கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்

ஆகமங்கள்:

சமஸ்கிருதத்தில், ஆகமம் என்பதற்கு அறிவை வளர்த்துக்கொள்ளுதல் என்று ஒரு பொருள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. ஆகமங்கள், வேதத்தின் ஒரு பகுதியோ அல்லது வேதத்திலிருந்து பெறப்பட்டவையோ அல்ல. இறைவனுக்காக கட்டப்படும் கோயிலின் அமைப்பு, வழிபாட்டு முறைகள், சடங்குகள் இவற்றைக் குறிப்பவையே.வழிபடும்போது சில வேதமந்திரங்களையும் உச்சரிப்பது என்ற நடைமுறை ஏற்பட்டுள்ளது என்பதால் ஆகமங்களும் வேதங்களைப் போன்றதே எனச் சிலரால் வாதிக்கப்படுகிறது. ஆகமங்களில் கண்டுள்ளவற்றைக் கூர்ந்து நோக்கினால், அது கடவுளை வணங்கும்போது செய்யப்படும் செயல்முறைகளின் தொகுப்பு என்பதே சரியான பொருள் என்பது தெரிய வரும்.

8.33 வேதங்கள் மாற்றமடையாது. ஆனால் ஆகமங்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வந்துள்ளன. கோயில் வழிபாட்டு முறைகள் மாறி வந்துள்ளன என்பது மறுக்க இயலாத உண்மை. காலத்திற்கேற்ப, பக்தர்களின் விருப்பம் அரசனின் ஆணை போன்ற இன்னும் பல காரணங்களுக்காக ஆகம விதிகள் மாற்றப்பட்டு வந்துள்ளன; தற்போதும் மாறிக் கொண்டே வருகின்றன. எனவே, ஆகமங்கள் நிரந்தரமானவை அல்ல.

08.04 ஆகமங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. மற்ற மாநிலங்களிலோ, மற்ற நாட்டிலோ கடைப்பிடிக்கப் படுவதில்லை. தற்போது வெளிநாடுகளிலும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் குடியேறிய நம் மக்கள் அங்கும் கோயில்களைக் கட்டி வழிபட்டு வருகின்றனர். அங்கும் இந்த ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறுநடைமுறைகள் மாற்றம் அடைந்துள்ளன என்பதில் ஐயம் ஏதுமில்லை. அதாவது, ஆகம விதிகள் தேவைக்கேற்றவாறும், சூழ்நிலைக்கேற்றவாறும் மாற்றப்பட்டே பின்பற்றப்படுகின்றன.

மேலை நாடுகளிலுள்ள கோயில்களில் கருவறையும், அதனை ஒட்டி, வட இந்தியக் கோயில்களைப் போன்று, மகா மண்டபமும் அமைந்துள்ளது; அகமண்டபமோ. முகமண்டபமோ இல்லை. நிவேதியப் பொருள்களும், பூஜை நேரமும், செய்முறைகளும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது போல் இல்லை. அபிஷேகத்திற்கான பொருள்களும் வேறுபடுகின்றன என்பதிலிருந்தும் ஆகமங்கள் தேவைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் மாற்றப்படக்கூடிய வழிமுறைகளே என்பதை அறியலாம்.

கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள் -டாக்டர் நீதியரசர் ஏ.கே.ராஜன்
₹100
Buy Link: https://heritager.in/product/koyilkal-aakamankal-maarrankal/

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்