இந்தியாவின் முதல் இராம பரிவாரம் :
இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பண்டைய நடுநாட்டுத் தலமான திருக்கோவலூர், பல்லவர் காலந்தொட்டுப் புகழ் பெற்றிருந்த சைவ வைணவப் பதியாகும். இங்குள்ள சைவப் பெருங் கோயிலான வீராட்டனேசுவரர் கோயில், அப்பர். சம்மந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற பெருமையுடையது. அட்டவீரத் தலங்களுள் ஒன்றாக அந்தகாசுர வதம் நிகழ்ந்த இடமாக அறியப் படுவது.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட பதியாகவும் இது கருதப்படும். சேதி நாட்டுத் திருக்கோ வலூ ராக பெரியபுராணத்தில் சேக்கிழார் இதனைக் குறிப்பிடுகிறார். சோழர் காலத்தில் மலையமான்கள் இவ்வூரை ஆண்டு வந்தனர். அக்குலத்தில் பிறந்த வானவன் மாதேவியே முதலாம் இராஜராஜரின் தாயார் ஆவார். ‘புலியைப் பயந்த பொன்மான்’ என்று அவரைக் குறிப்பிடும் அகவற்பா கல்வெட்டு இன்றும் கோயிலில் உள்ளது.இப்போது கற்றளியாக உள்ள கட்டுமானம் முதலாம் இராஜராஜர் காலத்தைச் சேர்ந்தது என்பதை க் கல்வெட்டுகள் மற்றும் கட்டுமானக் கூறுகள் கொண்டு தெளியலாம்.
கோயில் விமானம் மற்றும் மண்டபத்தின் தூண் பாதங்களில் குறுஞ்சிற்பக் காட்சிகள் வடிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் சூர்ப்பனகை மூக்கறுப்பு, அகலிகை சாப விமோசனம், வாலி சுக்ரீவன் மோதல், வாலியை இராமன் மறைந்திருந்து தாக்குவது, வாலியின் மரணம், இராமன் அனுமனுக்கு அடையாள மோதிரம் அளித்தல் உள்ளிட்ட பல இராமகதைக் காட்சிகளும் அடக்கம். இச்சிற்பங்களுள் ஒன்றில்தான் இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமனுடன் இணைந்து நிற்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சி பல்வேறு சோழர் கோயில்களிலும் ஐம்பொன் மூர்த்தங்களாக வடிக்கப்பட்ட இராம பரிவாரக் காட்சியாகும்.
பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக்காலம் 4ம் நூற்றாண்டிலிருந்தே இராமகதை சிற்பத் தொடர்கள் காணக் கிடைத்தாலும் தென்னி ந்தி யாவில் 6ம் நூற்றாண்டு முதல் சிற்பவடிவில் இராமகதை தொடர்ந்து சித்தரிக்கப்பட்டாலும், இராமன், சீதை, இலக்குவன் அனுமன் ஆகிய நால்வரையும் ஒருசேர இணைத்து இராமபரிவாரமாகக் காட்டும் காட்சியை மட்டும் காணவே முடியவில்லை. இராமனின் கதையைச் சிறப்பு மிகுந்த சிற்பத் தொடர்களாக வடித்துள்ள முற்சோழர் கோயில்களில்கூட இத்தகைய காட்சி ஒரு முறை கூட இடம் பெறுவதில்லை என்பது கருதத்தக்கது. இந்தப் பின்னணியில் திருக்கோவலூரின் குறுஞ்சிற்பம் தேசிய அளவில் தொன்மையான இராமபரிவாரக் காட்சியாக சிறப்பிடம் பெறுகிறது.
சிற்பத்தில் நடுநாயகமாக த்விபங்க நிலையில் நிற்கும் இராமன். அவனது வலக்கரம் கடகம் காட்ட, இடக்கரம் உயர்ந்த வில்லை ஏந்தியுள்ளது. இராமனுக்கு வலப்புறம் கையில் மலருடன் தேவி சீதை. இடப்புறம் கைகள் கட்டிய நிலையில் இலக்குவன். இராமனின் பாதங்களுக்கு அருகில் அவனது முழங்கால் உயரத்தில் வானர ரூப அனுமன். பாரதமெங்கிலும் இன்று நாம் பரவலாகக் காணும் இராம பரிவாரத்தின் வடிவத்தைக் கல்லில் சித்தரிக்கும் தொன்மையான பழஞ்சிற்பம் இதுவே.
இதற்கு முந்தைய சிற்பத் தொடர்கள் எவற்றிலும் இடம் பெறாத இக்காட்சி, இராஜராஜர் காலக் கோயிலில் ஏன் இடம் பெறவேண்டும்? என்கிற முக்கியக் கேள்வி இங்கு எழுகிறது.
ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் துவங்கிவிட்ட இராமன் வழிபாட்டு மரபு, பத்தாம் நூற்றாண்டி, சோழர் காலத்தில் மேலும் எழுச்சி பெற்றது. இந்த வழிபாட்டில் இராமனுடன் சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் இணைந்த காலமும் இதுவே. மிக முக்கியமாக இம்மரபில் அனுமன் இணைந்ததை அறிவிக்கும் கல்வெட்டுச் சான்றும் உள்ளது.
ஆக, பத்தாம் நூற்றாண்டில் புகழ் பெறத் துவங்கிய பரிவாரத் தொகுதியையே சோழச் சிற்பி இங்கு குறுஞ்சிற்பக்காட்சியாக வடித்துள்ளார். தமிழகத்தின் இராமன் வழிபாட்டு மரபு அடுத்த அத்தியாயத்தில் மேலும் விளக்கம் பெறும் .
அயோத்திப் பெருமாள் -கோகுல் சேஷாத்ரி
விலை: 400 /-
Buy this book online: https://www.heritager.in/product/ayodhi-perumal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/