நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு

இந்நூலாய்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் பட்டியல்கள், நிலப்படங்கள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன. முதலில் பாண்டிய நாட்டில் இருந்த நாடுகளின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. இவற்றோடு பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளும் உரிய நிலப்படங்களோடு இவ்வியலில் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டியநாடு இருபத்தொரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு இருபத்தொரு நிலப்படங்கள் இவ்வியலில் பட்டியலுக்குப்பின் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பாண்டிய நாட்டில் உள்நாடுகளின் அமைவிடமும் அவற்றில் உள்ள ஊர்களின் இருப்பிடத்தையும் அறிய முடியும்.

நாடுகள் வாரியாகத் தரப்பட்டுள்ள ஊர்களின் நீண்ட பட்டியல் அண்மைக்காலம் வரை வெளிவந்த சாசனச் சான்றுகளையெல்லாம் ஆய்வு செய்து உருவாக்கப் பட்டுள்ளது. இப்பட்டியலில் பாண்டியநாட்டிலுள்ள நாடுகள் அகரவரிசைப்படி எண்ணிடப்பட்டு அவற்றின்கீழே அவற்றில் உள்ள ஊர்கள் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.

இப்பட்டியல் 1. வரிசை எண். 2. ஊர்களின் பழம்பெயர், 3. பழம் பெயருக்குரிய வேறு பெயர்கள், மாற்றம் பெற்ற பெயர்கள், 4. அவற்றிற்குரிய இன்றைய பெயர்கள், 5.காலம், 6. சான்றெண் குறிப்பு என்று ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஊர்களின் பழம் பெயருக்குரிய இன்றைய பெயர்கள் ஓரளவு அடையாளம் கண்டு இப்பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால், அனைத்து ஊர்களுக்கும் உரிய இன்றைய ஊர்களின் பெயர்களை இடம் கண்டறிந்து குறிப்பிட முடியவில்லை. வருங்காலத்தில் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் இனி வரும் ஆய்வாளர்கள் இவற்றை அடையாளம் கண்டு குறிப்பிடலாம். சாசனங்களில் காணப்படும் ஊர்களின் பழமையான காலக்குறிப்பு மட்டும் அவற்றிற்குரிய சான்றெண் குறிப்போடு தரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊரும் எவ்வகை சமூகப் பிரிவிற்குரியதாக இருந்துள்ளது என்பதை அறியும் வகையில் B.N, BN, PP என்று அடைப்புக்குறிக்குள் சுட்டப்பட்டுள்ளன. ஊர்ப்பெயர்களின் பின்னொட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு தரப்பட்டுள்ளன. இவை முறையே பிரமதேயம் (B), வணிக நகரம் [N], பிரமதேயம் வணிகநகரம் [BN], படைப்பற்று [PP] என்பதைச்சுட்டும் வகையில் அமைந்துள்ளன. நாடுகள் ஊர்களின் பட்டியலை அடுத்து பட்டியலில் காணும் ஊர்களின் பழம்பெயர் சொல்லடைவு வரிசை எண், நிலப்பட எண் ஆகியவற்றுடன் தரப்பட்டுள்ளது. இதனையடுத்து பட்டியலில் உள்ள இன்றைய ஊர்களின் சொல்லடைவு வரிசை எண்ணுடன் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையிலும் மேலாய்வுக்குத் துணைபுரியும் வகையில் தரப்பட்டுள்ளது. இறுதியில் சொற்சுருக்க விளக்கப்பட்டியல் தரப்பட்டுள்ளது.(நூலிலிருந்து)

பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் கி.பி. 600 – கி.பி. 1400 – முனைவர் வெ.வேதாசலம்
விலை: 1,000/-
வெளியீடு:
Buy this book online: https://www.heritager.in/product/pandiyanattu-varalaarumurai-samooga-nilaviyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers