Description
வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலைநகர் டெல்லி எவ்வாறு உருவானது, அங்கு தமிழர்கள் எக்காலத்தில், எக்காரணங்களுக்காக இடம்பெயர்ந்தனர், பல்வேறு தலைமுறைகளாக அங்கு வாழும் தமிழ்ச் சமூகம் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட சவால்களும் அடைந்த உயர்வுகளும் எவை என்பதைத் தொகுத்துரைக்கும் அரிய பொக்கிஷம் இந்நூல்.
டெல்லித் தமிழர்களின் இடப்பெயர்வு வரலாறு, தக்ஷிண்புரி போன்ற மீள்குடியேற்றப் பகுதிகளின் தோற்றம், மேல்தட்டு முதல் கீழ்த்தட்டு மக்கள் வரையிலான அவர்களின் சமூகப் பிரிவுகள், தமிழ்மொழியின் கல்வி நிலை (பள்ளிக் கல்வி, கல்லூரி மற்றும் உயர்கல்வி) ஆகியவற்றைப் பல்வேறு அறிஞர்கள் இங்குக் கட்டுரைகளாக வழங்கியுள்ளனர்.
மேலும், டெல்லி தமிழ்ச் சங்கம் ஆற்றிய வரலாற்றுப் பணிகள், கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த அதன் பங்களிப்புகள், அங்குள்ள தமிழ்க் கோவில்கள், நாடகச் சூழல், வானொலி மற்றும் ஊடகங்களில் தமிழர்களின் ஆளுமை, மற்றும் டெல்லியில் தடம் பதித்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விரிவான ஆய்வுகளையும், பல மூத்த டெல்லிவாழ் தமிழர்களின் நெஞ்சையள்ளும் அனுபவப் பதிவுகளையும் நேர்காணல்களையும் கொண்டு, தலைநகர் டெல்லியில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் பன்முக அடையாளத்தைப் பதிவு செய்யும் ஆவணமாக இந்தத் தொகுப்பு நூல் அமைகிறது.
தலைநகர் தில்லி: தமிழும் தமிழரும்




























