மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள் :
இந்தியாவின் பழமையின் சிறப்புகளைப் பாதுகாக்கவும் வளர்ச்சியடையாத பகுதிகளை இனங்கண்டு மேன்மைப்படுத்தவும் பழங்குடியினரின் கல்வி, பொருளாதார திட்டங்களை நடத்து வதற்கும் புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. பீகார் மலையின மக்கள் மேம்பாட்டு நிறுவனம், வங்காளத்தில் உள்ள பண்பாட்டு ஆய்வு நிறுவனம் ஆகிய இரண்டும் முறையே 1954, 1955- ஆம் ஆண்டுகளில் தொடங்கப் பெற்றன. அவ்விரண்டு நிறுவனங் களும் அருங்காட்சியகங்களை அமைத்துள்ளன. சேகரிப்பு, கல்வி, காட்சி, ஆய்வு என்னும் பன்முக நோக்கில் இவ்விரு அருங்காட்சி யகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் ஊட்டியில் மலையின மக்கள் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் மேம்பாட்டுமையங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எல்லா நிறுவனங்களிடமும் அருங் காட்சியக அமைப்பு இல்லை.
இந்திய மானிடவியல் அருங்காட்சியகங்களின் புதியப் பரிணாமம் என்னும் தனிச் சிறப்புடன் போபாலில் “மனித அருங் காட்சியகம்” (Museum of Man) என்ற திறந்தவெளி அருங்காட்சியகம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகப் பொருட்களின் இயல்பான பண்பாட்டுச் சூழலை உணர்த்தும் வண்ணம் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பாகும். பல்வேறு வகையான மரபுச் சிறப்பிற்குரியக் குடிசைகள், மண் வீடுகள் பயன்பாட்டுக் கட்டுமானங்கள் திறந்த வெளியிலும் காட்சிக் கூடங்களிலும் அழகாகக் காட்சிப்படுத்தி யுள்ளனர்.
இந்தியாவில் தற்பொழுதுள்ள மானிடவியல் அருங்காட்சி யகங்களில் சிறப்பாகப் பேசப்படும் அமைப்புகளின் பெயர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
1. தேசிய அருங்காட்சியகம், புதுதில்லி,
2. இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா,
3. மைய அருங்காட்சியகம், என்.ஈ.எப்.ஏ,
4. லேடி வில்சன் அருங்காட்சியகம், பரோடா, குஜராத்,
5. சுணாகாத் அருங்காட்சியகம், சுணாகாத், குஜராத்,
6. இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், திருவனந்தபுரம்,
7. சென்னை அரசு அருங்காட்சியகம், சென்னை,
8. மைய அருங்காட்சியகம், நாக்பூர்,
9. நாகலாந்து மாநில அருங்காட்சியகம், கோகிமா,
10. ஒரிசா மாநில அருங்காட்சியகம், புவனேஸ்வர்,
11. பஞ்சாப் அரசு அருங்காட்சியகம்.
12. மைய அருங்காட்சியகம், ஜெய்பூர்,
13. மானிடவியல் அருங்காட்சியகம், கொல்கத்தா பல்கலைக்கழகம்,
14. மானிடவியல் அருங்காட்சியகம், குஜராத் பல்கலைக்கழகம்,
15. மானிடவியல் அருங்காட்சியகம், லக்னோ பல்கலைக்கழகம்,
16. மானிடவியல் அருங்காட்சியகம், பஞ்சாப் பல்கலைக்கழகம்,
17. பீகார் பழங்குடியினர் ஆய்வு நிறுவனம், ராஞ்சி,
18. பண்பாட்டு ஆய்வு நிறுவன அருங்காட்சியகம், கொல்கத்தா,
19. இராமகிருஷ்ணன் ஆசிரம நூலக அருங்காட்சியகம்,
20. ஸ்ரீ கிரிதர் பாய் சங்கராலயா சிறுவர் அருங்காட்சியகம்,
21. ஓவியக் கூடமும் அருங்காட்சியகமும், பரோடா,
22. பிர்லா அகெடமியின் சுலை, பண்பாட்டு அருங்காட்சியகம், கொல்கத்தா,
23. மானிடவியல் அருங்காட்சியகம், ராஞ்சி பல்கலைக்கழகம், ராஞ்சி.
என்னும் அருங்காட்சியகங்கள் தேசிய மாநில முக்கியத்துவம் கொண்ட அருங்காட்சியகங்களாகும். தற்பொழுது 500-க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் மானிடவியல் அருங்காட்சியகங்கள் என்னும் நிலையில் 60-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் இடம் பெறுகின்றன. தற்பொழுது இத்துறையில் பல அருங்காட்சியகங்கள் ஏற்படுத்து வதற்குரிய வாய்ப்புக்களை இழந்து வரும் சூழல் உள்ளது. ஏனெனில் அரசன் புதிய கல்வி, பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள் பழங்குடியினரின் வாழ்க்கை முறைகளை மாற்றம் அடையச் செய்து விட்டன. பாரம்பரியம் – மரபு பண்பாட்டுச் சின்னங்கள் சிதைந்தும், அழிந்தும், அருகியும் வருகின்றன என்பது குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
இந்திய மானிடவியல் அருங்காட்சியகங்களின் சேகரிப்புக் களையும், காட்சிக் கூடங்களையும் இனிக் காண்போம். (நூலிலிருந்து)
இந்திய அருங்காட்சியகங்கள் – முனைவர் இராசு. பவுன்துரை
விலை: 75/-
வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/india-arunkaatchiyagangal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers