வாழ்க்கைக் கோயில்கள் – மய‌ன்

220

Add to Wishlist
Add to Wishlist

Description

கோயில்கள் நம் நம்பிக்கைக்கான வாயில்கள். வாழ்வின் சுழலில் துன்பங்கள் துரத்தும்போது ‘என்ன செய்தால் இவை அகலும்’ எனத் தெரியாமல் அல்லாடுகிறோம் நாம். பரிகாரத் தலங்களை நோக்கி ஓடுகிறோம். அப்படிப்பட்ட பரிகாரக் கோயில்களின் சிறப்பு குறித்தும், மகிமை குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். படிக்கப் படிக்க அந்தக் கோயில் தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த உணர்வும், அந்தக் கோயில்களுக்கு நாமும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுகிறது. பக்திக்கும், பழைமை பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் கோயில்கள், வரலாறு, வாழ்க்கைமுறை, கலை, இலக்கியம், இதிகாசம், காப்பியம், மருத்துவம், ஜோதிடம், நிர்வாகம், நீதிமுறை, ஆகமம் போன்ற வாழ்வியலை நமக்கு வெளிப் படுத்தும் அரிய கருவூலங்களாகவும் வாழ்வை வளமாக்கும் தலங்களாகவும் திகழ்கின்றன. திருமணத்தடை நீங்கிடவும், பிரிந்த கணவன்&மனைவி சேர்ந்து வாழவும், குழந்தை இல்லாத குறையைப் போக்கிடவும் சர்ப்ப தோஷம் போக்கவும் பல்வேறு பரிகாரக் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று பயன்பெறுவதை அறியலாம். அதேபோல் கண்ணொளி பெற்றிடவும், ஊனம் நீங்கிடவும், வயிற்றுவலி, வலிப்பு நோய் நீங்கிடவும், சனி பகவான், குரு பகவான் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் காணலாம். அவ்வாறான பல கோயில்களுக்கு நேரில் சென்று தரிசித்த நெகிழ்வோடு எழுதி இருக்கிறார் நூலாசிரியர் மயன். வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் படித்துவிட்டு போகிற புத்தகமல்ல இது. வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நற்காரியங்களுக்குப் பயன்படும் இந்தப் புத்தகம், உள்ளத்துக்கு ஒளிகொடுக்கும் காகித விளக்கு!

Additional information

Weight0.25 kg