கலை வரலாற்றில் கணபதி :
‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது. ஏறத்தாழ இதே காலத் தினைச் (C. 1000 B.C.) சேர்ந்த கலைச்சின்னம் ஒன்று தொல்லியலாளரால் மேற்கு ஈரானின் லூரிஸ்டன் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் யானைத்தலையுடன் மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கரங்களையுடைய இவ்வுரு வம் நாகத்தையும் வாளையும் வைத்துள்ளது. நாகர்கள் கணபதியின் உருவத்தை அவரது தலைக்குமேல் நாகத் தலைகள் உள்ளதுபோல் அமைத்து வணங்கியுள்ளனர். இன்றும் கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள பிள்ளையார் அல்லது கணபதி உருவத்திற்குப் பக்கத்தில் நாகக்கல்லும் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மாயையின் சின்னமான நாகத்தை அவர் இடுப்பிலும் அணியாகக் கட்டியிருக்கின்றார். நாகமும் மரமும் பொது வாக அனைத்து இந்தியக் கடவுளரோடும் பின்னாளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் அக்காவியத்தை வியாசர் சொல்ல கணபதி எழுதியதாகக் குறிப்பிடுவது பின்னாளில் சேர்க்கப்பட்ட செய்தியாகும்.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகரின் மகளால் கணபதி வழிபாடு இந்தியா விலிருந்து நேபாளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது எவ்வகையில் உண்மை என்பதற்குச் சரியான ஆதரங்கள் இல்லை. கணபதி என்ற சொல் முதன்முதலில் குப்தப் பேரரசர் சமுத்திர குப்தரின் (கி.பி. நான்காம் நூற்றாண்டு) அலகாபாத் தூண் கல்வெட்டில்தான் வருகிறது. அவர் கணபதி நாகர் என்ற அரசனை விரட்டியடித்ததாகக் கூறுகிறார். இந்தியாவில் கடவுள் பெயரை மனிதர்களுக்கு வைக்கும் வழக்கம் உண்டாகையால் அக்காலத்தில் நாக அரசன் தான் வணங்கிய கணபதியின் பெயரை தனக்குக் கொண்டிருக்கக்கூடும்.
கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்தூபம் ஒன்று இலங்கையில் மிகிந்தலேக்கு அருகில் உள்ளது. கந்தக செதிங்க ஸ்தூபம் எனப்படும் இதில் உள்ள சிற்பத் தொகுதி ஒன்றில் நடுவில் நிற்கும் யானைத் தலையுடைய உருவத்தை நோக்கி இரண்டு வரிசைகளாகக் கணங்கள் செல்வதைக் காணமுடிகிறது. நடுவில் உள்ள யானைத்தலையுடைய உருவம் கணபதியாக இருக்கக்கூடும்.
இந்தியாவில் உள்ள தொன்மையான கணபதிச் சிற்பங்களில் ஒன்று தியோகாரில் உள்ள குப்தர்களது தசாவதாரக் கோயிலில் உள்ளதாகும். இச்சிற்பம் அனந்தசயன விஷ்ணு சிற்பத்தொகுதியின் இடப்பக்கத்தில் தூணில் உள்ளது.
மேல்வரிசையில்பார்வதியும் சிவனும் விடைமேவேறி அமர்ந்துள்ளனர். சுந்தன் மயில்மேல் அமர்ந் துள்ளார். விஷ்ணுவின் தொப்புளிலிருந்து வெளிவந்த பிரம்மா தாமரையில் வீற்றிருக் கின்றார்.
சிவனுக்கும் பார்வதிக்கும் அருகில் இந்திரன் (அ) சூரியன் (2) அமர்ந்திருக் கின்றார். இதுவே அறுவகைச் (சண்மதம்) சமயத்தைக் காட்டும் முதலாவது சிற்பத் தொகுதியாகும்.இதற்குக் காலத்தால் முந்தைய (கி.பி. 401) குப்தர்களது உதயகிரி குகை எண் ஆறின் முகப்பின் இடப்புறம் கணபதியும் வலப்புறம் துர்க்கையும் (மகிஷமர்த் தினியாக) பொறிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பக்கங்களிலுமே விஷ்ணுவின் சிற்பம் உள்ளது. இச்சிற்ப அமைப்புகள் பார்வதிதேவி விஷ்ணுவை வணங்கி பணியாகவிரத மிகுந்ததையும் விஷ்ணுவே கணபதியாகத் தோன்றியதையும் சனியின் பார்வையால் தலைபோய்விடவே விஷ்ணுவே யானைத்தலை ஒன்றைக் கொண்டுவந்து பொருத் தியதையும் கூறுகின்ற புராணக்கதையோடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய அளவில் அமைந்துள்ளது எனக்கருதலாம் அல்லது மகிஷனுடன் சண்டையிடுவதற்காகத் தாயே முழுமுதற்கடவுளான கணேசரை வணங்கிச் செல்வதாகவும் இதனைக் கருதலாம். மதுராவில் சிகப்புக் கல்லில் கணபதிச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் உள்ள இவ்வுருவம் கி.பி. 5ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த குப்தர் காலத்துக் கணபதிச் சிற்பம் பூமாராவில் அமைக்கப்பட் டது.
