கட்டுரைகள்

ஆரணி ஜாகீர்தார்களின் மறுபக்கம் – வேலுதரண்

காலச்சுழற்சி என்பது எல்லாவற்றிற்கும் பொதுவானது என்பது நிதர்சனமான உண்மை. அதிலிருந்து அரசர்களுக்கு, ஏன் கடவுளுக்கு கூட விதிவிலக்கு கிடையாது என்பதைப் புராணங்களும் கூறுகின்றன. 300 வருடங்களுக்கு மேலாக ஆரணியை ஆண்ட ஜாகிர்தார்களின் வாழ்வு முறையை, அதுவும் குறிப்பாக 12வது தலைமுறை ஜாகிர்தாரைப்ப பற்றிய பதிவே இக்கட்டுரை. ஆரணி ஜாகிர்தார்கள் என்பவர்கள் யார் ?. எங்கிருந்து வந்தார்கள்? இவர்கள் அரசர்களா?. இவர்களுக்கும் ஆரணிக்கும் என்ன தொடர்பு? இது போன்று என்னுள் எழுந்த இக்கேள்விகளுக்கு விடை காண விழைந்ததே இத்தேடல்.

ஆரணி ஜாகீர்தார்களின் மறுபக்கம் – வேலுதரண் Read More »

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை

நாள் கதிர் மற்றும் புத்தரிசி நாட்களிலெல்லாம் எங்களுக்காக தாத்தா கொடுத்த விடுப்புக் கடிதங்கள் 1980 வரை எங்கள் பள்ளியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று என் மகனிடம் 2018ல் சொல்லும் போது “இதுக்கெல்லாமா விடுப்பு தருவாங்க அட போங்கப்பா” என்று சிரிக்கிறான். ஆனால் கொடுத்தார்களே, அது உண்மைதானே. இந்தப் பேச்சு ஆரம்பித்த இடம் சுவையானது. அண்மையில் கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பேரியாற்றின் கதை தேடுகையில் சேரமான் கோதையும், பிட்டங்கொற்றனும், பொலந்தார் குட்டுவனும் எதிர்பட்டார்கள். அப்பொழுது என் நினைவுகளைக் கிளறிவிட்டுச்

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கழுவப்படாத பானை Read More »

மேகதாது பயணம்

கடந்த இருபத்திமூன்றாம் தேதி ஞாயிறு அன்று, நண்பர் மூர்த்தி அவர்களது அழைப்பின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஹோசூர்க்கு நாங்கள் பயணமானோம். பயணம், சேலத்தில் இருந்து அதிகாலை 1.30 க்கு பேருந்தில் துவங்கி அதிகாலை ஐந்து மணிக்கு ஹோசூர் சென்றடைந்தேன், பேருந்து நிலையத்தில் எனக்காக மூர்த்தி காத்திருந்தார். அவருடன் அவரது இல்லத்திற்கு சென்று அங்கு குளித்துவிட்டு, காலை சூடான காபி அருந்திய பிறகு மூர்த்தி அவர்களது நண்பர்கள் ஐந்து பேர் டாடா சுமோ வாகனத்துடன் வர காலை ஆறு மணிக்கே

மேகதாது பயணம் Read More »

உலகின் மிகப் பழமையான பானை

         நமக்கெல்லாம் பானை என்றாலே மெசபடோமியாவின் பீர் பானைகளையும், கிரேக்கத்தின் ஒயின் பானைகளையும் அல்லது எகிப்தையோ நோக்கித்தான் தலைகள் திரும்பும்.   நாகரிக வளர்ச்சியை, நாம் மேற்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கிழக்கே சுமார் 16 ஆயிரம் ஆண்டுகள் பழமையானப் பானை ஓடுகள் நமக்கு கிடைத்துள்ளன. ஆம், பொதுவாக நமது எண்ணங்களில் பானை எனபது மெசபடோமியாவில் உருவாகியது என்று தான் இருக்கும். ஏனென்றால் பானைகளைச் சக்கரம் வைத்து உருவாக்கியது அங்குதான் என அறிஞர்கள்

உலகின் மிகப் பழமையான பானை Read More »

ஈழத்தில் சோழரின் சுவடுகள்

இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறிய நாடான இலங்கை பல வரலாற்று தடங்களைக் கொண்டிருக்கிறது.  குறிப்பாகத் தமிழர்களின் வரலாற்று எச்சங்களை தாங்கியிருக்கும் அற்புத நாடாக திகழ்ந்து வருகிறது. இராமாயணப் புராண நிகழ்வுகள் நடைபெற்ற இடமாக கருதப்படும் இலங்கை, அதனை ஆண்ட மன்னன் இராவணனின் பெயரால் “இராவணபுரி” என்றும். “இலங்கை” என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீவு நகரத்திற்கு  “இலங்கேஸ்வரம்”, ” இலங்காபுரி”, “சிலோன் ” என்ற மற்ற பெயர்களும் உண்டு. இலங்கையில் பிரதான மதமாகக் கருதப்பட்டு வருவது புத்த மதமே ஆகும். கி.மு

ஈழத்தில் சோழரின் சுவடுகள் Read More »

ஆதி இந்தியர்கள் யார்?

“சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது!” ‘எர்லி இந்தியன்ஸ்’ நூல் ஆசிரியர் டோனி ஜோசப் நேர்காணல் சந்திப்பு: ஆதி வள்ளியப்பன் சு. அருண் பிரசாத் ‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள்-தமிழர்கள் யார்?’ என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பல காலமாக விவாதிக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியான ‘எர்லி இந்தியன்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் அவர் ஆன்ஸெஸ்டர்ஸ் அண்ட் வேர் வீ கேம்

ஆதி இந்தியர்கள் யார்? Read More »

தளபதிக்கு பெண்வேடமிட்ட புலிகேசி…

கிபி. ஏழாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முக்கியமான பயணி யுவான் சுவான் ஆவார். இவர் வட மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பௌத்த அடையாளங்களைக் காணவும், நூல்களைத் திரட்டிச் செல்லவும் வந்ததாகக் கூறப்படுகியது. தென்னகத்தில் யுவான்சுவாங் பயணம் மேற்கொண்டபோது காஞ்சி வருவதற்கு முன்பு சாளுக்கிய நாட்டை அடைந்தார். அந்நாட்டை ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த இரண்டாம் புலிகேசி திறம்பட ஆட்சி செய்து வந்தான். அவன் பல்லவர்களின் பரம எதிரி. பல்லவர்கள் தென்னகத்தில் வளரவிடாமல் தங்களின் சாளுக்கியப் பேரரசுக் கனவை

தளபதிக்கு பெண்வேடமிட்ட புலிகேசி… Read More »

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்

[embedyt] https://www.youtube.com/watch?v=VL120G0maHg[/embedyt] ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. – ஆர். பாலகிருஷ்ணன் தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்வதில் தொல்லியலின் பங்கு பற்றி நன்கு விளக்குகின்றார் நிவேதிதா. கடந்த சில பத்தாண்டுகளில் உருவான தொல்லியல் சார்ந்த

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ் Read More »

வேலூரில் இறந்த இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்

இலங்கையைப் பல்வேறு காலங்களில் சோழர், நாயக்கர், சிங்களர் என பல அரச மரபினைச் சார்ந்த மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே (1520) இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டியைத் தலைநகரமாகக் கொண்டு சேன சம்பந்த விக்கிரமபாகு 1469ல் கண்டியில் தன் அரசினை அமைத்தார். இவருடைய ஆட்சி காலம் சுமார் 42 ஆண்டுகளாகும். இவரைத் தொடர்ந்து ஆறு சிங்கள அரசர்கள் கண்டியை ஆட்சி புரிந்துள்ளனர். பொ.பி.1707  முதல் பொ.பி.1739 வரையிலான காலத்தில் கண்டியை ஆண்ட விக்ரமபாகு

வேலூரில் இறந்த இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன் Read More »

வேலூரின் பழங்கால நீர் மேலாண்மை –

வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோட்டையும், கோயிலும், சம்புவராயர், விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் கலைப்பாணிக்கு ஒர் சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.  தமிழ் நாட்டில் உள்ள கோட்டைகளிலேயே சிறந்ததாகவும், கலை நயமும், உறுதியும் கொண்டதாக நிமிர்ந்து நிற்கின்றது.  கௌடில்யாரின்  விஸ்வகர்ம சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள 12 வகையான ேகாட்டைக்குள் “ஏகமுக துர்க்கம்” அதாவது ஒேர வாயில் கொண்ட ேகாட்டையாக நீர் சூழ்ந்தாக கட்டப்பட்டுள்ளது.  சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் 

வேலூரின் பழங்கால நீர் மேலாண்மை – Read More »

Shopping Cart