கட்டுரைகள்

கோயில் வகைகள்

எந்தவொரு பொருளும் 100 ஆண்டுகளை கடக்குமேயானால் அப்பொருள் தொல்பொருளாக கருதப்படுகிறது. கல்வெட்டுச் சிறப்பு, கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை சிறப்புக் கருதி தமிழகத்தில் பல கோயில்களை வரலாற்று நினைவுச் சின்னங்களாக பராமரித்து வருகிறது. இந்த சமய அறிநிலைத் துறையின் நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. மத்திய, மாநில தொல்லியல் துறை கோயில்கள் மட்டுமல்லாமல் அரண்மனைகள், கோட்டைகள், கல்லறை என பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவித்துள்ளன. கோயில்களை ஒன்றுபோல் அமையாமல் பலவித கோயில்களை கட்டமைத்த காரணமே இறைப்பற்றை வளர்க்கவும்,

கோயில் வகைகள் Read More »

சோழர்கள் கொண்டாடிய இராஜராஜனின் சதயநாள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் அமைந்துள்ள 108 சிவாலயத்தில் சோழ சக்கரவர்த்தி மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு உருவச்சிலை எடுத்துப் பிறந்த நாள் கொண்டாடியது கல்வெட்டுத் தகவலாக அக்கோயிலில் உள்ளது. இக்கல்வெட்டைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட சோழர் வரலாறு ஆய்வு சங்கத் தலைவர் வரலாற்று ஆய்வாளர் அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் நேர்காணல். சோழ சக்கரவர்த்தி மாமன்னர் ராஜராஜ சோழர் பிறந்த வருடம் நாள் இவற்றை உறுதிப்படுத்திட சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அவர் பிறந்த மாதம் ஐப்பசி

சோழர்கள் கொண்டாடிய இராஜராஜனின் சதயநாள் Read More »

பண்பாடுகளின் கலங்கரை விளக்கங்கள்

“ஒரு காவல் தெய்வம் கோயில், அங்கு மிக அழகிய வண்ண மயமான காவல் தெய்வம், அனுமன் சிலை, விநாயகர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ளன. பல கடவுள்களை வழிபடும் முறை நம்மிடையே உண்டு என்பதின் வெளிப்பாடாய் நான் இப்படத்தை பார்க்கிறேன். இக்கோயில் திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள பட்டிணம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோயில் என்னை மிகவும் கவர்ந்ததற்கான காரணம் இது மிகப் பழமையானதோ, அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்கதோ அல்ல இக்கோயில் ஒரு கிராமிய பண்பாட்டில்

பண்பாடுகளின் கலங்கரை விளக்கங்கள் Read More »

பனைத் தொழிலின் தொன்மம்

தமிழக வரலாற்றில், தொடர்ச்சியான எழுத்துச் சான்றுகள் பெற்ற மரம் பனை என்பார் எழுத்தாளர் ஆ.சிவசுப்பரமனியம். ஊர்நாட்டுப் பகுதிகளில் பனைமரம் பற்றிய ஒரு நாட்டுபுற பாடல் உண்டு. “கட்டுகு கவுராவேன் கன்னுகுட்டிக்கு தும்பாவேன் கட்டிலுக்கு கயிராவேன் களைத்து வாராவனுக்கு நுங்காவேன் பசித்து வாரவனுக்கு பழம்மாவேன் ருசிக்க வாராவனுக்கு கிழங்காவேனு ” இது தென்னைக்கும் பொருந்தும். கொடுப்பதில் வள்ளவர்கள் இருவரும். அதன் வழியே பனையிலிருந்து கிடைக்கும் கள்ளும் தெளுவும் கருப்பட்டி பொருட்களையும் வரலாற்றோடு இணைத்து பார்ப்போம். தொல்பழங்கால கல்வெட்டுகளில்: மதுரை

பனைத் தொழிலின் தொன்மம் Read More »

மல்லை ரகசியம்

மல்லையில் உள்ள கடற்கரைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் இரட்டை விமானங்கள் தமிழகத்தின் ஒரு முக்கியமான அடையாளம் என்றால் அது மிகையாகாது. இந்த விமானங்களைக் காண்கையில், இது இரண்டு கோயில்களை உள்ளடிக்கியது என்று தான் பலரும் நினைப்பர். ஆனால், இங்கு மூன்று கோயில்கள் உண்டு. 1. கிழக்கு நோக்கிய சிவன்கோயில் 2. மேற்கு நோக்கிய சிவன் கோயில் 3. இரண்டிற்கும் நடுவே உள்ள விஷ்ணு ஆலயம் இவற்றிற்கு முறையே, ராஜசிம்ம பல்லவேஸ்வர க்ரிஹம் என்றும், க்ஷத்திரிய சிம்ம

