மீனவர்களின் மரபுவழி அறிவியல் :
மீனவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடலோடு மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள். மீனவர்களும் தங்களுடைய தொழில் சார்ந்த அறிவியல் கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடலோடு அவர்கள் மிக நெருக்கமான தொடர்பு உடையவர்களாக இருப்பதால் கடல் நீரின் தன்மை பற்றியும், அலைகளின் தன்மை, கடலின் அடிப்பரப்பு, காற்று வகைகள் ஆகியன பற்றியும் கடலில் வாழ்கின்ற மீன்களின் வகைகள் ஆகியன பற்றியும் வடிவம், நிறம், இனப்பெருக்க முறை ஆகியன பற்றியும் அனுபவத்தின் அடிப்படையில் அறிவியல் கருத்துக்களைக் கட்டமைத்திருக்கிறார்கள்.
இராமநாதபுர மாவட்டத்தில் பாம்பன் வட்டாரத்தில் மீனவர்கள் (பரதவர்,வலையர், கடையர்) ஆமைகளை எத்தனை வகைப்படுத்தி உள்ளார்கள். இவ்வகைப்பாட்டில் ஒற்றுமை வேற்றுமைகளைக் காணுதல், வாழும் இடம், இனப்பெருக்கம் செய்யும் காலம், உணவு முறைகள், பயன்பாடு ஆகியவை பற்றி எத்தகைய மரபு வழி அறிவியல் கருத்துருவங்களை உருவாக்கி வழக்காறுகளாக வழங்கி வருகின்றார்கள் என்பார் க.இராமபாண்டி (தமிழர் அடையாளங்கள், ப.164)
1. பேராமை
2. பங்குனி ஆமை
3. அழுங்காமை/அழுக்கு ஆமை
4. பெருந்தலை ஆமை
5. ஓங்கல் ஆமை
6. கிளி ஆமை
7.கல் ஆமை
8. மஞ்ச நெத்தி ஆமை
9. எழுவரி ஆமை (அ) தோணி ஆமை
10. பாலாமை
எனப் பத்து வகைப்படும்.
கடலாமைகளை அதன் வாழிடம் (பார்கள்)
அடிப்படையில் 1. கரையோர ஆமைகள், 2. ஆழமான பகுதி ஆமை, 3. அனைத்துப் பகுதி ஆமைகள், பேராமை, பங்குனி ஆமை, மஞ்சநெத்தி, எழுவரி ஆமைகள், கரையோரத்திலும் அழுங்காமை, ஓங்கல், கிளி ஆமை, கல்லாமை, பாலாமை ஆகியவை ஆழமான பகுதிகளிலும், பெருந்தலை ஆமை எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்றன.
கடலாமைகள் கடல்கோரை, கடல்பாசி, கடல்தாழை, சிப்பி போன்றவற்றை உணர்கின்றன. மஞ்சநெத்தி ஆமையும் ஏழுவரி ஆமையும் உணவாகவும், பேராமையும் பங்குனி ஆமையும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இவற்றின் பச்சை முட்டை உடம்புக்கு நல்லது. மாவுடன் கலந்து பலகாரம் செய்து உண்பர். ஆமைக்கறியும் உண்பர். ஆஸ்துமா, மூலநோய் உள்ளவர்கள் இவ்வாமைகளின் இரத்தம் குடிப்பர்.
அழுங்காமை நச்சுத்தன்மை கொண்டது. ஆமையைக் குத்தி இரத்தத்தைச் சுண்ணாம்பு தடவிய விரலால் தொட்டால் பச்சை நிறமாக மாறிவிடும். இதனால் ஆமைகளின் நச்சு தன்மையைக் கண்டு பிடிக்கிறார்கள் என்பார் க.இராமபாண்டி. (தமிழர் அடையாளங்கள், ப.172-174)அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நேரமிச்சம், உற்பத்தி அதிகரிப்பு ஏற்படுகிறது. அறுவடை செய்வதற்கும் மனிதனின் ஆற்றல் அதிகமாகத் தேவைப்படுகிறது. சான்றாக ஒரு ஏக்கர் நிலத்தில் ஏர் உழுவதற்குச் சுமார் 10 ஆட்கள் தேவைப்படுகின்றனர். கூலியும் அதிகம். அதையே ஒரு எந்திரம் 2 அல்லது 3 மணி நேரத்தில் செய்துவிடும். இதனால் கூலிவேலை செய்து பிழைக்கும் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடுகிறார்கள். வேளாண்மைக் கருவிகள் செய்யும் கைவினைஞர்களும் பாதிக்கப்பட்டு பொருளாதார நிலையில் பின் தங்கினர்.
மனித வாழ்க்கைக்குத் தேவையான, நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில கருவிகள் நவீன கருவிகள் வருகையால் தாக்குபிடிக்க முடியாமல் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. இருப்பினும் மண்வெட்டி, களைக்கொட்டு போன்றவை அழியாமல் ஈடுகொடுத்து தொடர்கின்றன. புதிய வேளாண்மைக்கருவிகளின் தொழில் நுணுக்கம் பெரும்பாலும் நம் முன்னோர்கள் உற்பத்தி செய்த அதே தொழில் நுணுக்கத்தினையே பின்பற்றி உள்ளன. எந்திரங்களின் உருவ அமைப்புகள் மாறி இருந்தாலும் தொழில் நுணுக்கம் ஒத்துக் காணப்படுகின்றன. கலப்பையின் அமைப்பு, சாலை அமைத்தல், வண்டி அச்சில் ஓடுவது ஆகியவற்றில் இதனைக் காணலாம். (தமிழர் அடையாளங்கள்,ப.188)
“இயற்கையின் வளமைக்கு முத்து, வேதியலுக்குப் பெருமை வைரம்” என்பார் மெகசுதனிசும். மீனவர்தம் அம்பாவில் முத்துவளம் சங்குவளம் நிறைந்த கடல் என்றும் அவை விளைய வித்து எதுவும் தேவையில்லை என்பதாக அறிவியல் தோய்ந்து பாடியுள்ளனர்.
முத்துரு சங்கு நெறஞ்ச கடல் ஏலஏலச்சான்
வித்துக்கேதும் பஞ்சமில்லே
பட்டடி மணப்பரப்புல
பதறாம வளர்ந்து வருமே
பிளாஸ்டிக் பொருட்களில் வலைகளைப் பின்னும் மீனவர்கள், வலைகளுக்கு இடையில் இரண்டு பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். தண்ணீரில் வலைகள் மிதப்பதற்கும், மேலே வருவதற்கும் இந்த இரண்டு பொருட்களே காரணம் அவற்றை. 1. பைபர்கட்டை எனவும் ஈயம்கட்டி எனவும் கூறுகின்றார். ஃபைபர்கட்டையில் கயிறு கட்டி விடுவதன் மூலம் மீன்களை எளிதில் பிடித்து விடுகின்றனர். இதனைப் ‘போயா கட்டி விடுதல்’ என்று அழைப்பர் என்பார் பா. இரவிக்குமார் (கைவினையம், ப.125)
மீனவர் தம் வாழ்வியல் பெரும்பாலும் அறிவியல் சார்புடையதாய் விளங்குவது, மாமழையின்றேல் உலகம் உய்யாது. இத்தகு மாமழையின் பிறப்பிடமே நீல நெடுக்கடல். இதைப் பரதவர் மரபுவழியாகவே மழை பொழியக் கடல் இன்றியமையாதது என்பதையும் உணர்ந்துள்ளனர். உலகிற்கு மழை பொழியக் கடல்நீர் ஆவியாகி, மேகத்துள் கலந்து வேதியியல் மாற்றம் அடைவது என்பது இன்றியமையாததும் அறிவியல் பாங்குடையது.
“மேகங் கருத்துவர ஏலேலம்பா ஏலவல
மேலெழுந்த கடலாம்
மாரிமழை பொழிய ஏலேம்பா ஏலவல
மனந்திறக்குங் கடலாம்
வானமழை பொழிய
வாகான (நம்ம) சுடலாம்” (ப.165)
“மீனவர்கள்” வானியல் அறிவு மிக்கவர்கள். அதனால்தான் அலைகடலில் சென்று பொருளீட்ட முடிகிறது. இல்லையேல் கடலின் ஆழத்தையும் நீரோட்டத்தையும் நன்கு அறிந்தால் தான் கடலின் வளத்தை இவர்கள் அள்ளிச் சென்று வரமுடியும். அதற்கு இவர்களது வானியல் அறிவே துணை நிற்கின்றதனைக் காணலாம்.
மாலை நேரத்தில் சந்திரனைச் சுற்றி ஒரு வட்டம் காணப்படும். இதனைச் சந்திர வட்டம் என்பர். சந்திர வட்டம் காணப்பட்டால் அன்று அடைமழை
பெய்யக்கூடும் என்பதை உணர்ந்து கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். முற் பகலில் காலை 11 மணிக்குமேல் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் காணப்பட்டால் கடுமையான காற்று வீசும்.சோத்து வெள்ளியைக் கண்டவுடன் இரவு உணவு அருந்தும் வேளை என்பதை உணர்வர். தராசு வெள்ளியை வைத்து கடலில் செல்லும் திசையை அறிவர். விண்மீன்கள் வானத்திலிருந்து மறைந்து காணப்பட்டால் புயல்காற்று அல்லது கடல் கொந்தளிப்பு வரும். ‘காலை செம்மானம் காத்துக்கு, மாலைச் செம்மானம் மழைக்கு’ என்ற பழமொழி மூலம் அதிகாலை கிழக்குவானம் சிவந்தால் பெருங்காற்று வீசும். மாலையில் சிவந்து காணப்பட்டால் பெருமழை.
சுறாமீனில் சூறைவேடன் கடல் மட்டத்திற்கு மேல் எழும்பிவாய் திறக்குமானால் பெரும் புயல் வரும் என்று நம்புகின்றனர். கொளுத்தை மீன்கள் பெருங்கூட்டமாகக் கடலில் வருவது கண்டால் கடல் கொந்தளிப்பு, புயல் உருவாகக் கூடும். கடலிலும் ஆற்றிலும் நீர்முள் அல்லது சொரி வலைகளில் சிக்கினால் மழைக்கான அறிகுறியாகும். கருஞ்சேறு வலையை மேலே வரவிடாமல் சேறாக்கினால் மழை வரும் என்பார் ஆ.திருமேனி (காடெல்லாம் பிச்சி, ப.452-455)
நாட்டுப்புற அறிவியல் – பேரா.சு. சண்முகசுந்தரம்
விலை: 150/-
Buy this book online: https://www.heritager.in/product/naattuppura-ariviyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/