மாலுமி ஒளிமுத்து தேவேந்திரர்
இந்தியச் சுதந்திரப்போராட்டம் தீவிரமடைந்துவிட்ட நேரம் அது. இங்கிலாந்தில் ஏகாதிபத்திய வெறிபிடித்த வின்ஸ்டன் சர்ச்சிலின் அமைச்சரவை வீழ்ந்து, உதட்டளவில் இந்திய விடுதலை கோரிக்கையை ஆதரிக்கும் தொழில் கட்சி அமைச்சரவை அட்லி தலைமையில் பதவியேற்ற நேரம் விடுதலைப் போராட்ட வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்போடு அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டனர்.
1946 பிப்ரவரி 19-இல் பம்பாய் ராயல் இந்திய கப்பற்படையைச் சேர்ந்த வீரர்கள் போர்க்கொடி தூக்கினர். ஊதிய உயர்வு, பதவி உயர்வு, சமவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முதலில் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். நெருக்கடிகளை ஏற்படுத்துகிறார்களே என்று பிரிட்டிஷ் தளபதி பி. டபிள்யூ கிங் கோபம் கொண்டார். போராடும் வீரர்களைப் பார்த்து கூலிகளுக்கும். நாய்களுக்கும் பிறந்த பயல்களே என்று இழிமொழி கூறித் திட்டியதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். போராட்டம் தீவிரமடைந்தது. கப்பற்கடை வீரர்களின் புரட்சிக்கு ஆங்கிலத் தளபதியின் இழிமொழி உடனடிக் காரணமாக அமைந்தது.
பம்பாயில் தொடங்கிய இந்தப் புரட்சி கராச்சி, கல்கத்தா, கொச்சி ஆகிய துறைமுகங்களுக்குப் பரவியது. 74 கப்பல்கள் 4 நாசகாரிகள் கப்பற்படையைச் சார்ந்த 20 நிறுவனங்கள் ஆகியவற்றிலுள்ள இந்திய வீரர்கள் இந்தப் புரட்சியில் ஈடுபட்டனர். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற முழக்கங்கள் அன்னிய ஆதிக்க எதிர்ப்பு முழக்கங்களாக எங்கும் எதிரொலித்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணிலிருந்து விரட்டுவதே தங்கள் லட்சியம் என்று முழங்கினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பம்பாய் கப்பல் கிளர்ச்சியில் பம்பாய் கப்பல்படை மாலுமியாக இருந்த ஒளிமுத்து தேவேந்திரா கலந்து கொண்டு தண்டனை பெற்றவர் ஆவார். 1946-ல் பம்பாயில் இந்தியாவின் இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் தலைமையில் அதாவது இரகசியமாக நடந்த கப்பற்படை கூட்டத்தில் ஒளிமுத்து தேவேந்திரரும் கலந்து கொண்டார். அவர் பேசிய பேச்சின் விபரம் வருமாறு.
“முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். எந்த இந்தியப் படையை ஆங்கிலேயர்கள் முதலில் வைத்து இந்தியாவினுள் நுழைந்தார்களோ, அதே கப்பல் படையை வைத்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டே விரட்டுவோம். இந்தியா விடுதலை பெறுவதே நமது இலட்சியம். அதற்காக எங்கள் உயிரையும் விடத்தயார்” என்று பேசினார். மேலும் அவர் அத்தனை கப்பலிலும் உள்ள ஆங்கிலப் படை அதிகாரிகளை கைது செய்துவிட்டால் பிரிட்டிஷார் அடி பணிந்துவிடுவார். எனவே நாம் பலம் வாய்ந்த பிரிட்டிஷாரின் தரைப்படை, விமானப்படையையும் நாம் எளிதில் அடக்கிவிடலாம் என்று கூறிய ஆலோசனை ஏற்கப்பட்டது.
இந்த இரகசியத் திட்டத்தின்படி 1946ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி காலை 11 மணிக்கு இந்தியக் கப்பற் படையினர் கல்கத்தா, பம்பாய், கராச்சி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, சென்னை போன்ற துறைமுகங்களில் ஒளிமுத்து தேவேந்திரரின் ஆலோசனைப்படி கலவரத்தைத் தூண்டினார்கள். இந்தியப் படைக்கப்பல்களில் இருந்த ஆங்கிலேயர்கள் கைது செய்யப்பட்டார்கள், ஆயுதக் கிடங்குகள் சூரையாடப்பட்டன, வெளிநாட்டில் இருந்த இந்தியப்படையும் கலவரத்தில் ஈடுபட்டது.
தளபதி சுந்தரலிங்கனார் – பேரா.தே. ஞானசேகரன்
₹110
Buy Link : https://heritager.in/product/commander-sundaralinganar/
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்