கோயில்கள்

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும்

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும் இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்த சமயத்திற்காகத் தொடங்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் பின்னர் தொடர்ந்து வந்த காலங்களில் பல்வேறு சமயநிலைகளுக்கு உட்பட்டு கி.பி ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தினை வந்தடைந்தது. தமிழகத்தில் பல்லவர்களே குடைவரைக் கலையினைத் தொடங்கி வைத்தனர் என்றும், பாண்டியர்களே இக்கலையினைத் தொடங்கி வைத்தனர் என்றும் இருவேறு கருத்துக்கள் ஆய்வாளர்களிடையில் இன்றளவிலும் நிலவி வருகின்றன. இருப்பினும், அக்காலகட்டத்தில் பேரரசுகளாக விளங்கிய பிற்காலப் பல்லவர், முற்காலப்

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும் Read More »

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை : தென்னிந்தியக் கோயில்கள் திராவிட வகைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய கோயில்களை அமைப்பது எங்ஙனம் என்பதை மயன் என்பவரால் எழுதப்பட்ட மயமதம் எனும் நூல் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் சங்க காலம் தொட்டே மண்ணினாலும் மரத்தாலும், செங்கற்களாலும் கோயில் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில்கள் எத்தகைய இலக்கண விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டன என அறிய இயல வில்லை. தமிழகத்தில் பல்லவர், பாண்டியர்களது ஆட்சி நடைபெற்ற காலத்தில் கி.பி.7-ஆம்

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை Read More »

கலாரசிகனின் கலைக்கோயில்

கலாரசிகனின் கலைக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டுமானம் என்கிற அளவில் இருந்த கோயில் கட்டும் பணி, சோழர் காலத்தில் இயக்க மாக மாறியது. ஆகச் சிறந்த உதாரணம்,பெரிய கோயில். பக்தி என்பது அக்கால மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. கோயில்கள், புராணம் சார்ந்து இருந்தன. பக்தியைத் தங்கள் வாழ்வின் சித்தாந்தமாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தெய்வ உருவங்கள் வழியாக ஓர் அரசன் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினான். ராஜராஜ சோழன், தஞ்சையில் ‘ராஜராஜீஸ்வரம்‘ என்ற பெயரில் பெருங்கோயில் ஒன்றை எழுப்புவதற்கு அடிப்

கலாரசிகனின் கலைக்கோயில் Read More »

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் : முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட அரசர்களின் பள்ளிப்படைக் கோவில்களைவிட இக்கோவில் வேறுபட்டது. தனது அரசின் வலிமையைப் பறைசாற்றுவதற்காக இக்கோயிலை அவன் கட்டியுள்ளான் எனலாம்” அதனால், இக்கோயிலின் சுவர். அடித்தளம் ஆகியவற்றில் பல கல்வெட்டுக்களை வெட்டி அவற்றில் அரசனால் கொடுக்கப்பட்ட நில

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் Read More »

கொடுங்கல்லூர் கோவில்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும் குறுமான் சாதியுடன் கண்ணகியை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. கேரள வயநாடு பகுதியைக் குறும்பா நாடு என்றும் கூறுவர். இது இன்றைய கோழிக்கோடு மாவட்டம் கல்பெற்றா பகுதியில் இருப்பது ஒரு காலத்தில் இங்கே

கொடுங்கல்லூர் கோவில் Read More »

சமணர்புடைப்புச் சிற்பங்களில்

உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு November 19முதல் 25வரை மரபுசார் நூல்கள் 1000 ரூபாய்க்கு மேலாக புத்தகம் வாங்கினால் நமது Heritager.in The Cultural Store 10% தள்ளுபடி விலையில் சமணர்புடைப்புச் சிற்பங்களில் : கழுகுமலையில், உயர்ந்த மலையின் வடபுறச் சரிவில் உள்ள சமணர்புடைப்புச் சிற்பங்களில், மூன்று வரிசைகளாக அமர்ந்தநிலையில் முக்குடைநாதர் சிற்பங்கள் மற்றும் ஆதிநாதர், நேமிநாதர். பார்சுவநாதர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள், அரைமலை ஆள்வார், திருமலைத்தேவர், திருமலைமேற்படாரர். நகரத்தான் செய்வித்த தேவர் போன்ற தலக்கடவுளர்

சமணர்புடைப்புச் சிற்பங்களில் Read More »

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள்

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் : உலகெங்கும் கட்டடக்கலையானது அந்தந்த நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்கள், தட்பவெட்பநிலை, வாழ்வியல் முறைகள், தொழில்நுட்பம் போன்ற பலவிதமான பொருண்மைகளின் இணைவினால் முகிழ்க்கிறது. மனிதன் தான் வாழ்வதற்கு கட்டிக்கொண்ட வாழ்விடங்களைப் போலவே தான் வணங்கும் இறைவனுக்கும் கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்றும் அந்த இறையுருவங்களை மழை வெயிலிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் விரும்பினான். அவ் எண்ணங்களின் விளைவால் தோன்றியதே கோயில்கள். இந்தியாவைப் பொருத்த அளவில் வேத காலத்தில் கடவுளுக்கு உருவம் கற்பிக்கப்படாமையாலும்,

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் Read More »

தமிழ்நாட்டுக் கோபுரங்கள்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் : தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தமிழகம் எங்கும் தெய்வீகச் சூழ்நிலை நிரம்பியதாக்கி இக்கோபுரங்கள் விளங்குகின்றன. ‘கோபுரம்’ என்னும் சொல்லே தமிழகத்தின் தனிச்சொல் என்பர். கோபுரம் என்பது கோயிலின் வாயிலை அலங்கரித்து நிற்கும் கட்டட அமைப்பாகும். இது பண்டைய காலத்தில்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் Read More »

சிற்பம் தொடர்பான நூல்கள்

கோவில் ஸ்தபதிகள் மற்றும் சிற்பகளுக்குத் தேவையான கோவில் கட்டடக்கலை சிற்ப சாஸ்திரம் தொடர்பான நூல்கள் Heritager.in The Cultural Store 1. சிற்பச் செந்நூல் விலை: 600/- Buy this book online: https://heritager.in/product/sirpa-sennool-vai-ganapathi-sthapathi/ 2. ஆலய நிர்மாண பிம்பலஷ்ணம் சிற்ப நூல் விலை: 500 /- Buy this book online: https://heritager.in/product/aalaya-nirmaala-bimbalakshna-sirpanool/ 3. சிற்பக்கலை ஆய்வும் அணுகுமுறையும் விலை: 280/- Buy this book online: https://heritager.in/product/sirpkkalai-aivu-anukumuraikal/ 4. ஸ்ரீ மகாரதம் கலைச் செந்நூல்

சிற்பம் தொடர்பான நூல்கள் Read More »

கோவில்களும் பொருளாதாரமும்

கோவில்களும் பொருளாதாரமும் : பொருளாதாரத்தில் கோவில்களின் தாக்கம் பலவகைகளில்காணப்பட்டது. கோவில்களைக் கட்டுவதென்பதே ஒரு பெரிய பொதுநிறுவனமாக இருந்தது. பெரும்பாலான கோவில்கள், அரசராலும் அரச குடும்பத்தாலும் கட்டப்பட்டதால், அதிக அளவு அரசுப் பணம் அதில்செலவிடப்பட்டது. கோவில் கட்டும் பணி, திறமையான கொத்தர்கள்,சிற்பிகள், கைவினைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும். சாதாரணத் தொழிலாளர்களுக்கும் பெருமளவில் வேலை வாய்ப்பைப்பெற்றுத்தந்தது. கோவில்களுக்காகப் பஞ்சலோக விக்கிரகங்களைச்செய்து, திருவிழாக்களின் போது ஊர்வலமாக எடுத்துச் செல்லும்வழக்கம், அதற்கான அச்சுக்களைத் தயாரித்தல், உலோக வேலைகள் ஆகிய தொழில்களுக்கான தேவையை உருவாக்கியது. சொல்லப்போனால்,

கோவில்களும் பொருளாதாரமும் Read More »

Shopping Cart