நுண்கற்காலக் கருவிகள்:
வைகைக் கரையிலுள்ள துவரிமானில் (துவரைமாந்தூர்) இத்தகைய நுண்கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்கூடம் செயல்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ராசேந்திரன்.பொ,சொ.சாந்தலிங்கம், 2015, 235).
கூடலூர் சாம்பல்மேடு, தாதனோடை மேடு, சாக்கலூத்து மெட்டு, போடி அணைக்கரைப்படி, கொட்டோடைப்பட்டி, தெப்பத்துப்பட்டி, சென்னம்பட்டி, சாலைப்பிள்ளையார் நத்தம், மந்தையூர், ஆனையூர், சித்தர்மலை அணைப்பட்டி மேட்டுப்பட்டி, சித்தர்நத்தம், விக்கிரமங்கலம்,திடியன். அம்பட்டையம்பட்டி, பி.கன்னியம்பட்டி, டி.கல்லுப்பட்டி, கோபாலபுரம், கருவேலம்பட்டி, கோட்டநாயக்கன்படி, குன்னார்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, தச்சுப்பட்டி, கும்பமலை, பழையூர், தொட்டனம்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, எம்.கல்லுப்பட்டி ஆகிய இடங்கள் நுண்கற்காலத்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளவையாகும் (K.Rajan, V.P. Yathees Kumar, S.Selvakumar. 2009)
வைகை வெளியில் நுண்கற்கருவிகள் கிடைத்த இடங்களை
1. ஆற்றங்கரை
2. மலைப்பகுதி
3.குன்று அடிவாரம்
4. புதர்க்காடுகள்
ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்க முடியும்.
1.ஆற்றங்கரை:
கூடலூர் சாம்பல்மேடு, போடி அணைக்கரைப்படி, கொட்டோடைப்பட்டி, சித்தர்மலை அணைப்பட்டி, சித்தர்நத்தம், விக்கிரமங்கலம், துவரிமான்
2. மலைப்பகுதி
சாக்கலூத்துமெட்டு
3. குன்று அடிவாரம் :
திடியன். அம்பட்டையம்பட்டி, பி.கன்னியம்பட்டி, கும்பமலை,
4. புதர்க்காடுகள்:
ஆனையூர், டி.கல்லுப்பட்டி, தொட்டனம்பட்டி,எம். கல்லுப்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, தச்சுப்பட்டி, கோபாலபுரம்,கருவேலம்பட்டி, கோட்டநாயக்கன்படி. குன்னார்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, பழையூர், தெப்பத்துப்பட்டி
இவற்றில் பொருப்புமேட்டுப் பட்டி, பெருமாள் கோவில்பட்டி, கணவாய்பட்டி, தச்சுப் பட்டி.எ.கோபாலபுரம், துள்ளுக் குட்டி நாயக்கனூர். பாப்பிநாயக்கன்பட்டி, வீராப்பட்டி ஆகிய இடங்கள் உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியின் குண்டாற்றுப் பகுதியில் வீ. செல்வக்குமார் அவர்களால் கண்டறியப்பட்டவை. இடைக்கற்காலக் கருவிகள் கிடைத்த நில அமைப்பும் நுண்கற்காலக் கருவிகள் கிடைத்த நில அமைப்பும் நீர் நிலை, குன்று அடிவாரம். புதர்க்காடுகள் என்று ஒரே மாதிரியாகக் கிடைத்திருப்பது இங்கு கருதத்தக்கதாகும்.(நூலிலிருந்து)
வைகைவெளி தொல்லியல் – பாவெல் பாரதி
விலை: 350/-
வெளியீடு: கருத்து=பட்டறை
Buy this book online: https://www.heritager.in/product/vagai-veli-tholliyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers