கழுகுமலை வெட்டுவான் கோவில்

வடக்குப் பூலாங்குளம் :

கழுகுமலைப் பேரூருக்குத் தெற்கே, சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில், கழுகுமலை- தேவர்குளம் சாலைக்குக் கிழக்கே. வடக்குப்பூலாங்குளம் என்ற சிறிய கிராமம் இருக்கிறது. இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய வடிவிலான, சுமார் மூன்றடி உயரம் இரண்டடி அகலமுள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று.

ஆட்சியாண்டு குறிப்பிடப்படாத, பிற்காலப் பாண்டியர் கால உதிரிக் கல்வெட்டொன்று, இதே காலத்தைச் சேர்ந்த நந்தி சிற்பம் ஒன்று மற்றும் சிவலிங்கம் ஒன்று ஆகியவைகளை இந்நூலாசிரியர் தனது கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். ஊருக்கு மேல்புறம் ஊரையொட்டி குளமொன்று இருக்கிறது. குளத்தின் அக்கரையில், தனியார் நிலத்தில் சமணதீர்த்தங்கரர் சிற்பம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. அருகில் ஒரு கிணற்றருகே.

ஆறுவரிகளைக் கொண்ட உதிரிக் கல்வெட்டொன்றும் நட்டு வைக்கப்பட்டிருக்கிறது.இவைகளுக்கு வடக்கே. சுமார் நூறு அடி தூரத்தில் நந்தி சிற்பமொன்று நட்ட நடுக்காட்டில் கிடக்கிறது. இவ்விடத்தில் சிவன் கோயில் இருந்து அழிந்து போனதற்கான தொல்லியல் தடயங்கள் தென்படுகின்றன. இச்சிவன்கோயிலில் இருந்த கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட சுற்றுச் சுவர் கற்கள் ஊருக்குத் தென்புறம் உள்ள ஒரு கிணற்றின் சுற்றுச்சுவர்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள கலிங்கலில் சிவலிங்கம் ஒன்று கலிங்கல்கல்லாக நட்டு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வூர்ப்பகுதியில், பழமையான முதுமக்கட் தாழிகள் இருந்து, அதன் முக்கியத்துவம் தெரியாது உடைத்தெறியப்பட்டுள்ளன. எனவே. இவ்வூரில் பழமையான சிவன் கோயில் ஒன்றும், திருமால் கோயிலொன்றும் இருந்து அழிந்து போனது இக்கல்வெட்டுக்களின் வாயிலாக. நந்தி சிற்பத்தின் வாயிலாகத் தெரிய வருகிறது.

வடக்குக் கோனார்கோட்டை கழுகுமலைக்குத் தெற்கே. சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வடக்குக் கோனார்கோட்டை என்ற கிராமத்தில், பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த, தரைமட்டமாக சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயில் ஒன்றும்அக்கோயிலில் இடம்பெற்றுள்ள பழமையான சிவலிங்கம் மற்றும் நந்தி போன்ற சிற்பங்களும் இக்கோயிலைச் சேர்ந்த நியாய பரிபாலனத் திருமடம் ஒன்று இயங்கி வந்ததற்கான தூண் கல்வெட்டும் இன்னும் ஏராளமான இக்கோயிலைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இந்நூலாசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.(நூலிலிருந்து)

கழுகுமலை வெட்டுவான் கோவில் – செ.மா.கணபதி
விலை: 250 /-
வெளியீடு:
Buy this book online: https://www.heritager.in/product/kazhugumalai-vettuvan-kovil/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers