Menu

மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம்

மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம்.

ஜரோப்பாவிலிருந்து பல வணிகத்திற்காக வந்தனர். அவர்கள் வரும் நிலையில் முகலாயப் பேரரசு, விசயநகரப் பேரரசு, மராட்டிய பேரரசு வீழ்ச்சியை எதிர்கொண்டு இருந்த காலம் ஆகும்.

விசயநகரப் பேரரசின் தனிச் சிறு அலகாக உருவாக்கப்பட்டது. தான் பாளையம் என்பது இதை சோழர்கள், பாண்டியர்கள் முன்வைத்து நாடு என்பதோடு ஒப்பிடத்தக்கது. ஒரு நாடு என்பது இருபது, இருபத்தி ஐந்து கிராமங்களை கொண்டது. ஒரு கிராமம் என்பது சாதியப்படி நிலையில் பதினெட்டு தொழில்கள் செய்யும் பலரும் இருந்தால் மட்டுமெ அது ஒரு கிராமம் எனப்படும்; இல்லையெனில் அது அனரக் கிராமம் எனப்படும்.

விசயநகரம் பேரரசு தென்னிந்தியாவில் முகலாய அரசிற்கு நவாப் அரசிற்கு திரை செலுத்துபவர்களாக மாறி இருந்தனர். அதன் தொடர்ச்சியாக விசயநகர பேரரசின் அங்கமான பானையங்களும், நவாய் அரசிற்கு திரை செருத்துபவர்களாக மாறி இருந்த, ஐரோப்பிய வணிகக் குழுக்களில் பிரெஞ்சும், பிரிட்டானிய கிழக்கிந்திய கம்பெனியினரும் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர். அவர்களுக்குள் போட்டியும் மோதலும் கூட அவ்வப் போது நடந்தன.

முதலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு பின் அவர்களது வாரிசுகளுக்கு இடையே வாரிசுப் போர் உருவானது. தென்னியந்திய பகுதிகள் உரிமை கொண்டபடி சந்தாசாகிப்பும், ஆந்தாடு நவாப்பும் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பும், பிரெஞ்சுகாரர்கள் கிழக்கிந்திய கம்பெனியினர் உதவியை நாடினர். இதை நல்வாய்ப்பாக பிரெஞ்சுகாரரும், கிழக்கிந்திய கம்பெனியும் பயன்படுத்திக் கொண்டனர். சந்தாசாகிப்பை பிரெஞ்சுகாரர்கள்; ஆதரித்தனர். ஆன்சாடு நவாப்பை கிழக்கிந்திய கம்பெனியினர் ஆதரித்தனர். மோதலில் சந்தாசாகிப் கொல்லப்பட்டார். ஆந்தாடு நவாப் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு உதவிய கிழக்கிந்திய கம்பெனிக்கு கைமாறாக, மதுரை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல பாளையங்களில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றனர்.

கிழக்கிந்திய கம்பெனி வெற்றிக்கு மருதநாயகம் முக்கியமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத நாயகம் சந்தாசாகிப் கொல்லப்படுவதற்கு முன் பிரெஞ்சு ஆதரவாளராக இருந்தவர் என்பதும் நாம் மறக்க கூடாது. கம்பெனி அரசு மதுரை உள்ளிட்ட பாளையங்களின் வரிவசூல் செய்யும் அதிகாரியாக மருத நாயகத்தை நியமனம் செய்தது.

மருத நாயகம் சிறு படையைக் கொண்டு அதிரடியாக போர் நடத்தி வெற்றி ஈட்டுவதில் திறமைசாலியாக இருந்தான். இதனால் கம்பெனி அரசில் முக்கிய தளபதியாக மருத நாயகம் புகழ்பெற்றான். அவருக்கு கம்பெனி அரசு காமாண்டோ கான் எனும் சிறப்பு பெயரையும் அளித்தது. மருத நாயகம் மேலும் மேலும் புகழ்பெற பூலித்தேவனை அழித்தது பாளையங்கோட்டை, எட்டயபுரம் பாளையத்தின் தளபதியான கட்டலாங்குளம் வீரன் அழகுமுத்துக் கோன் மற்றும் அவருடன் இணைந்து போரிட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களை பீரங்கி வாயில் கட்டி வைத்து பீரங்கயை வெடிக்கச் செய்து பலரைக் கொன்றார்.

மருது பாண்டியர்களின் பேரறிக்கையும் அதன் அரசியலும் – இளஞ்சென்னியன்
120/-
Buy Link: https://heritager.in/product/marudhu-pandiyargalin-perarikkaiyum-adhan-arasiyalum/

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்