சோழன் செங்கணான் – தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்

சோழன் செங்கணான்:

பழந்தமிழ் இலக்கியம் என்னும்போது அது பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவைகளையே பொதுவாக உணர்த்தும். பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகையில் அடங்கிய பதினெட்டு சிறுநூல்களுள் ஒன்றான “களவழி நாற்பது’ என்னும் நூலின் இறுதியில், “சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் (திருப்) போர்ப் புறத்துப் பொருது. உடைந்துழி, சேரமான் சுணைக்கால் இரும்பொறையைப் பற்றிக் கொண்டு சோழன் சிறை வைத்துழி, பொய்கையார் சுளம்பாடி, வீடுகொண்ட களவழி நாற்பது” என்னும் குறிப்பு உள்ளது.

புறநானூற்றுப் பாடல் (74) ஒன்றன் முடிவிலே. ”சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டுக்குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து; “தண்ணீர்தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு” என்று கூறுகிறது. சோழன் செங்கணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையுடன் போரிட்டு அவனைச் சிறை செய்து காவலிலே வைத்திருந்தான் என்ற செய்தி வேறு இடங்களிலும் காணப்படுகிறது.

முதற் குலோத்துங்க சோழன் கலிங்கத்தின் மீது கொண்ட வெற்றியைப் பாராட்டி ஜயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியிலும் அவனுக்குப் பின்னால் வந்த விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கள், இரண்டாம் இராஜராஜன் ஆகிய மூவர் மீதும் ஒட்டக்கூத்தர் பாடிய உலாக்களிலும் இராச பாரம்பரியம் கூறும் இடங்களில் இந்தச் செய்தி உரைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். வேறு சில பாடல்களும் உண்டு. தனிப் பாடல்களும் அவற்றை ஆராய்ந்த ஆசிரியர்கள் சில்லறை விவரங்களுள் அவற்றினிடையே சிறு வேறுபாடுகள் காணப்படுவதைக் கொண்டு அவையாவும் ஒரே நிகழ்ச்சியைக் குறிப்பனவாக இருப்பதற்கில்லை யென்றும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களைக் குறிப்பனவாகவே இருத்தல் வேண்டும் என்றும் கருதுவர்.

அவர்கள் காணும் குறைபாடுகள் விளக்க முடியாதவைகள் அல்ல. நுணுகிக் கவனித்தால் அவைகளைச் சமரசப்படுத்தி இணைத்து நிகழ்ச்சியை விவரிக்க முடியும். அன்றி, ஒரே விதமான பெயர்களைக் கொண்ட வேறு வேறானவர்களிடையே ஒரே இடத்தில் ஒரே மாதிரியான சம்பவங்கள் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்தன என்று கருதுவது ஏற்கக் கூடியதாக இல்லை. அவை அசாத்தியம் அல்லவாயினும் அசம்பாவிதமே.

களவழி நாற்பதிலே. ”காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் (பாடல் 36) குறிக்கப்பட்டுள்ளது. சோழன் செங்கணான் கழுமலம் என்ற இடத்திலே கொண்ட வெற்றியையே அது உணர்த்தும் ”கணையன் அகப்படக் கழுமலம் தந்த” சோழன் ஒருவனைப் பற்றி அகநானூற்றுப் பாடல் (44) ஒன்றும் குறிப்பிடுகிறது.

நூலிலிருந்து…….

Original Price: Rs.450/-
Offer Price: Rs. 383 /-

To order on WhatsApp: wa.me/919786068908
Buy this book online: https://www.heritager.in/product/t-n-subramaniyan-essays/
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BnRcbhAvXJFI3IjYA8zLth
Call: 097860 68908
Buy online: www.heritager.in