மல்லை ரகசியம் Read More »

காணிக்காரர்கள் – 3

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள  மாநிலங்களின் தென்கோடியில், மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றனர். கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்களைப் பற்றிய பல வாழ்வியல் முறைகளைப்  பற்றி  கடந்த இரு இதழ்களில் கண்டோம்.. வாழ்க்கைவட்ட சடங்குகள்: திருமணம்: ஆண்மகன் விருப்பத்தைத் தந்தையின் மூலம் மூட்டுக்காணியிடம் தெரிவிக்கப்படுகிறது. ஆணின் தாய் தன் அண்ணனிடம் (தாய்மாமன்) வெற்றிலை பாக்கு பீடி, கருவாடு வைத்துக் கட்டுச்சோறு செய்து மகனுக்குத்

காணிக்காரர்கள் – 3 Read More »

கோனேரிராஜபுரத்தில் வீதியுலா

வேலை நிமித்தமாக கோனேரிராஜபுரம் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது, இந்த வருடம். மிக பழமையான ஊரைப் பார்க்க போகும் ஆசையில், கொஞ்சம் அவ்வூரின் வரலாற்று பக்கங்களை புரட்டினோம். உமா மகேஸ்வரர் கோயில், ஊரின் மத்தியில் உள்ள பெரிய கோயில். ஆறடி உயர நடராஜர் சிலை, அக்ரஹார வகை வீடுகள் என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எங்களின் தேடல். பல புகைப்படங்கள் கிடைத்தது இணையத்தில், அதில் செம்பியன் மாதேவி அம்மையார் அமர்ந்த நிலையில், இறைவழிபாடு செய்யும் புடைப்பு சிற்பம்

கோனேரிராஜபுரத்தில் வீதியுலா Read More »

பழங்குடிகளைத் தேடி

எருமை எமனோட வாகனமாம்.. அதோட தலைய வெட்டி இங்க வச்சுருக்காங்க. அது அந்தப் பக்கமா பார்க்குற மாதிரி இருக்கு சரி நம்ம இந்தப் பக்கமா பார்வைய செலுத்துவோம் னு எடுத்த புகைப்படம் தான் இவை. சரி ஏன் எருமை தலைய வெட்டி இப்படி வைக்கிறாங்கனு தேடும்போது சுவாரஸ்யமான சில விடயங்களைப் பார்க்க நேர்ந்தது. அதனுடைய பிம்பம் தான் இந்தப் பதிவு. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓர் பகுதியான நீலகிரி மாவட்டத்தின் சோலை வனங்கள் மற்றும் புல்தரைகள் அடர்ந்து வளர்ந்துள்ள

பழங்குடிகளைத் தேடி Read More »

பாண்டியரின் குடவோலை முறை

நம் பாடப் புத்தங்களில் அநேகமாக எல்லோரும் இச்சொற்றொடரை கேட்டதுண்டு, “குடவோலை முறை”. உத்திரமேரூரில் உள்ள முதல் பராந்தகன் சோழன் காலத்து பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகளே நம் இந்தியத் தேர்தல் முறைக்கு முன்னோடியாக விளங்கும் குடவோலை முறைப் பற்றி எடுத்துரைகின்றன. இக்கல்வெட்டுகள் படி ஊர்சபை அமைக்க, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குச் சொந்தவீடு இருக்க வேண்டும், சொந்த நிலம் இருக்க வேண்டும், சரியாக வரி கட்டியிருக்க வேண்டும், அதிகப்பட்சம் எத்தனை ஆண்டுகள் பதவி வகிக்கலாம் போன்ற விதி முறைகள்

பாண்டியரின் குடவோலை முறை Read More »

ஐரோப்பாவில் சோழர் செப்பேடு

சென்னையில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் கூட்டத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வரும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பட்டியலில் எனக்கும் ஒரு சிறு இடம் கிடைத்தது ! சிலகாலம் ஒல்லாந்து எனும் நெதர்லாந்து நாட்டில் தங்கியிருந்து அலுவல்களைக் கவனிக்க வேண்டும் ! நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மணி நேர இரயில் பயணத்தில் வரும் நகரம் குரோனிங்கென், இந்த நகரம் தான் தங்கி பணிபுரிய வேண்டிய ஊர் ! சற்றே அரைமணிநேரம் பயணித்தால் ஜெர்மனியின் எல்லையைத்

ஐரோப்பாவில் சோழர் செப்பேடு Read More »

Shopping Cart