இது கல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கரங்களுடன் கூடிய இச்சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. கரண்ட மகுடம் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் கிடைத்துள்ள கணே சரது விக்ரகங்கள் எதிலும் அவரது வாகனம் காட்டப்படவில்லை.வாகனம் பிற்காலத் தில் தோன்றியிருக்க வேண்டும். இதே இடத்தில் கிடைத்துள்ள மற்றொரு சிற்பம் பாஸ்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் கணபதி இலட்சுமி (சக்தி) கணபதியாக, அதாவது தேவியை மடியில் அமரச் செய்துள்ளார். இதுவே சக்தி கணபதியின் தொன்மையான சிற்பவமைப்பாகும். இத்தருணத்தில்தான் இந்தியாவில் சக்தி வழிபாடு பிரபலமடைந்திருந்தது. இலட்சுமி கணபதி உருவமைப்பை வாமாச்சாரர்கள் (இடக் கைப் பழக்கமுள்ளவர்கள்) அதிகமாக வணங்கினர். அவர்களது விழாக்களில் மதுவும் மங்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டனவாக இருந்தன.
இன்னல்களை நீக்குபவர் என்ற வகையில் பல்வேறு குழுக்களோடு கணபதி தொடர்புபடுத்தப்படுகிறார். குறிப்பாக அவர் நவக்கிரகங்களோடும் சப்தமாதர்களோடும் தொடர்புபடுத்தப்படுகின்றார். நவக்கிரகங்களை வழிபடும்போது இன்னலின்றியிருக்க கணபதியை வணங்கியபின் கிரகங்களை வழிபடுவது வழக்கமாயிருந்தது. அதனால் நவக்கிரகங்களுடைய சிற்பத்தொகுதிகளில் கணபதியின் உருவம் சேர்க்கப்பட்டுள்ளது.
கங்கண்டீகி என்ற இடத்தில் கிடைத்துள்ள நவக்கிரகப் பலகை ஒன்றில் சூரியனுக்கு வலப்புறம் கணபதியின் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. ஓரியக் கோயில்களில் நவக் கிரகங்களோடு கணபதியும் நிற்கின்றார். வங்காளத்தில் இரண்டு நவக்கிரகப் பலகைகள் கணபதி உருவத்தோடு கிடைத்துள்ளன. பாலர்களது கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தொகுதி ஒன்றில் ஒன்பது கிரகங்களின் வடக்குக் கோடியில் கணபதி நின்ற நிலையில் உள்ளார்.
கணேசரும் சிவபெருமான் வீரபத்திரராகவும் உடனிருக்கும் சப்தமார்கள் சிற்பத் தொகுதி சிவன் கோயில்களில் கருவறையின் தெற்குப்புறத்தில் வைக்கப்படும் மரபு இந்தியாவின் பெரும்பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் சிவன்கோயில் களில் இச்சிற்பத்தொகுதி அஷ்டபரிவாராலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தென்னிந்தியாவில் சப்தமார்க்குத் தனிக்கோயில்களும் சுட்டப்பட்டுள்ளன. ஈசான சிவ குருதேவ பத்ததியில் குழந்தைகளைத் தீயசக்திகளிடமிருந்து கணபதியான விக்ன நாயகனும் சப்தமாதர்களும் காப்பர் என்று விரித்துரைக்கப்பட்டுள்ளது. வெற்றியையும் சாதனைகளையும் இருப்பிடமாகக் கொண்ட எட்டுச் சக்திகள் கணபதியோடு தொடர்பு படுத்தப்பட்டு அவரது சக்திகளாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் சப்தமாதர்களும் யோகேசுவரியும் சேர்ந்த குழுவினராவர்.
சப்தமாதர்களுடன் கணபதியின் சிற்பம் வைக்கப்படுகின்ற மரபு தக்காணத்தில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே வழங்கி வந்துள்ளது. எல்லோரா குகைக்கோயில்களில் மட்டும் நான்கு சிற்பத்தொகுதிகள் காணப் படுகின்றன. அவை ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டனவாகும். இராவணக் காகைக்குகைத்தளத்தில் உள்ள ஏழுமாதர்களின் சிற்பங்களும் நான்கு சுரங்களுடன் உள்ளன. மகேசுவரியைத் தவிர பிற மாதர்கள் குழந்தையை வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு அருகிலுள்ள கணபதியோ தனது மூசிக வாகனமின்றி ஒரு பாத்திரம் நிறைய இனிப்புகளை வைத்துள்ளார். இக்கணேசரின் உருவமைப்பானது பூமாராவில் (குப்தர் காலம்) உள்ள இரண்டு கணபதிச் சிற்பங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. (நூலிலிருந்து)
இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு சக்தி, சூரியன், விஷ்ணு, சிவன், கணபதி, முருகன் – முனைவர் கு. சேதுராமன் ,வெ.வேதாசலம்
விலை: 1200
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/inthiya-kalaivaralaatril-aruvagai-theiva-vazhibaadu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers