கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும் :
கோட்டையாகிய நகரத்தின் வழிகளும், தெருக்களும், கோட்டையின் அமைப்பினைப் பாகமாகவும் அதன் பதமாகவும் பிரித்துக்கொள்ளவேண்டும் என்று மயன் குறிப்பிட்டுள்ளார். நகரங்களில் அமையும் தெற்கு-மேற்கு வழியானது 12, 10, 8,6,4, அல்லது 2 என்று இரட்டைப்படையாக அமைந்தும், அவ்வாறே தெற்கு- வடக்கு வழிகள் இரட்டைப்படையில் அமைந்திருக்கக் கூடியதாகவும் 11,9,7,5,3 அல்லது 1 என ஒற்றைப்படையிலான வழித்தடங்களைக் கொண்ட அமைப்பாக இருப்பினும் யுக்மபதம், அயுக்மபதத்தில் பிரம்ம அம்சத்தில் 1,2,3 அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருப்பதும் முறையாகும் எனக்கோட்டை நகரத்தின் வழித்தடங்களின் அமைவியலைப்பற்றி மயன் சுட்டுகிறார்.
தண்டகம் :
நகரத்தின் மையத்தில் தண்டகாரமாக ஒரே வழி அமைந்திருப்பின் அவ்வழித்தடமானது தண்டகம் என்று அழைக்கப்படும். இதன் நடுவில் வடக்குமுகமாக மற்றொரு வழி அமைக்கப்பட்டிருந்தால் அதற்குக் கர்தரி தண்டகம் என்று பெயர்.
பாஹுதண்டகம் :
மையத்தில் கிழக்கு மேற்கில் இரண்டு குருவழிவுத்தமங்கள் கற்களால் அமைக்கப்பட்டிருந்தால் அதற்கு பாஹுதண்டகம் என்று பெயர்.
குடிகாமுக தண்டகம் :
நான்கு திசைகளிலும் நான்கு வழித்தடங்கள் அமையப் பெற்றதாகவும் வீதிகளில் மையப்பகுதிகளில் இருபுறங்களில் குறுந்தெருக்களாகிய பாதைகளையும் கொண்டுள்ளதாகவும் பிற தண்டகத்தில் வடிவமைப்புகளையும் பொருத்தியிருப்பின் அக்கோட்டை நகரமானது குடிகாமுக தண்டம் GT GST அழைக்கப்படுகிறது.
கலகாபந்த தண்டகம் :
கிழக்கு திசை நோக்கிச் செல்லும் மூன்று வழித்தடங்களும் வடக்கு திசைநோக்கி மூன்று வழித்தடங்களும் உள்ள அமைப்பானது கலகாபந்த தண்டகம் என்று மயன் குறிப்பிடுகிறார்.
வேதிபத்திரம் :
கிழக்கு மேற்காகச் செல்லும் மூன்று வழிகளையும் தெற்கு வடக்காகச் செல்லும் மூன்று வழித்தடங்களையும் அவ்வழித்தடங்கள் ஒன்றுடன் ஒன்று குறுக்காகக் கல்லால் இணைக்கப்பட்டிருப்பின் அவ்வடிவமைப்புக்கு வேதிபத்திரம் என்று பெயர். இவ்வகை அமைப்பே நகரமைப்பில் சிறந்ததெனச் சுட்டப்படுகின்றது.
சுவஸ்திகம்
கிராமத்திற்கும் நகரத்திற்கும் உரிய சுவஸ்திகமாக அமையும் வழித்தடங்களைக் கொண்ட அமைப்பும் பெறப்படுவதாகும். கிழக்குமுகமாக ஆறு வழிகளும் வடக்கு முகமாக ஆறு வழிகளும் அமைக்கப்பட்டும் சுவஸ்திக வடிவமைப்பில் வழித்தடங்கள் கூறப்பட்டுள்ளதைப் போலவே அமைந்திருந்தால் அது சுவஸ்திகம் என்றழைக்கப்படும்.
பத்திரம் :
கிழக்கு மேற்கில் நான்கு தெருக்களும் தெற்கு வடக்கில் நான்கு வீதிகள் அமைக்கப்பட்டும் மையப் பகுதியாகிய பிரம்ம பாதத்தினைச் சுற்றிலும் ஒரு வீதி அமைந்திருப்பின் அந்நகரமைப்பினைப் பத்திரம் என்று மயன் குறிக்கிறார்.
பத்திரமுகம் :
கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து வீதிகளுடனும் வடக்குத்திசை நோக்கிச் செல்லும் ஐந்து வீதிகளும், குறுந்தெருக்களால் இணைக்கப்பட்டிருக்கும் வடிவமைப்புடைய ஐந்து வீதிகளின் வடிவமைப்பில் அமைவது பத்திரமுகமாகும்.
பத்திர கல்யாணம் :
கிழக்கு மேற்கில் ஆறுவீதிகளும் தெற்கு வடக்கில் ஆறு வழிகளும் அவற்றிடையே குறுந்தெருக்கள் பல உள்ளவாறு அமைக்கப்பட்டிருப்பின் அந்நகரத்திற்குப் பத்திர கல்யாணம் என்று பெயர்.
மகாபத்திரம் :
ஏழு வீதிகள் கொண்ட கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு, வடக்குப் பாதையும் உள்ள வடிவமைப்பில் நகரமும் அமைந்திருந்தால் அதற்கு மகாபத்திரம் என்று பெயர்.
சூபத்திரம் :
எட்டுவீதிகள் கிழக்கு மேற்காகவும் தெற்கு வடக்காகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தும் அதில் 12 வழிகள் குறுந்தெருக்களுடன் அமைந்திருப்பின் அந்நகரமைப்பு சூபத்திரம் என்று அழைக்கப்படும்.
ஜயாங்கம் :
ஒன்பது வழிகள் வீதம் கிழக்கு மேற்காகவும் தெற்கு
வடக்காகவும் அமைந்திருந்தும் அவ்வீதிகள் சந்துகளுடனும் அச்சந்துகள் குறுஞ்சந்துகளுடனும் அரண்மனைக் கட்டடங்களுடன் இருப்பது ஜயாங்கம் என்று மயனால் பெயரிடப்பட்டுள்ளது.
விஜயம் :
பத்துத் தெருக்கள் கிழக்கு மேற்கிலும் தெற்கு வடக்கிலும் அமைக்கப்பெற்றும் அரண்மனைக் கட்டடங்களுடனும் குறுந்தெருக்களாகிய சந்துக்களும் அமைந்திருக்கும் நகர வடிவமைப்பிற்கு விஜயம் என்று மயன் சுட்டுகிறது. (நூலிலிருந்து)
நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு – முனைவர் ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன்
விலை: 300/-
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை
Buy this book online: https://heritager.in/product/nilaviyal-nokkil-gangai-konda-chozhapuram-varalaaru/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers