சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை :

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமெய்யத்தில் உள்ள குடவரைக் கோயிலில் அரவணையில் துயில் கொள்ளும் பெருமாள் அருகில் ஒருமுனிவர் யாழ்வாசிக்கும் நிலையில் உள்ளார்.

எருக்கத்தம்புலியூரிலுள்ள கோயிலில் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் கையில் யாழ் காணப்படுகிறது. இதன் வழி யாழின் அமைப்பை தெரிந்து கொள்ள முடிகிறது.

வராக மண்டபத்தில் ஒரு யாழ், தம்பூரா ஏந்திய நாரதர் சிற்பமும், அர்ச்சுனர் தபசில் கின்னரர்கள் சிற்பமும். மகாபலிபுரத்துச் சிற்பங்களில் பல இசைக்கலைச் சிற்பங்கள் உள்ளன என்பதை நம்மால் நன்கு அறிய முடிகிறது.

குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் கோயில் சிற்பங்களில் மத்தளம், பம்பை, செண்டை, முழா போன்ற தோற்கருவிகள் காணப்படுகின்றன. கும்பகோணம் தாராசுரம் கோயிலில் உள்ள இராமாயணச் சிற்பங்களில் போர் முரசு, பேரிகை போன்ற இசைக்கருவிகள் காணப்படுகின்றன.

குமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் சித்திர மண்டபத்தில் கண்ணன் குழலூதும் காட்சி அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. திருவட்டாறு கோயிலில் உதயமார்த்தாண்ட மண்டபத்தின் கருவறையின் மேற் பகுதியில் ஒரு ஊர்வலக்காட்சியில் பல்வேறு வகையான இசைக் கருவிகள் காணப் படுகின்றன.

யாழ் சிற்பம்:

எட்டாம் நூற்றாண்டு உத்திரமேரூர் கோயிலில் யாழ் சிற்பம், 9 ஆம் நூற்றாண்டு கொடும்பாளூர் கோயிலில், காஞ்சிபுரம் கோயிலில் உள்ள யாழ் சிற்பம், எட்டாம் நூற்றாண்டு நாமக்கல்லில் உள்ள யாழ் சிற்பம், திருமெய்யம் கோயில் யாழ் சிற்பம் ஒப்பாய்வுக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் யாழ், குழல், தாளம், உடுக்கை, முழவு போன்ற இசைக்கருவிகள் கொண்ட இசைக் குழுவையே காணமுடிகிறது.

ஓவியங்கள் காட்டும் இசைக்கருவிகள்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனின் திருமணக்காட்சி ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் பூதகணங்கள் சங்கு ஊதுவது, நந்தி மத்தளம் கொட்டுவது, இசைவாணர் கருவிகளை இசைப்பது காணப்படுகிறது. திருவட்டாறு கோயிலில் இராமயணக் காட்சிகள், கண்ணன் குழல் ஊதும் காட்சிகள் வண்ண ஓவியங்களாக மண்டபத்தைச சுற்றிக்
காணப்படுகின்றன. (நூலிலிருந்து)

தமிழிசை-பேரா.முனைவர்.செ. சுப்புலட்சுமி
விலை: 225 /-
வெளியீடு:
Buy this book online: https://www.heritager.in/product/tamilisai/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers