Category கோயில்கள்

யார் கைகளில் இந்து ஆலயங்கள்?

பல்வேறு மதங்களும் அதன் கோவில்களும் கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல்போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். ஆனால் மரங்களும், சாலையோரக் கற்களும்கூட கோயிலாகக் கருதப்படும் வழக்கமும் நமது சமூகத்தில் உண்டு. மனிதகுல வரலாற்றில் தன் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை வணங்கவோ, பயம் கொள்ளவோ செய்த மனித…

கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும் குறுமான் சாதியுடன் கண்ணகியை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. கேரள வயநாடு…

பஞ்சரச் சிற்பங்கள்

பஞ்சரச் சிற்பங்கள் : இக்கோயில் விமானத்தின் நான்கு திசைகளிலும் முகமண்ட பத்தின் மூன்று திசைகளிலுமாய்த் திசைக்கு இரண்டென 14 தளப் பஞ்சரங்கள் உள்ளன. அவற்றின் கிரீவகோட்டங்களிலும் அவற்றின் தலைப்பாக விமான, முகமண்டபக் கபோதத்தில் காட்டப் பட்டுள்ள பெருவளைவுகளிலும் எழிலார்ந்த சிற்பச் செதுக்கள் உள்ளன. கிரீவகோட்டச் சிற்பங்கள் : பஞ்சரங்களின் 14 கிரீவகோட்டச் சிற்பங்களுள் ஐந்து சிவ…

கழுகுமலை வெட்டுவான் கோவில்

வடக்குப் பூலாங்குளம் : கழுகுமலைப் பேரூருக்குத் தெற்கே, சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில், கழுகுமலை- தேவர்குளம் சாலைக்குக் கிழக்கே. வடக்குப்பூலாங்குளம் என்ற சிறிய கிராமம் இருக்கிறது. இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய வடிவிலான, சுமார் மூன்றடி உயரம் இரண்டடி அகலமுள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று. ஆட்சியாண்டு குறிப்பிடப்படாத, பிற்காலப் பாண்டியர் கால உதிரிக்…

கோவில்களும் பொருளாதாரமும்

கோவில்களும் பொருளாதாரமும் : பொருளாதாரத்தில் கோவில்களின் தாக்கம் பலவகைகளில்காணப்பட்டது. கோவில்களைக் கட்டுவதென்பதே ஒரு பெரிய பொதுநிறுவனமாக இருந்தது. பெரும்பாலான கோவில்கள், அரசராலும் அரச குடும்பத்தாலும் கட்டப்பட்டதால், அதிக அளவு அரசுப் பணம் அதில்செலவிடப்பட்டது. கோவில் கட்டும் பணி, திறமையான கொத்தர்கள்,சிற்பிகள், கைவினைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும். சாதாரணத் தொழிலாளர்களுக்கும் பெருமளவில் வேலை வாய்ப்பைப்பெற்றுத்தந்தது. கோவில்களுக்காகப் பஞ்சலோக விக்கிரகங்களைச்செய்து,…

சிதறால் மலைக்கோவில்

சிதறால் மலைக்கோவில் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் அருமனை ஊர் அருகே சிதறால் மலை உள்ளது. இது குழித்துறையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்த ஊர். கல்வெட்டுகளில் சிதறால் மலையைத் திருசாணத்து மலை என்று குறிக்கிறது. அது திருசாரணத்து மலை என்பதன் திரிபு. மலையின் உச்சியில்…

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும்

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும் இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்த சமயத்திற்காகத் தொடங்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் பின்னர் தொடர்ந்து வந்த காலங்களில் பல்வேறு சமயநிலைகளுக்கு உட்பட்டு கி.பி ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தினை வந்தடைந்தது. தமிழகத்தில் பல்லவர்களே குடைவரைக் கலையினைத் தொடங்கி வைத்தனர் என்றும், பாண்டியர்களே இக்கலையினைத் தொடங்கி…

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை : தென்னிந்தியக் கோயில்கள் திராவிட வகைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய கோயில்களை அமைப்பது எங்ஙனம் என்பதை மயன் என்பவரால் எழுதப்பட்ட மயமதம் எனும் நூல் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் சங்க காலம் தொட்டே மண்ணினாலும் மரத்தாலும், செங்கற்களாலும் கோயில் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில்கள் எத்தகைய…

கலாரசிகனின் கலைக்கோயில்

கலாரசிகனின் கலைக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டுமானம் என்கிற அளவில் இருந்த கோயில் கட்டும் பணி, சோழர் காலத்தில் இயக்க மாக மாறியது. ஆகச் சிறந்த உதாரணம்,பெரிய கோயில். பக்தி என்பது அக்கால மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. கோயில்கள், புராணம் சார்ந்து இருந்தன. பக்தியைத் தங்கள் வாழ்வின் சித்தாந்தமாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தெய்வ உருவங்கள் வழியாக…

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் : முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட அரசர்களின் பள்ளிப்படைக் கோவில்களைவிட இக்கோவில் வேறுபட்டது. தனது அரசின் வலிமையைப் பறைசாற்றுவதற்காக இக்கோயிலை…