Category வரலாறு

தெய்வங்களும் சமூக மரபுகளும்

தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு…

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள்

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள் : பழந்தமிழர்கள் நகரங்களை உருவாக்குவதில் திறமைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படைப் போன்றவை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அதைப் போலவே சிலம்பு, மேகலை காப்பியங்களும் நகரங்கள் குறித்தும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டும்…

ரிக் வேதகால ஆரியர்கள்

1.சிந்து இனம் (பணி) சிந்துப் பள்ளத்தாக்கில் நுழைந்தபோது ஊர்சுற்றி ஆரிய குதிரை வீரர்களை எதிர்த்து நின்ற இனம் உண்மையில் சிந்துப் பள்ளத்தாக்கில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இனமாகும். அவ்வினத்தின் நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சோதாரோ, ஹரப்பாவிலே கிடைத்துள்ளன. அதன் கலாசாரச் சின்னங்கள் தெற்கிலே குஜராத்வரையிலும், கிழக்கிலே யமுனா பள்ளத்தாக்கு வரையிலும் கிடைத்துள்ளன. கிழக்கில் அவை இன்னும்…

நாலந்தா

நவீன காலத்தில் பரகாவ் (வட கிராமம் -ஆலமர கிராமம்) என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி ஆரம்பகால சமண பௌத்த நூல்களில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராஜகிருஹ நகரத்தின் வளம் கொழிக்கும் புறநகர்ப்பகுதி (பாஹிரியா) நாலந்தா மஹாவீரர் 14 சதுர்மாஸ்யங்களை (பயணங்களில் இருந்து ஓய்வு எடுக்கும் மழைக்காலங்களை) இங்குதான் கழித்தார் என்று சமண நூல்களில் இருந்து தெரியவருகிறது. ராஜகிருஹத்தில்…

பாண்டியர் கொற்கை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆத்தூருக்கு வடமேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், வாழைத் தோட்டங்களால் சூழப்பட்ட வயல்களுக்கு மத்தியில், கொற்கை என்னும் குக்கிராமம் அமைந்து அணி செய்கிறது. கொற்கைக் கிராமத்தின் வடபுறத்தில் கொற்கையையொட்டிக் குளமொன்று அமைந்துள்ளது. இக்குளத்தைக் கொற்கைப் பகுதிமக்கள் பழைய துறைமுகம் என்று கூறுகின்றனர். குளத்தின்…

கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும்

கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும் : கோட்டையாகிய நகரத்தின் வழிகளும், தெருக்களும், கோட்டையின் அமைப்பினைப் பாகமாகவும் அதன் பதமாகவும் பிரித்துக்கொள்ளவேண்டும் என்று மயன் குறிப்பிட்டுள்ளார். நகரங்களில் அமையும் தெற்கு-மேற்கு வழியானது 12, 10, 8,6,4, அல்லது 2 என்று இரட்டைப்படையாக அமைந்தும், அவ்வாறே தெற்கு- வடக்கு வழிகள் இரட்டைப்படையில் அமைந்திருக்கக் கூடியதாகவும் 11,9,7,5,3 அல்லது 1…

தொண்டை நாடு பெயர் காரணம்

தொண்டை நாடு பெயர் காரணம் : தொண்டை நாடு தமிழகத்தின் பழமையான நாடுகளில் ஒன்றாகும். இப்பகுதி மூவேந்தரின் ஆட்சியில் நேரிடை தொடர்பு இல்லாது இருப்பினும் சேர சோழ பாண்டிய நாடுகளை விடப் பழமையான நாட்டுப் பிரிவுகளையும் மனித நடவடிக்கைகளையும் கொண்ட பகுதியாக விளங்கியது. சோழ மன்னனுக்கும் பீலிவளை என்ற நாக இளவரசிக்கும் பிறந்த குழந்தை கிழக்குக்…

காவிரியின் அணைக்கட்டுகள்

காவிரியின் அணைக்கட்டுகள் : கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரிமீது கட்டப் பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என்று அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.…

தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடு புழங்கு பொருள்களும்

பழந்தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் குறித்தும் தொழிற்குடியினர் குறித்தும் சங்க இலக்கியங்கள் முதலான செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தொன்மையும் தனித்தன்மையும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தொழிற் குடிகளின் சமூகப் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. உழவுக் குடி, நெசவுக் குடி, தச்சர் குடி, கொல்லர் குடி, குயவர் குடி எனத் தொழில்முறையால் அடையாளப்படும்…

தியாகராய நகர், அன்றும் இன்றும்

தியாகராயர் பாண்டி பஜார் பகுதிக்கு தியாகராயா ரோடு என்று பெயர். அது பிட்டி தியாகராயச் செட்டியார் என்ற நீதிக்கட்சி தலைவர் நினைவாக வைக்கப் பட்டது. சிலர் எழுதுவது போல அவர் பி. டி தியாகராய செட்டியார் அல்ல, ‘பிட்டி என்பது தெலுங்குப் பெயர். தி. நகர் பற்றிய புத்தகத்தில் அவரைப் பற்றியும் பிற நீதிக் கட்சிப்…