற்கின்றன. சற்றே வித்தியாசமான வடிவத்தில்…

அப்துல்லாபுரம் அரண்மனை – சரவணன் ராஜா

பல்வேறு அரசபரம்பரைகள் வேலூரில் ஆட்சி புரிந்திருந்தாலும், அவர்கள் வாழ்ந்த அரண்மனை என்று ஏதும் காணப்படவில்லை, அந்த வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் செல்லும் நிகழ்வில் சில விபரங்கள் வியப்பூட்டும். வேலூர் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து ஆம்பூர் செல்லும் வழியாக 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்துல்லாபுரம் கிராமம். நெடுஞ்சாலை ஓரத்தில் அழகிய வேலைப்பாடுள்ள இடிந்த…

பூக்“கல்” மீண்டும் மலருமா? க.கோமகள் அனுபமா

”என்னங்க, நம்ம வீட்ட செமையா கட்டிரனும். வீட்டுக்கு என்ன டைல்ஸ் போடுறது? எனக்கு ஒரு யோசனை, நம்ம வீட்டுக்கு எங்க ஊரு கல்லு போட்டா என்ன? பாரம்பரியமாகவும் இருக்கும், பாக்க அழகாகவும் இருக்கும், நலிந்துவரும் தொழிலுக்கு வேலைவாய்ப்பு குடுத்த மாதிரியும் இருக்கும். அது மட்டும் இல்லாம சுற்றுப்புறச் வழலுக்கு மாசு இல்லாமையும், நம்ம சந்ததிக்கும் ஆரோக்கியமாகவும்…

போர்வல் சேவல் – மங்களகௌரி, மலேசியா

சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில்தான் “கோச்சை” என்ற வார்த்தையை முதலில் வாசித்த அனுபவம் எனக்கு. தவறாக சொல்லவில்லை என்றால் ஒரு வேளை ஆடுகளம் திரைப்படம் வந்த நேரமாக இருக்கலாம். ஆனால் ஆடுகளத்திற்கு முன்பே, மிகச் சிறிய வயதிலேயே எனக்கு ஓரளவு சேவல்கட்டு பற்றித் தெரியும். “காலங்காத்தால எதுக்கு இந்தக் கிளாந்தான்காரனுங்க சேவக்கோழிய புடிச்சிக், கம்முக்கட்டுல…

தமிழகத்தில் ராவணப் பெருவிழா

இந்தியப் பெருநிலத்தில் பல இடங்களில் ராவணவதம் என்பது விமர்சையாகக் கொண்டாடப்பட்டாலும், இன்றும் சில இடங்களில் ராவண வழிபாடுமுறை பழங்குடி மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தென்னிந்தியா மட்டுமல்லாது மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசம்வரையிலும் ராவண வழிபாடு பரவியுள்ளது. கோண்டு, பில்லா போன்று எழுபது பெருநிலப் பழங்குடி மக்கள் இன்றும் ராவண…

கிராதகா!! அழகான காட்டுமிராண்டிகள் – பெருநிலத்தின் கதை

23 ஆம் புலிக்கேசி படத்தில் பின்வரும் இக்காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும் என எண்ணுகிறேன். பணி நேரத்தில் துயில் கொள்ளும் காவலனின் மூக்கில் மீசையை விட்டு குடைந்து, கிராதகா என்று வடிவேல் முறைத்துவிட்டு செல்லும் காட்சி. தமிழில் வழங்கும்¢ வழுச் சொற்களில் சில, பூர்வீகக் குடிகளை குறிக்கும் சொற்களாகும். அதில் ஒன்று தான் “கிராதகா” எனும் சொல்லும்.…

அருகரின் பாதையில் – வேலுதரன்

சமணத்தின் எச்சங்களைத்தேடி ஒரு பயணம் வட ஆற்காடு மாவட்டத்தில்… சென்ற வாரம் வள்ளி மலைக்குச் செல்லலாம் என்று முகநூலில் விருப்பம் தெரிவித்துப் பதிவிட்டபோது நண்பர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆற்காட்டில் இருந்து கூட்டிச் செல்வதாகக் கூறினார், மேலும் திருப்பான் மலையில் பல்லவர் மற்றும் சோழர் காலக் கல்வெட்டுக்களுடன் சமண மதத்தின் எச்சங்களையும், ஒரு பல்லவர்காலக் குடைவரை…

தாராசுரம் (நேரிசை ஆசிரியப்பா) -கவிஞர். வெண்கொற்றன்

குடந்தை மாநகர் குடபுறம் தாரா சுரமெனும் பதியில் சொல்லுக் கடங்கா வடிவுடை சிற்பக் கடலினைக் கல்லில் ஐரா வதீசர் அழகுத் தளியெனச் செய்ராச ராசன் சிந்தை ஊறிய…………………5 அழகியற் காதலை அணுவினும் சிறிதாய் அறியவும் நமக்கு ஆவ தாமோ? பெரிய கோயிலின் சிறிய வடிவாய் அரிய கலையின் அன்னை மடியாய் அளவில் உயர்வு ஆக்கி டாது…

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் – சிவகுரு ஜம்புலிங்கம்

திருப்புறம்பியம், மண்ணியாற்றங்கரையில் கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையிலுள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3கி.மீ தொலைவிலுள்ள இன்னம்பரை அடுத்து 3கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊராகும். இங்குள்ள சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற புகழைக் கொண்டதாகும். காவிரி வடகரைத் தலங்களில் 46ஆவது இடத்தில் உள்ளதாகும். இங்குள்ள இறைவன்…

மல்லையின் ஒற்றுமை விளி – பிரதிக் முரளி

பல்லவர் கலையறியாதாரிலர். மண்டகப்பட்டில் அரும்பி, மல்லையில் விரிந்து, கச்சியின் கற்றளிகளாய்ப் பூத்த பல்லவக் கலைக்கொடியின் மலர்கள் இன்றும் மணம் வீசித் தன் பக்கம் இழுக்கின்றன. என்றோ ஏழாம் – எட்டாம் நூற்றாண்டு என்றில்லாமல், இன்றும் இந்தக் கலைக்கூடங்கள், கடி பொழில் வாழ் கடல்மல்லையில் சாமானியர்களை நிழற்படங்களுக்காகவும், அறிஞர்களை ஆராய்ச்சிக்காகவும், கலை ஆர்வலரைச் சிற்பங்களுக்காகவும் தன்னகத்தே பல…