வட்டெழுத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எழுச்சியும்
வட்டெழுத்தின் வளர்ச்சியைக் குறித்து ஆராயும் போது அக்காலத்தில் தமிழகத்தின் அரசியல் நிலைமையைக் குறித்து கவனிக்க வேண்டும். கி.பி.6-ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் களப்பிரரை வென்ற பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் பாண்டிய நாட்டில் நிலைபெறச் செய்தனர். ஆட்சியைப் பிடித்த பாண்டியர் தங்கள் பேரரசைக் கொங்கு நாட்டின் வடபகுதி வரை பரப்பினர். இவர்களது ஆட்சிக் காலம் சுமார் கி.பி.…