செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர் :
தமிழகத்தில் பக்திமார்க்க அடிப்படையில் சைவ சமயம் தழைத்தோங்க நாயன்மார்களும், வைணவம் செழிக்க ஆழ்வார்களும் அரும்பாடுபட்டுள்ளனர். சைவ சமயத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களும், முக்கியமானவர்களாவர். இச்சமயச் சான்றோர்களுக்கு மக்கள் சிறுக்கோயில்கள் கட்டியும், சிற்பங்கள் உருவாக்கியும் வழிபாடு நடத்தியுள்ளனர்.
சோழர் காலத்திலேயே அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோருடைய செப்புத் திருமேனிகள் செய்யப்பட்டிருக்கின்றன. வைணவ சமயக் கோயில்களில் ஆழ்வார்கள் சன்னிதி என்னும் சிறு கோயில்கள் கட்டப்பட்டு, அவற்றில் ஆழ்வார்களுடைய சிற்பங்கள் நிறுவப்படலாயின. கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோருடைய உலோகத் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றளவும் நிலவி வருகிறது.
Reviews
There are no reviews yet.