திருமலையின் கலையார்வம்

திருமலையின் கலையார்வம் :

இப்புது மண்டபத்தைக் கட்டியவர் சிற்பி சுமந்திர மூர்த்தி ஆசாரி ஆவார்.

இந்த கட்டிடத்தைக் கட்டும்போதுநடந்த சுவையான சம்பவம் ஒன்று.

ஒரு நாள் சுமந்திரமூர்த்தி ஆசாரி, ஓர் உருவத்தைச் செதுக்குவதில் ஓய்வு ஒழிவு இன்றி வேலை பார்த்து வந்தார்.

அதே நேரத்தில் வெற்றிலை பாக்குப் போடுவதிலும் ஓய்வு ஒழிவு இன்றி கருத்தூன்றி வந்தார். அதற்கு உறுதுணையாக பையன் ஒருவனை கை வேலைக்கு வைத்திருந்தார்.

அடிக்கடி ஆசாரி வெற்றிலை போடும் பழக்கம் உள்ளதால் ஆசாரிக்கு சிறுவன் வெற்றிலை பாக்கினை மடித்துக் கொடுத்து வந்தான்.

ஒருநாள் ஒரு வேலையாக வெளியில் சென்றிருந்தான்.

ஆசாரியே அப்பையனை அனுப்பியிருந்தார். உருவச்சிலையை அடித்துக் கொண்டிருந்தவருக்கு அப்பையனை வெளியில் அனுப்பியிருந்ததை மறந்து பின்னால் பார்க்காமல் கையை நீட்டிக்கொண்டே வெற்றிலை பாக்கினைக் கேட்டுவந்தார் ஆசாரி.

அந்த நேரத்தில் மண்டப வேலையைக் கண்காணிக்கும் பொருட்டுத் திருமலை நாயக்கர் அங்கு வந்திருந்தார்.

அரசர்,ஆசாரி வெற்றிலைப் பாக்குக் கேட்பதைக் கண்டு, வெற்றிலையைக் கிழித்துச் சுண்ணாம்பைத் தடவிப் பாக்கைப் பொடி செய்து சுருள் பண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆசாரியும் பையன்தான் வெற்றிலைப் பாக்கினை மடித்துக் கொடுக்கிறான் என்று எண்ணி வெற்றிலையை வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டே வேலையைச் செய்து கொண்டிருந்தார் ஆசாரி.

தற்செயலாகத் திடீரென்று ஆசாரியார் திரும்பிப் பார்த்தார். வெற்றிலையை மடித்துக் கொண்டிருந்தவன் சிறுவனல்ல. திருமலை மன்னர் என்றறிந்ததும் நடுநடுங்கினார் ஆசாரி.

‘ஐயோ! அரசரே! என்ன தவறு செய்து விட்டேன். தங்களை நான் வேலை வாங்கி விட்டேனே. தங்களிடம் வாங்கிய இரு விரல்களையும் இப்பவே துண்டித்து விடுகிறேன் என்று சொன்ன மாத்திரத்தில் தன் கையிலிருந்த சிற்றுளியால் இரு விரல்களையும் வெட்டி துண்டாக்கினார் ஆசாரி.

அதைக் கண்டு பதறிய மன்னரும், சிற்பியே! என்ன காரியம் செய்து விட்டீர் என்று சொல்லி வருந்தினார். அதே நேரத்தில அரச அன்பையும், உண்மைத் திறனையும் ஆசாரியாரிடம் கண்டு வெகுவாக பாராட்டினார்.

அத்தோடு

இரண்டு விரல்களையும் பொன்னால் செய்ய கொடுத்தார்.

இச்சம்பவம் திருமலை நாயக்கருக்கு இருந்த கலையார்வத்தைக் காட்டுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் ஒருவர் இப்புது மண்டபத்தை அரசர்களுடைய உருவச்சிலைகள் தெரியுமாறு படம் பிடித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் பகல் வேளைகளிலும் பலர் படுத்துறங்கிக் கொண்டிருந்ததை பார்த்தவர். ‘இது சத்திரம்’ என்று எண்ணி அடிக்குறிப்போடு புது மண்டபத்தில் எடுக்கப்பட்டபுகைப்படத்தின் கீழாக இது ஒரு சத்திரம் என அடிக்கோடிட்டுள்ளார்.

இப் புகைப்படத்தைச் சென்னைக் கோட்டைப் பொருட்காட்சிச் சாலையில் (F Chennai Fort Museum) காணலாம்.

திருமலை நாயக்கர் – குப்புசாமி
₹160

Buy Link : https://heritager.in/product/thirumalai-nayakkar/