Category வரலாறு

உலக வரலாறு (H.G. வெல்ஸ்)

நூறாண்டுகளுக்கு முன் அறிவியலாளரும் வரலாற்றாளருமான எச்.ஜி. வெல்ஸ் எழுதி வெளிவந்த புகழ்பெற்ற ‘ஏ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு. பூமியைச் சுற்றிலும் வெறு மை, வெறுமை. சூரிய குடும்பம், அண்டவெளியில் பரந்து விரிந்துள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றி வியந்து தொடங்கும் வெல்ஸ், பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்துடன் உலகை ஒப்பிட்டு அறிவியல் நோக்கில்…

சோழர் மற்றும் சேரர் போர்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

சோழநாட்டரசன் பெரும்பூண் சென்னி என்பவன், தன்னுடைய சேனாதிபதியாகிய பழையன் என்பவன் தலைமையில் பெருஞ்சேனையை அனுப்பி வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின்மேல் போர் செய்தான். இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியின் கீழிருந்த கட்டூரைச் சோழன் சேனாதிபதி பழையன் எதிர்த்தான்.இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கியிருந்த சிற்றரசர்களாக நன்னன் (நன்னன் உதியன்). ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலானவர் பழையனை…

போரும் மறப்பண்பும்

போரும் போர் முறைகளும் (1) மறப்பண்பு சங்க நூல்கள் தமிழரின் போரையும் போர் முறையையும் பற்றி விரிவாகக் கூறுகின்றன. அக்காலத்து வாழ்ந்த தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவராக விளங்கினர். அவருடைய பழக்கவழக்கம், தொழில், விளை யாட்டு யாவும் போர்ப் பண்புடன் திகழ்ந்தன. தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத் தாலி அணிந்து இன்புற்றனர். சங்கு, சக்கரம், தண்டாயுதம்…

நடுகல்: தொல்குடி வழிபாடும் தலைமையும்

தொல்குடி வழிபாடும் தலைமையும் : நடுகல் வழிபாடு பழங்குடியினரின் ஆவி வழிபாட்டிலிருந்து தோன்றியது குடியிலுள்ள ஒருவன் இறந்துவிட்டால் அவன் இறந்து விட்டதாகக் கருதவில்லை. அவன் உடனிருப்பதாகவே பழங்குடியினர் கருதுகின்றனர். ஆன்மா உடலிலிருந்து பிரிந்து சாவு ஏற்படாமலேயே சில காலம் இருத்தல் கூடும் என்பது பண்டைய மக்களின் நம்பிக்கை ”ஆன்மா” சில காலம் இருக்க முடியுமானால் நெடுநாட்கள்…

இராமலிங்கர்: எதார்த்தமும் ஆன்மீகமும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் -இராமலிங்கர் 1823-ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்கர் தமது ஆன்மீகப் பயணத்தைத் தமது பத்துப்பன்னிரண்டு வயதிலேயே தொடங்கி விட்டதாக அவரைப் பற்றிய வரலாறுகள் தெரிவிக்கின்றன. அவர் சின்ன வயதில் முறையாகப் படிக்கவில்லை; பள்ளிக்கூடம் போக மறுத்தார்; ஒற்றியூர்க் கோயில், அதை ஒட்டிய நந்தவனம், முருகள் கோயில் ஆகிய…

தொல்லியல் நோக்கில் கரூர்: வணிகச் சிறப்பு

தொல்லியல் நோக்கில் கரூர் : கரூர் பழங்காலந்தொட்டே வாணிகத்தில் சிறப்புற்றிருந்தது. என்பதை அகழ்வாய்வு அடிப்படையில் காணமுடிகிறது.கரூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள பானை ஓடுகளும், கல்வெட்டுகளும், பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆட் பெயர்களும் கரூரின் தொன்மையை உணர்த்தும் ஆவணங்களாகும். அ. கல்வெட்டுகள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் கரூர் பொன் வாணிகன் நத்தி…

பெரியாண்டவன் கோயிலின் அமைவிடங்கள்

பெரியாண்டவன் கோயிலின் அமைவிடம் புதுவையில் மிகப் பழமையான நகராட்சியினைக் கொண்ட பகுதியாகவும், புதுவையின் நெற்களஞ்சியமாகவும் விளங்குவது ‘பாகூர்’ எனும் ஊராகும். இங்குள்ள ஏரியின் கரையோரத்தில் உள்ள ‘கரமேடு’ எனும் குடியிருப்புப் பகுதியில்தான் இப்பெரியாண்டவன் கோயில் உள்ளது. அரசு அடிப்படையில் பார்க்கும்போது, இப்பகுதி கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாட்டுப் பகுதியாகும். ஆனால், அந்த ஏரியும் அதைச் சுற்றியுள்ள…

தொழில், குடித்தொழில் – வரையறை

தொழில், குடித்தொழில் – வரையறை ஒரு சமூகத்தில் நாகரிகமும் பண்பாடும் பளர்வதற்கு அதன் அடிப்படைத் தேவைகளே மூல காரணங்களாக அமைகின்றன. இலக்குகள் இன்றிக் காடுகளிலும் மலைகளிலும் நாடோடிகளாய்த் திரிந்த பண்டைய சமூகத்தினர் தங்களின் நிலையினை உணரத் தொடங்கியபோது தொழில் தோற்றம் பெற்றது. தொழிலுடன் பிணைந்த வாழ்க்கை முறைமையை மேற்கொண்ட தமிழ்ச் சமூகம் அதன் அடுத்தகட்டமாகத் தம்மை…

மாலுமி ஒளிமுத்து தேவேந்திரர்

மாலுமி ஒளிமுத்து தேவேந்திரர் இந்தியச் சுதந்திரப்போராட்டம் தீவிரமடைந்துவிட்ட நேரம் அது. இங்கிலாந்தில் ஏகாதிபத்திய வெறிபிடித்த வின்ஸ்டன் சர்ச்சிலின் அமைச்சரவை வீழ்ந்து, உதட்டளவில் இந்திய விடுதலை கோரிக்கையை ஆதரிக்கும் தொழில் கட்சி அமைச்சரவை அட்லி தலைமையில் பதவியேற்ற நேரம் விடுதலைப் போராட்ட வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்போடு அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டனர். 1946 பிப்ரவரி…

பரங்கிப்பேட்டை துறைமுகம்

பரங்கிப்பேட்டை துறைமுகம் ரங்கிப்பேட்டை சோழ மண்டலத்தில் அதிக அளவு கடல் வணிகம் செய்துவந்த துறைமுகமாகும். போர்த்துகீசியர் இந்த துறைமுகத்திற்கு “போர்ட்டோ நோவா’ (Portonovo) புதிய துறைமுகம் எனப் பெயரிட்டனர். இப்பெயர் பின்னர் பரங்கிப்பேட்டை என வழங்கலாயிற்று. (ஐரோப்பியரை பரங்கிகள் என்று அழைப்பது அக்கால வழக்கம்) இத்துறைமுகத்திற்கு ‘முஹம்மது பந்தர்’ என்ற பெயரும் உண்டு. 1649-ல் முஸ்லிம்கள்…